வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

நீங்கள் விழித்துக்கொண்டே தூங்கியதுண்டா?



விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு என்ன தெரியுமா..?

மனிதன் தான் விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு!!

மாவீரன் நெப்போலியன் குதிரையில் செல்லும்போதே தூங்குவாராம். நாம் ஒவ்வொருவரும் இப்படித்தான் ஏதோ ஒரு சூழலில் விழித்துக்கொண்டே தூங்கிவிடுவோம். அதற்காக நாமெல்லாம் மாவீரர்கள் என பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடாது.

வகுப்பறையில் மாணவர்கள் விழித்துக்கொண்டே தூங்கிவிடுவதுண்டு. சாப்பாட்டு நேரமும், சாப்பாட்டுக்குப் பின்னான மாலை நேரமும் மாணவர்கள் தூக்கத்துடன் போராடும் காலங்களாகும். இவ்வேளையில் விழித்துக்கொண்டே தூங்குபவர்களைக் கண்டறிய நான் சில உளவியல் முறைகளைக் கையாள்வதுண்டு.

வழிமுறை – 1

மாணாக்கர்களே நான் இப்போது 1,2,3 என எண்ணியவுடன் கைதட்டுவேன் நீங்களும் என்னுடன் 3 முறை கைதட்டவேண்டும் என்பேன். அவர்களும் சரி என காத்திருப்பார்கள். நான்............ 1, 2 எண்ணிவுடனேயே கைதட்டிவிடுவேன். என்னுடன் சேர்ந்து விழித்துக்கொண்டே தூங்கும் சில மாணாக்கர்களும் சேர்ந்து தட்டிவிடுவார்கள்..

இதிலிருந்து நான் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வேன். பாவம் இவர்கள் செவி மட்டுமே கேட்கிறது. அந்தச் செய்தி அவர்களின் மூளைக்குச் சென்று சேரவில்லை என்பதை அவர்களுக்குப் புரியவைப்பேன்.
வழிமுறை – 2
நான் கேட்கும் எளிமையான கேள்விக்குப் பதிலளியுங்கள் என்பேன்.. (என்ன கேள்வி என்பார்கள்)

நான் 100 ரூபாய்க்கு நூல் வாங்கி நூற்றைம்பது (150) ரூபாய்க்கு விற்றால் எனக்கு இலாபமா? நட்டமா? என்பேன்..

சிலர் இலாபம் என்றும் சிலர் நட்டம் என்றும் சிலர் துயில்நிலையிலிருந்து வெளிவரவும் இதுபோன்ற எளிய வினா அடிப்படையாக இருக்கும்.

பின்..
100 ரூபாய்க்கு நூல் வாங்கி அதை நூற்று 50 ரூபாய்க்கு விற்றால் நட்டம்.
100 ரூபாய்க்கு நூல்வாங்கி அதை 150 ரூபாய்க்கு விற்றால் அது இலாபம் என்றும் அவர்களை விழிப்பு நிலைக்குக் கொண்டுவருவேன்.

(எனக்கு மின்னஞ்சலில் நல்ல எடுத்துக்காட்டு என்ற தலைப்பில் வந்த நகைச்சுவை)

இங்கும் ஒரு மருத்துவர் தம் மாணாக்கர்களுக்கு மருத்துவம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

உற்றுநோக்கல், புரிந்துகொள்தலின் இன்றியமையாமையை மாணவர்களுக்குப் புரியவைக்க எண்ணிய மருத்துவர்....

மாணவர்களே நன்றாகப் பாருங்கள்...

நான் நம் முன் மேசையில் உள்ள இந்த இறந்த நாயின் வாயில் விரலை வைக்கிறேன். பின் என் விரலை எடுத்து என் வாயில் வைத்துக்கொள்கிறேன்...

எங்கே நீங்களும் என்னைப் போலச் செய்யுங்கள் பார்க்கலாம் என்கிறார்..

மாணவர்களும் அவ்வாறே இறந்த நாயின் வாயில் தம் விரலை வைத்து அதே விரலை எடுத்து தம் வாயிலும் வைத்துக்கொள்கிறார்கள்.

மருத்துவர் சொல்கிறார் நீங்கள் நன்றாகக் கவணித்தீர்களா..?

