வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 2 ஜூலை, 2010

இந்தப் பணத்தை என்ன செய்வீங்க?வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஒரு கருத்தை எடுத்துச்சொல்வதற்காக மாணாக்கர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

உங்கள் கையில் ஒருலட்சம் ரூபாய் கொடுத்துவிட்டேன். இந்தப் பணத்தை வெச்சு உங்க வீட்டை நிறைவாக்க வேண்டும் அதற்கு என்ன செய்வீர்கள் ?

என்று கேட்டேன்.

மாணவன்-1 - வீடு முழுக்க மண்ணைக் கொட்டி நிறைத்துவிடுவேன்.
மாணவன்-2- வீடு முழுக்க குப்பையைக் கொட்டி நிறைத்துவிடுவேன்.
மாணவன்-3 - வீடு முழுக்க பொருள்களை வாங்கி நிறைத்துவிடுவேன்.

மாணவன்-4- நானே பணம் முழுவதையும் வைத்துக்கொள்வேன். வீட்டுக்கு ஒன்றும் செய்ய மாட்டேன். ஏனென்றால் வீடே காற்றால் தானே நிறைந்திருக்கிறது என்றான் ஒரு மாணவன்.

இப்படி எதிர்பாராத பதிலளித்துத் திகைக்கச் செய்தான் அந்த மாணவன்.

சரி கதைக்கு வருவோம்..


இப்படித்தான் ஒருமுறை தர்மனுக்கும், துரியோதனனுக்கும் போட்டி வைத்தார்களாம்..

துரியோதனன் தன்னிடமிருந்த பணத்துக்கு வீடு முழுக்க வைக்கோலை வாங்கி நிறைத்துவிட்டானாம்..

தர்மனோ ஒரு சிறிய விளக்கேற்றி வைத்தானாம். வீடு முழுக்க ஒளியால் நிறைந்ததாம்..

உளவியல் உண்மை.

வீடு என்பது மனம்..
வீட்டில் நிறைப்பதாக மாணவர்கள் சொன்னது அவர்கள் மனம் முழுக்க நிரம்பியிருப்பது என்பதை அவர்களுக்கு உணரச்செய்தேன்..

சரி இப்ப சொல்லுங்க..

இந்தப் பணத்தை வெச்சு நீங்க என்ன செய்வீங்க?

27 கருத்துகள்:

 1. செலவு பண்ணாதான் பணத்திற்கு மதிப்பு !!
  அதனால ஒரு லட்சத்தை செலவு பண்ணிடுவேன் ..

  பதிலளிநீக்கு
 2. ஒருலட்சம் ரூபாய் என் அகோன்ட் நம்பர் தருகிறேன் ஒரு லட்சம் அனுப்புங்க அண்ணா

  பதிலளிநீக்கு
 3. அது இருக்குங்க எக்கச்சக்க செலவு...

  இல்லை, நிச்சயம் வீட்டை நிறைக்கத்தான் பயன்படுத்த வேண்டும் என்றால், முழு வீட்டையும் என்னால் நிறைக்க முடியாது. முடிந்த மட்டும் புத்தகங்கள் வாங்கி விடுவேன்.

  பதிலளிநீக்கு
 4. //இந்தப் பணத்தை வெச்சு நீங்க என்ன செய்வீங்க?//

  பணத்தை கொடுக்காமல் என்ன செய்வீங்க என்று கேட்பது நியாயமா சார்?

  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. பணம் செலவு செய்ய வழியா இல்லை.
  அதுவும் ஒரு லட்சம் இந்தக் காலகட்டத்தில் தூசு போலப் பறந்துவிடுமே !

  பதிலளிநீக்கு
 6. முனைவரே...

  பணம் எவ்வளவு வந்தாலும் கடன் அதற்கு முன்னால் வந்து நிற்கும். ஆமா எப்ப பணம் தரப்போறீங்க..? எதிர்பார்ப்போட ஏகப்பட்ட செலவிருக்கு... பார்த்துக்கங்க.

  பதிலளிநீக்கு
 7. நிச்சயம் வீட்டை நிறைக்கத்தான் பயன்படுத்த வேண்டும் என்றால்
  முதலில் வீடு வாங்கணும்

  பதிலளிநீக்கு
 8. பேச்சே வேண்டாம்..முதல்ல பணத்த அனுப்புங்க..அப்புறமா பாருங்க என்னை??

  பதிலளிநீக்கு
 9. அத்தனையும் வைத்து அநியாயம் பன்றவங்க மேல கேஸ் போடுவேன்

  பதிலளிநீக்கு
 10. சுலப வழி மூலம் கிடைத்த பணம் சுலபமாக போய்விடும் . ஒரு லட்சம் ஒரு பணமா!

  பதிலளிநீக்கு
 11. தோழரே பணத்தை அனுப்புங்க அப்பறம் பாருங்க என்ன செய்யறேன்னு...

  பதிலளிநீக்கு
 12. ஒரு டவுட் சார்..
  அந்த 1 லட்சம், ரூபாயிலயா?.. இல்ல அமெரிக்கா டாலர்லயா?...

  பதிலளிநீக்கு
 13. @Thomas Ruban நான் நீங்க இப்படில்லாம் கேட்பீங்கன்னு எதிர்பார்க்கல நண்பா..

  பதிலளிநீக்கு
 14. @சே.குமார் வாங்க நண்பா எங்க வீட்டுக்கு வந்து வாங்கிட்டுப்போங்க..

  பதிலளிநீக்கு
 15. @senthil1426 நகைச்சுவையான உண்மை..
  உண்மையான நகைச்சுவை..

  பதிலளிநீக்கு
 16. @ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி பணத்தை அனுப்புனா அப்புறம் உங்கள பார்க்கவே முடியாது போல தெரியுதே..

  பதிலளிநீக்கு
 17. @திரவிய நடராஜன் உங்களை மாதிரி ஊருக்கு ஒருத்தரு வேண்டும் நண்பரே..

  நடக்குறதயெல்லாம் பார்த்துட்டு சும்மா போறவங்க மத்தியில நீங்க வித்தியாசமானவர்தான்..

  பதிலளிநீக்கு
 18. எனக்கு தெரியும் !
  எதற்காக அப்படி கேட்டீர்கள் என்று?
  நிச்சயமாக மாதா, பிதாவுக்கு அடுத்ததாக உள்ள
  குருவான உங்களுக்குத்தான் குருதட்சணையாக கொடுப்பேன் !
  பொறியாளர்.கணேசன்\கோயம்புத்தூர்

  பதிலளிநீக்கு
 19. எனக்கு தெரியும் !
  எதற்காக அப்படி கேட்டீர்கள் என்று?
  நிச்சயமாக மாதா, பிதாவுக்கு அடுத்ததாக உள்ள
  குருவான உங்களுக்குத்தான் குருதட்சணையாக கொடுப்பேன் !
  பொறியாளர்.கணேசன்\கோயம்புத்தூர்

  பதிலளிநீக்கு
 20. எனக்கு தெரியும் !
  எதற்காக அப்படி கேட்டீர்கள் என்று?
  நிச்சயமாக மாதா, பிதாவுக்கு அடுத்ததாக உள்ள
  குருவான உங்களுக்குத்தான் குருதட்சணையாக கொடுப்பேன் !
  பொறியாளர்.கணேசன்\கோயம்புத்தூர்

  பதிலளிநீக்கு