வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 20 ஜூலை, 2010

அறிவுள்ள நாய்!


ஒருநாள் சில பூனைகளும், ஒரு விவேகமான நாயும் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அந்த நாய் பூனைகளை நெருங்கி வருகையில், அவை அந்த நாயைக் கவனிக்காமல் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தன.

இந்தப் பூனைகள் கூட்டத்தில், ஒரு பூனை துனிச்சலுடன் எழுந்து பேசியது,

“சகோதரர்களே ……

எவ்வித சந்தேகமும் இல்லாமல் இறைவனை மீண்டும் மீ்ண்டும் வேண்டினால் நிச்சயமாக சுண்டெலிகள் மழையாகக் கொட்டும்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த நாய்,
தனக்குள்ளே சிரித்துக்கொண்டு ஒரு பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தது

” ஓ அறிவு கெட்ட குருட்டுப் பூனைகளே..

எனக்குத் தெரிந்தவரை, என் மூதாதையர்களுக்குத் தெரிந்தவரை பிரார்த்தனை மூலமும், வழிபாடுகள் மூலமும் சுண்டெலிகள் மழையாகப் பொழியாது…

மாறாக எலும்புகள் தான் மழையாகப் பொழியும்..


(கலீல் ஜிப்ரானின் இந்த தத்துவக்கதை ஒவ்வொருவரின் உலகத்தையும் அதில் அவர்களின் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பதாகவுள்ளது.)

20 கருத்துகள்:

 1. 'உன் அறிவுக்கு
  எட்டிய மட்டும் தான்
  உன்னால் மற்றவரைப் ப்ற்றி
  எடை போட முடியும்
  இப்போது சொல்
  எமக்கு!
  நம்மில் யார்
  குற்றவாளி!
  யார் நிரபராதி!'

  ஒவ்வொருவருக்கும் அவரது கண்ணோட்டம்.

  கலீல் ஜிப்ரானின் எளிமையான மிக அற்புதமான தத்துவத்தை மிக அழகாக பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

  அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி உமா.

  பதிலளிநீக்கு
 3. முனைவரே,

  அருமையான பகிர்வு. எழும்புகளா? அல்லது எலும்புகளா?

  ஸ்ரீ....

  பதிலளிநீக்கு
 4. சிந்திக்க வைக்கும் நகைச்சுவை.

  பதிலளிநீக்கு
 5. கலீல் ஜிப்ரானின் எளிமையான மிக அற்புதமான தத்துவத்தை மிக அழகாக பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 6. நல்ல கருத்து.. எடுத்துரைத்தமைக்கு நன்றி நண்பா..

  பதிலளிநீக்கு
 7. கலீல் ஜிப்ரானின் இந்த தத்துவம்..கம்ப ராமாயணத்தில்..மன்னிக்கவும்..தெரியவில்லை..ராவண வதம் முடிந்து,ராமர் சீதையுடன் திரும்பி செல்லும்போது,கிஷ்கிந்தை வருகையில்,’சீதையை பேரழகி என்று சொல்கிறார்களே..என்ன அழகு..வால் இல்லையே என்று வருத்தப் பட்டனவாம், வானரப் பெண்டிர்..!!!!

  பதிலளிநீக்கு
 8. பகுத்தறிவுள்ள நாய்..சரிதானுங்க.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் குணா

  கலீல் ஜிப்ரானின் கதை நன்று - பகிர்ந்தமைக்கு நன்றி

  நல்வாழ்த்துகள் குணா
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 10. @தாராபுரத்தான் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே..

  பதிலளிநீக்கு
 11. @cheena (சீனா) தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு