செவ்வாய், 26 அக்டோபர், 2010

சிரிப்பும் சிந்தனையும்.


விலங்குக் காட்சிச் சாலையில் புலியொன்று ஒரு மனிதனைக் கொன்றுவிட்டது.
புலியிடம் சென்று குரங்கு...

ஏன் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றாய் ? என்று கேட்டது.

அதற்குப் புலி சொன்னது...

3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....

“எவ்வளவு பெரிய பூனை“ என்று …

அதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

--------------------------------------------------------------------------------
உலகில் மனிதர்களை மூவகைப்படுத்தலாம்.
ஒன்று - மாறாதவர்கள்,
இரண்டு - மாறுபவர்கள்,
மூன்று - மாற்றுபவர்கள். ( அரேபியப் பழமொழி)

--------------------------------------------------------------------------------

சராசரி மனிதன் புத்தகத்தோடு இருப்பான்!
சாதனை மனதன் புத்தகத்தில் இருப்பான்!

-------------------------------------------------------------------------------
மனம் திறந்து பேசுங்கள்!
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்!
சிலர் புரிந்து கொள்வார்கள்!
சிலர் பிரிந்து செல்வார்கள்!

-----------------------------------------------------------------------------
மகிழ்ச்சி இருக்குமிடத்தில் நீங்கள் வாழ விரும்புவதைவிட
நீங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை இனிமையுடையதாக இருக்கும்!
----------------------------------------------------------------------------

ஒவ்வொரு மனிதனும் கண் பார்வையற்றவனாகிறான்..
தான் தவறு செய்யும் போதும்,
செய்த தவறை மறைக்கும் போதும்!
---------------------------------------------------------------------------

10 கருத்துகள்:

 1. மிகவும் அருமையான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 2. ஆமா எதுக்கு பூன படம் போட்டுருக்கிங்க?

  பதிலளிநீக்கு
 3. //ஒவ்வொரு மனிதனும் கண் பார்வையற்றவனாகிறான்..
  தான் தவறு செய்யும் போதும்,
  செய்த தவறை மறைக்கும் போதும்!//

  பளிச்சென்று உண்மையை போட்டுடைக்கும் வரிகள். நல்ல தொகுப்பு :)

  பதிலளிநீக்கு