Sunday, September 8, 2013

உலக எழுத்தறிவு நாள்


எண்ணெழுத்து இகழேல் (கணிதத்தையும், அறநூல்களையும் இகழ்ந்து கற்காமல் விட்டுவிடாதே!

ஓதுவது ஒழியேல் (நல்ல நூல்களைக் கற்பதை ஒருபோதும் விட்டுவிடாதே)
என்று அன்றே ஔவையார் எழுத்தறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.

இன்று லக எழுத்தறிவு நாள்.  (செப்டம்பர் 8)
இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
கற்கை நன்றே; கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
என்பார் அதிவீரராமபாண்டியர்.
காலம் போகிற போக்கைப் பார்த்தால் பிச்சையெடுத்துத்தான் குழந்தைகளைக் கல்விச்சாலைகளில் சேர்க்கமுடியும் போல இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் நாம்தான். ஆம் நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளின் திறமின்மையே இன்றைய கல்வி தனியாரிடம் சிக்கி வியாபாரப் பொருளாகிவிட்டதற்கு முழுமுதற் காரணமாகும்

எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குத் தேவையான கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு இதெல்லாம் பார்ப்போம் ஆனால் அரசியலுக்கு மட்டும் இப்படி எதுவுமே பார்ப்பதில்லை. துறைசார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் அமைச்சராகமுடியும் என்ற அவலம் இருக்கும் வரை கல்வியில் ஒரு சமூகம் தன்னிறைவடைவது என்பது வெறும் கனவுதான்.

இனிமேலாவது இலவசங்களை மறுத்து நல்ல படித்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தேடுப்போம்இலவசமாக அரசிடமிருந்து நாம் எதுவும் வாங்குவதாக இருந்தால் அது கல்வியாக 
மட்டுமே இருக்கட்டும். 

12 comments:

 1. எல்லோரும் கல்வி கற்று விட்டால் ஏமாற்ற முடியாதுன்னுதான் இலவசங்களை அள்ளி இறைக்கின்றன அரசுகள் !

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் புரிந்துகொண்ட உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது ஆவல் நண்பரே.

   Delete
 2. சிறப்பான எண்ணங்கள் நிறைவேற வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 3. ஆணி வேரைத்தொடும் அருமையான வாசகம்
  கல்வி மட்டும் இலவசமானால் நிச்சயம் எல்லாம்
  சீர்ப்பட்டுப்போகும்.மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 4. (h)

  நம் நாடு வல்லரசாகிட
  உலக எழுத்தற்வு தினத்தை
  ஊக்கமுடன் வரவேற்போம் ..வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

   Delete
 5. நம் நாட்டைப் பொருத்தவரை அடிப்படைக் கல்வி இலவசமாகவே வழங்கப் படுகிறது. கல்வி உரிமை சட்டமும் அதற்கு துணை நிற்கிறது. ஆனால் வறுமை குழந்தைகள் பள்ளிக்கு வருவதை தடை செய்கிறது. நிச்சயம் இந்த நிலை மாறும்.
  சமூக அக்கறை காட்டும் பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 6. வணக்கம்
  குணசீலன்(சார்)

  நிகழ்வை நினைவுபடுத்தி தரவுகளை அழகாக பதிவு செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரூபன்.

   Delete