வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

வருமுன் காப்போம்.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
                                                                              திருக்குறள்-435

சாலையைக் கடக்கும்பொழுதுகளில் எவ்வளவோ காட்சிகளைக் காண்கிறோம். அவையெல்லாம் நம் மனதில் பதிவதில்லை.

மனதில் பதிந்த சாலைப்பாதுகாப்பு குறித்த சில விழிப்புணர்வளிக்கும் சிந்தனைகள்...


ஓட்டுநரின் தூக்கம்
ஒட்டுமொத்த மக்களின் துக்கம்


பார்த்துசென்றுவா ரோட்டில்
உன் மனைவி காத்திருப்பாள் வீட்டில்

சாலையில் தடுமாற்றம்
வாழ்க்கையில் ஏமாற்றம்


போதையில் சென்று வாழ்க்கைப்
பாதையில் மாறிவிடாதே

குறைவான வேகம்
நிறைவான பயணம்

உலகிலேயே விலைமதிப்புமிக்கது உயிர்

சாலையைப் பார்த்தால் பயணம்
சேலையைப் பார்த்தால் மரணம்

சிவப்பு விளக்கை மதித்தால்
இரத்தம் சிந்துதலைத் தவிர்க்கலாம்


20 கருத்துகள்:

 1. சேலையைப் பார்த்தால் மரணம்
  கொஞ்சம் நெருடுகிறது

  பதிலளிநீக்கு
 2. நல்ல கருத்துகள்! நன்றி முனைவரே!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. உலகிலேயே விலை மதிப்பு மிக்கது மனித உயிர்-இதை நாம் ஒவ்வொருவரும் வாகனம் ஓட்டுகையில் நிமிடத்திற்கு நிமிடம் நினைத்துக்கொள்ள வேண்டும். நன்றி நல்ல பகிர்வுக்கு (TM 6)

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு! விழிப்புடன் இருப்போம்! விபத்தை தவிர்ப்போம்!

  பதிலளிநீக்கு
 5. நல்ல கருத்துகள். வாகனம் ஓட்டும் அனைவரும் பின்பற்றினால் நல்லது.

  பதிலளிநீக்கு
 6. நல்ல நல்ல கருத்துக்கள் முனைவர் ஐயா.

  பதிலளிநீக்கு
 7. really a great social conscious mr. guna... this kind of mind is a rare quality.. keep it up. thanks

  பதிலளிநீக்கு
 8. வாகனங்களைப் போலவே விபத்துகளின் எண்ணிக்கையும் பெருகி வரும் நிலையில், ஓட்டுநர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகளைத் தாங்கள் தொகுத்துத் தந்திருப்பது வரவேற்கத் தக்கது.

  பாராட்டுகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மதிப்புரைக்கும் நன்றி முனைவரே

   நீக்கு