வியாழன், 24 மார்ச், 2011

தத்துவக் கதை


பதறாத காரியம் சிதறாது!
கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!

என்பது நம் முன்னோர் அனுபவமொழி. இதே கருத்தை எடுத்துரைக்கும் தத்துவக் கதையொன்று....


“ஓர் இளைஞன் சிறந்த வாள் பயிற்சி பெறுவதற்காக குருவைத் தேடிப் புறப்பட்டான்.
வல்லமை வாய்ந்த குரு ஒருவர் மலைமீது இருப்பதாகச் சொன்னார்கள்.
இளைஞன் ஆவலோடு மலையேறிச்சென்று குருவைக் கண்டான். வணங்கினான். தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.

“குருவே, நான் கடினமாக உழைத்து தீவிரமாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு காலத்தில் வல்லமை பெற முடியும்?
என்று கேட்டான்.
“பத்து ஆண்டுகள் பிடிக்கும்“ என்றார் ஆசான்.

“என் தந்தை தள்ளாத வயதில் இருக்கிறார். நான் அவ்வளவு காலம் இங்கே தங்கியிருக்கமுடியாது. நான் சீக்கிரம் ஊர்திரும்பி அவரைக் கவனிக்கவேண்டும். மிகக் கடுமையாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியும்? என்று கேட்டான் இளைஞன்.

அநேகமாக முப்பது ஆண்டுகள் பிடிக்கலாம் என்றார் அவர்.

என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்..? முதலில் பத்து ஆண்டுகள் என்றுதானே சொன்னீர்கள். கடுமையாகப் பயிற்சி எடுத்தால் சீக்கிரம் முடிக்கமுடியுமல்லவா..? என்றான் அவன்.
“அப்படியா? அப்படிச் சீக்கிரம் கற்க வேண்டுமானால் சுமார் எழுபது வருடங்கள் என்கூட நீ இருக்க வேண்டிவரும்“ என்றார் குரு.

அவசரப்பட்டால், அகந்தையில், பதற்றத்தில், எந்தக் காரியமும் உரிய காலத்தில் ஒழுங்காக முடியாது.“

(நன்றி-மீண்டும் ஜென் கதைகள்-கவிஞர் புவியரசு)

12 கருத்துகள்:

 1. உண்மைதான் ஒரு காரியத்தினை எவ்வளவு நேரம் அமைதியாச்செய்கிறோமோ அதில் திருப்த்தியாக திறமையாக செய்துமுடிக்கலாம்

  நல்ல பதிவு

  http://hafehaseem00.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. பதறாத காரியம் சிதறாது முடியும்!
  நல்ல கதை!

  பதிலளிநீக்கு
 3. அருமையான கதையும் கருத்தும். பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 4. கடினமாகச் செய்வதைவிட கவனமாகச் செய்!!
  நல்ல கருத்து

  பதிலளிநீக்கு
 5. அவசரப்பட்டால், அகந்தையில், பதற்றத்தில், எந்தக் காரியமும் உரிய காலத்தில் ஒழுங்காக முடியாது.“
  அருமையான கருத்து.

  பதிலளிநீக்கு