திங்கள், 28 மார்ச், 2011

கணம் கணமாக வாழ (சென் கதை)கண் பார்வையற்றவர்கள் கூட இன்றைய சூழலில் புதிய கண்டுபிடிப்புகள் வழி காட்சிகளைக் காண முயல்கின்றனர். ஆனால் கண்பார்வையுடைய நாமோ...

கண்ணுக்கு முன்னால் துடித்துக்கொண்டிருக்கும் “நிகழ்காலத்தைக் காணும் சக்தியற்று” இருக்கிறோமே என பல முறை நான் வருந்தியதுண்டு..

புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் சீடர்கள், அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.
புத்தர் தம் சீடர்களை நோக்கி “ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார்.
எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“எழுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“அறுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்.
“தவறு“ என்றார் புத்தர்
“ஐம்பது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர்
“தவறு“ என்றார் புத்தர்.
இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள்.

சில வினாடிகள் அமைதியாக இருந்தார் புத்தர்.

பிறகு அவர் “அது ஒரு மூச்சு“ என்றார்!
“வெறும் மூச்சுவிடும் நேரம்தானா?” என்று கேட்டார் ஒரு சீடர்.
அப்படியல்ல.

வாழ்வு ஒரு கணமன்று.!
ஆனால் ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்.!
ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும்.!
கணம் கணமாக வாழவேண்டும்! என்றார் புத்தர்.
சிலர் நேற்றில் வாழ்கிறார்கள். நேற்றைய நினைவில் மூழ்கி இறந்தகாலத்தில் வாழ்கிறார்கள்.
சிலர் அறியப்படாத எதிர்காலத்தில், எதிர்காலக் கனவில், எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்கிறார்கள்.
அவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்.
எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற அந்தகர்களாக (கண்பார்வையற்றவர்களாக) இருக்கிறார்கள்.
கணத்திற்குக் கணம், நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும் என்பது சென் தத்துவம்.

13 கருத்துகள்:

 1. //வாழ்வு ஒரு கணமன்று.!
  ஆனால் ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்.!
  ஒவ்வொரு கணப்பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும்.!
  கணம் கணமாக வாழவேண்டும்!//

  Arumai... nalla pakirvu.

  பதிலளிநீக்கு
 2. நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 3. ஆம் இறந்த காலம் இறந்து விட்டது. அதைப்பற்றி இப்போது பேசுவதால் பயன் எதுவுமில்லை.

  அதுபோல எதிர்காலம் நிச்சயமற்றது. அதை நினைத்து நினைத்து மறுகுவதிலும், ஏங்குவதிலும், அருமையான அழகான நிகழ்கால்த்தின் இன்பத்தை இழந்து விடுவோம்.

  நிகழ்காலமே நிச்சயமானது. நம் கண்முன் இருப்பது. அதன் ஒவ்வொரு நொடியையும் ரசிப்போம். அதனோடு ஒன்றி வாழ்வோம். IT IS REALLY A GIFT. THAT IS WHY 'GIFTS' ARE ALSO BEING CALLED AS 'PRESENT'.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. தங்கள் புரிதலுக்கு நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

  பதிலளிநீக்கு
 5. இந்த இடுகை முழுவதையும் டாக்கிண் பண்ணி அருமை சேர், வொண்டர்புஃல் சேர் என்று கூற வேண்டும் போல உள்ளது. நன்றி. சகோதரா. இதற்கு மேல் என்ன கூறுவது என தெரியவில்லை வாயடைத்து நிற்கிறேன் மிகச் சிறந்த சென் கதை. ஒவ்வொரு கணமும் வாழ வேண்டுமென்பதை நெஞ்சில் நிறுத்துவோம். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 6. கணம் கணம் வாழ வேண்டும் அருமை. ஆனால் இன்றைய சூழலில் அனைவருமே கனம் கனம் என்று தான் வாழ்கிறார்கள்.

  வாழ்க்கை கனம் தான் கனத்தை தாங்கி கொண்டு கனவோடு பயணித்து கணம் கணம் பிறரின் மனதிலும் நமது வாழ்விலும் வாழ்ந்திடுவோம்..

  நன்றி அப்பா.

  பதிலளிநீக்கு