நான் என்னசெய்தேன்..

எனது நடுவிரலை நாயின் வாயில் வைத்தேன்!
எனது ஆட்காட்டி விரலைத்தான் எனது வாயில் வைத்துக்கொண்டேன்!!

என்றதும் ஆடிப்போனார்கள் மாணவர்கள்....!!!!!!!!!


இப்படி நீங்கள் விழித்துக்கொண்டு தூங்கியதுண்டா..?
அப்படித் தூங்கியவர்களைக் கண்டறிந்த அனுபவமுண்டா..?
எனப் பகிர்ந்துகொள்ளுங்களேன்..

(பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான் என்பதை இவர்களுக்குப் புரியவைக்க என்ன பாடுபடவேண்டியிருக்கிறது..?)

10 கருத்துகள்:

  1. வழிமுறைகள்,எடுத்துக்காட்டு எல்லாமே அருமை.வயதான பின் அலுவலகப் பயிற்சி வகுப்புகளில் மதிய உணவுக்குப் பின் ஒரு தூக்கம் வரும் பாருங்கள்! அப்போது கண்ணை விழித்துக் கொண்டே தூங்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  2. @சென்னை பித்தன்உண்மைதான் தூக்கத்தை வென்றால் வாழ்வை வெற்றி கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா ஹா அருமையான கருத்தை காமெடியாக சொல்லி இருக்கீங்க சூப்பர்...

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான பதிவுங்க. ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. எங்க டீச்சர், எங்களை நிம்மதியாக தூங்க விட்டுட்டாங்க.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..

    பதிலளிநீக்கு
  6. நுட்பமாக ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தொட்டுக் காட்டி இருக்கிறீர்கள் நண்பரே.சில வேளைகளில் நம்முடய கற்பித்தல் கலையையே சந்தேகிக்கப் பண்ணி விடும் இது இல்லையா.:)

    வெளி நாடுகளில் தமிழ் கற்பிப்பது சற்றே சிரமம்.ஆங்கில பாணியில் தமிழை உச்சரிப்பார்கள். நாக்கு இலேசில் வளையாது.ஒரு வசனத்தில்,எங்கு எப்படி குரலை ஏற்றி இறக்க வேண்டும், மூச்சு எங்கே விட வேண்டும் என்பதை எல்லாம் விளக்க வேண்டி வரும்.

    வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் என்ன இன்று படிக்கப் போகிறோம் என்பதைச் சொல்லி விடுவேன்.சொல்லப் படுகின்ற விடயங்களில் ஒவ்வொரு key word இருக்கிறது.அதனைக் கண்டுபிடித்து உங்கள் மொழியில் எழுதிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வேன்.

    எதிர்பாராத விதமாகக் கேள்விகள் கேட்டுச் சரியாகப் பதில் சொல்பவருக்குப் சிறு பரிசுகள் அளிப்பேன்.அதன் காரனமாக அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

    பாடம் நடத்தும் போது உதாரணமாக மொட்டாக்கு என்ற சொல்லை விளக்க வேண்டி வந்தால், a க்கு மொட்டாக்கு போட்டால் அது @.தலையை மூடுவது என்று அதற்கு விளக்கம் அளிப்பேன்.

    வகுப்பு முடிவதற்கு 5 நிமிடம் முன்னால் ’உங்கள் இரண்டு மணி நேரங்களை விற்று, இன்று நீங்கள் பெற்றுச் செல்வது என்ன?’ என்று ஒவ்வொருவரையும் கேள்விகள் கேட்பேன்.

    ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு விடையாவது சொல்ல வேண்டும்.

    இவர்கள் ஆண்டு 10ல் தமிழ் படிக்கிறார்கள். மாலை 2 மணிக்கு பாடசாலை ஆரம்பமாகும்.

    உபயோகமான தகவல் குணா. சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது இவ்வாறான பதிவுகளையும் தாருங்கள். உபயோகமாக அது இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. @Chitra வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா

    பதிலளிநீக்கு
  8. @மணிமேகலா மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட, அனுபவமிக்க கருத்துரை நல்கியமைக்கு நன்றி மணிமேகலா..

    தங்கள் அணுகுமுறை எனக்கும் பாடமாக அமைகிறது..

    பதிலளிநீக்கு