சனி, 12 மார்ச், 2011

வயசு.. இளவயசு…!!


வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள்
அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!!

என்பது முன்னோர் அனுபவ மொழி.

எத்தனை வயது வரை வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே பயனுள்ள வாழ்க்கையின் அளவுகோளாகவுள்ளது.

தமிழிலே பேசவும், எழுதவும் பலர் இருக்கலாம் . இருந்தாலும் ஒரு சிலரின் எழுத்துக்களிலும் , பேச்சிலும் மட்டும் ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருப்பதுண்டு.

அப்படியொரு ஈர்ப்புள்ள..
உயிர்ப்புள்ள ஒரு கவிதையை எங்கள் கல்லூரி மாணவர் எழுதித்தந்தார்.
அறிவியல் துறைசார்ந்த அம்மாணவரின் தமிழ்ப்பற்றும், ஆர்வமும்
வரவேற்பிற்குரியதாகவும், தமிழ் பயிலும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் கொள்ளத்தக்கது.
வாழ்த்துவோம் வளரட்டும்.

வயசு.. இளவயசு…!!


பெத்தவங்க திட்டிப்புட்டா
கோபம் வரும் வயசு!
மத்தவங்க சொல்லிப்புட்டா
ரோசம் வரும் வயசு!
அறிவுரையக் கேட்டுப்புட்டா
காதடைக்கும் வயசு!
அங்க இங்க சுத்த நினைக்கும்
இளங்காற்று வயசு!
கல்விச் சாலைக்குப் போயிட்டு
கட்டடிக்கும் வயசு!
புத்தகத்தைப் பார்த்துப்புட்டா
எட்டி நிற்கும் வயசு!
நண்பர்களைப் பார்த்துவிட்டால்
கிண்டலடிக்கும் வயசு!
எண்ணமெல்லாம் எங்கெங்கோ
ஏணியேறும் வயசு!
கொட்டுகின்ற மழையோடு
ஆற்றில் குளிக்கும் வயசு!
சுட்டெரிக்கும் பரிதியோடு
பந்தாடும் வயசு!
அர்த்தமில்லாப் பேச்செடுத்து
தினம் உரையாடும் வயசு!
உணவெண்ணம் வாராது
ஊரைச்சுற்றும் வயசு!
வாகனங்கள் அனல் பறக்க
விரைந்தோட்டும் வயசு!
இளங்கன்று போலத் துள்ளி
ஓடியாடும் வயசு!
பலவழியில் குணமிழந்து
போகவைக்கும் வயசு!

வாழ்வுக்கும் வீழ்வுக்கும்
பாதை காட்டும் வயசு!!!!

கண் சிமிட்ட்ட்டும் நேரத்தில்
கரைந்தோடும் வயசு!!!!

அதனால் சீக்கிரமாய்
சிகரமேறி கொடி நாட்டு வயசே!!!!!!!ச.கேசவன்
இளங்கலை இயற்பியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.

8 கருத்துகள்:

 1. //வாழ்வுக்கும் வீழ்வுக்கும்
  பாதை காட்டும் வயசு!!!!
  //

  Super...

  Vazhththukal munaivaray...
  ungalukkum ungal manavarukkum...

  பதிலளிநீக்கு
 2. கண் சிமிட்ட்ட்டும் நேரத்தில்
  கரைந்தோடும் வயசு! அருமையான வரிகள் ச.கேசவன் நண்பனுக்கு பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 3. கண் சிமிட்ட்ட்டும் நேரத்தில்
  கரைந்தோடும் வயசு!!!! அருமையான வரிகள் ச.கேசவன் நண்பனுக்கு பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 4. வாழ்வுக்கும் வீழ்வுக்கும்
  பாதை காட்டும் வயசு
  அருமை
  வாழ்த்துகள் சக

  பதிலளிநீக்கு