தங்கத்
தடாகத்திற் கெழிலூட்டும்
தாமரைப்பூ
போல - என்
அங்கத்தினுள் பூத்திருக்கும்
ஆருயிர் நட்பே! வணக்கம்.
வியத்தகு
விக்ருதி வருடம்
உயர்மிகு ஆவணித் திங்கள் 13ஆம் நாள்(29.08.2010)
நலம்
மல்கு ஞாயிற்றுக் கிழமை
கதிரெழு நற்காலை 6.00 -7.30 மணிக்குள்
திருமுதுகுன்றத்திலுள்ள (விருத்தாச்சலம்,ஆலடி ரோடு)
ராஜலெட்சுமி திருமண மண்டபத்தில்....
பண்ருட்டி
சரஸ்வதி நகர்வாழ்
ர.கண்ணன்-கலைச்செல்வி இவர்களின்
பைங்கொடிப் பாவை, முகநகைப் பூவை
க.செங்கமலத்தாயார் எம்.எஸ்சி.,பிஎட்., என்ற
மங்கலச் செல்விக்கும் எனக்கும்- நடைபெறும்
குங்குமத் திருவிழாவிற்கு - தாங்கள்
தங்கள்
சுற்றத்துடன்
வருகை தந்து வாழ்த்திட வேண்டுகிறேன்
என்றும் நட்புடன்
கே.வெங்கடேசன்.எம்.ஏ.,எம்பில்.,பிஎட்.,
ஆசிரியர் பயிற்றுநர்(வட்டார வள மையம் , புவனகிரி)
கே.பூவனூர்
திருமண அழைப்பிதழை அழகிய தமிழில் உருவாக்கவேண்டும் என்ற வேட்கை இன்று பலருக்கும் ஏற்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியதாகும்.
இனிய தமிழில் திருமண அழைப்பிதழை வடிவமைத்த அன்பு நண்பர் கே.வெங்கடேசன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுதலையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்புடைய இடுகை
நண்பர் கே.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி.... (த.ம. 2)
வருகைக்கு நன்றி அன்பரே.
நீக்குவணக்கம் முனைவரே..
பதிலளிநீக்குமங்கள நாண்பூட்டி
இல்லறம் புகுகையில்
அதற்கான அழைப்பிதழ் வடிவத்தை
நெஞ்சில் கொண்ட பல கற்பனையுடன் வடிப்பார்..
இங்கே அதற்கான ஒரு சாட்சியத்தை எமக்கு
பகிர்ந்தமைக்கு நன்றிகள் முனைவரே..
நன்றி அன்பரே.
நீக்குசிறப்பான பகிர்வு! தமிழ் இனித்தது! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணிக் கட்டுரை! அறிஞகளின் பொன்மொழிகள்!
http://thalirssb.blogspot.com.
நன்றி அன்பரே.
நீக்குதமிழர் அனைவருக்கும் தமிழ் பிடிக்கும்.
பதிலளிநீக்குஆனால் அதை எப்படி செய்தால் நல்லது என்று தான் நிறைய பேருக்குத் தெரியவில்லை.
நீங்கள் நல்ல வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.
நன்றிங்க முனைவர் ஐயா.
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அரோனா
நீக்குhii.. Nice Post
பதிலளிநீக்குThanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in
நன்றி ஸ்வீடி
நீக்கு