வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 7 ஜூலை, 2010

தமிழ்தோட்டத்துக்கு வாங்க..


கருத்துச்சுதந்திரம் நிறைந்தது இன்றைய உலகம். நமது கருத்தை பூமிப்பந்தின் பல்வேறு திசைகளிலிருப்பவர்களுக்கும் சில மணித்துளிகளில் எடுத்துச்செல்ல இன்றைய தொழில்நுட்பம் பயன்படுவதாகவுள்ளது.

இணையம் - வலையுலகம் இவ்விரண்டும் இன்றைய தகவல்தொடர்பின் இரு பெரும் வாயில்களாகவுள்ளன.

வலையுலகம் இணையத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்துவருகிறது.

வலைப்பதிவர்களின் கருத்துக்களை தமிழிஷ் , தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி என பல்வேறு திரட்டிகளும் தொகுத்துத் தருகின்றன. இந்த திரட்டிகள் ஒவ்வொன்றும், மறுமொழிகளைத் திரட்டித்தருதல், விருது தருதல், இந்த வார நட்சத்திரம், பிரபல இடுகை எனப் பதிவர்களை ஊக்குவிக்க பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன.

தமது இடுகை பிரபல இடுகையாகவோ, அதிக ஓட்டுகளைப் பெற்ற இடுகையாகவோ, அதிக கருத்துரைகளைப் பெற்ற இடுகையாகவோ ஆனால் போதாது தமது கருத்து பலரால் விவாதிக்கப்பட வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?

அப்படியென்றால் உங்களைத் தமிழ்த்தோட்டத்துக்கு வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன்..


(இத்தளம் செல்ல “தமிழ்த்தோட்டம்“ இங்கு சொடுக்கவும்)


கவிதைப் பூக்கள், நகைச்சுவை, இன்றைய எஸ்எம்எஸ், பொன்மொழிகள், கதைகள், இலக்கியக்கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள், பாடல்கள், புத்தக மதிப்புரை, கணினித் தகவல்கள், யோகா, உடற்பயிற்சி எனப் பல்வேறு துறைகளில் உங்கள் கருத்துக்களை முன்வைத்து விவாதத்தில் பங்குபெறலாம்.

இத்தளத்தில் தாங்கள் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி்க்கொள்ளவும். (இலவசமாகவே) பிறகு,தாங்கள் இந்த பயனர் கணக்கைக் கொண்டு உள்நுழைந்து,

தங்கள் படைப்புக்களின் வழி தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். இணைப்பில் உள்ளவர்களுடன் உரையாடலாம்(சாட்டிங்)
விவாதத்தில் பங்குபெறலாம்.

கலந்துரையாடவும் கருத்துக்களை உள்ளீடு செய்யவும எளிமையாக இத்தளம் வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகவுள்ளது.

16 கருத்துகள்:

 1. ரொம்ப அருமையான பகிர்வு. கண்டிப்பாக நான் அந்ததளத்துக்கு வருகைதருவேன்.

  சென்றுவந்தேன்.. நல்ல நல்ல பொக்கிஷங்கள். நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. முயற்சி செய்கிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு சார் ஆனால் நேரம் தான் பிரச்சினை

  பதிலளிநீக்கு
 5. இன்றுதான் அத்தளத்திற்கு சென்று வந்தேன். பிறகு பார்த்தால் உங்கள் பதிவிலும் அறிமுகம். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நமது தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்..

  பதிலளிநீக்கு
 7. @சசிகுமார் வருகைக்கு நன்றி சசி. ஒருமுறை சென்றுபாருங்கள்..

  இதற்கென நேரத்தை நீங்கள் ஒதுக்கிக்கொள்வீர்கள்

  பதிலளிநீக்கு
 8. @Tamilparks இது நான் தமிழ்மொழிக்குச் செய்யவேண்டிய கடமை நண்பா.

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள பேராசிரியருக்கு,
  இணையத் தொழில் நுட்பத்தில் கரை கண்டு வரும் தங்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.
  ஓர் ஐயம்.
  தங்கள் வலை மூலம் LINK WITHIN - YOU MIGHT ALSO LIKE பக்க இணைப்பை என்னுடையதற்குத் தந்திருந்தேன்.3 நாட்களாகியும் தொடர்புடைய இணைப்புக்கள் தெரியவில்லை.வேறு ஏதேனும் செய்தாக வேண்டுமா தெரியவில்லை.நேரமிருந்தால் கூறுங்கள்.அல்லது இதற்காக ஏன் ஒரு தனிப் பதிவையே நீங்கள் எழுதக் கூடாது.

  பதிலளிநீக்கு
 10. @எம்.ஏ.சுசீலா

  இந்த வலைமுகவரியில் தங்கள் சிக்கலுக்கான தீர்வு உள்ளது அம்மா.. http://vandhemadharam.blogspot.com/2010/07/link-within-related-post-widget.html

  பதிலளிநீக்கு