வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

பயணம் இது பந்தயமல்ல..



சாலை விபத்துக்களைப் பார்க்கும்போது பதறும் மனசு. சாலைவிதிமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்களைக் கண்டால் கோபம் கொள்கிறது...

ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது..
இவர்களை நாம் திருத்த முடியாது நாம் நம்மைத் திருத்திக்கொள்வதுதான் ஒரே வழி என்று..

நேற்று நண்பர்களுடன் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன்..
எங்களைக் கடந்து சென்ற ஊர்தியில் பின்னே...

“பயணம் இது பந்தயம் அல்ல“ என்று எழுதியிருந்தது.

என் நண்பரிடம் நான் சொன்னேன்..

எவ்வளவு அருமையாக விழிப்புணர்வளிக்கும்விதமாக எழுதியிருக்குன்னு பாருங்க என்றேன்..

அவர் சொன்னார்... உண்மைதான் ஆனால் அப்படி எழுதிவிட்டு அவன் ஏன் இவ்வளவு வேகமாக நம்மை முந்திக்கொண்டு பந்தயம் போலச் செல்கிறான் என்றார்..

இன்னொரு நண்பர்...

ஐயா இந்த விழிப்புணர்வு வாசகங்கள் எல்லாம் அவங்களுக்காக எழுதப்பட்டதல்ல..

பின்னால் வருபவர்களுக்கு மட்டுமே...

நம்மைப் போன்றவர்கள் பார்த்துப் படித்து விழிப்போடு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்குதான் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில் நடந்த நிகழ்வு தான் நினைவுக்கு வருகிறது..

அவர் ஒருமுறை விழாவுக்குச் செல்லும்போது காலதாமதமானதால் அவரின் ஓட்டுநர் விரைவாக ஊர்தியைச் செலுத்தினார். அப்போது கவிஞர் கேட்டார்...

ஏம்பா இவ்வளவு வேகமாப் போற என்று..

ஓட்டுநர் சொன்னார் ஐயா இவ்வளவு வேகமாச் சென்றால்தான் விழாவுக்கு சரியான நேரத்தில் கலந்துகொள்ளமுடியும் என்று..

அதற்கு கவிஞர்...

பத்து நிமிடம் காலதாமதமாகச் செல்லலாம்
பத்து வருடம் முன்னாடியே போயிடக்கூடாது..

அதனால் மெதுவாவே போ என்றாராம்..


தொடர்புடைய இடுகை

15 கருத்துகள்:

  1. சாலைப் பாதுகாப்பு வார சிறப்புப் பதிவு அருமை
    குறிப்பாக கவியரசு அவர்கள் சொன்ன வாசகம்
    அனைவரும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய ஒன்று
    அனைவருக்குமான எச்சரிக்கைப் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    பதிலளிநீக்கு
  2. Kannadhasan vaarthaigal marakka mudiyatha varigal. Azhagaana Pathivu Munaivare!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்.
    பாதுகாப்பில் நாம் கருத்தாய் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
  4. சாலை பாதுகாப்பு அப்படின்னா என்ன அப்படின்னு கேட்குற ஆளுங்கதான் அதிகம் இங்க...பதிவுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. பத்து நிமிடம் காலதாமதமாகச் செல்லலாம்
    பத்து வருடம் முன்னாடியே போயிடக்கூடாது..
    >>
    நச்சுன்னு சொல்லி இருக்கார். நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. மக்கள், வாகன தொகைக்கு ஏற்ப சாலைகள் அதன் தரம் இல்லாவிடில் விபத்துக்கள் தவிர்க்க முடியாது

    பதிலளிநீக்கு
  7. விழிப்புணர்வு பதிவு.
    பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  8. காலத்திற்கேற்ற பதிவு..கவிஞரின் குறும்பான கவிதை சிறப்பு..கடை பிடிப்போம்..

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. மறக்க முடியாத வரிகள்;
    ''பத்து நிமிடம் காலதாமதமாகச் செல்லலாம்
    பத்து வருடம் முன்னாடியே போயிடக்கூடாது..''
    மறக்கக் கூடாத வரிகளும்
    சாலை பாதுகாப்பு வாரத்தை நினைவில் கொண்டு இதை எழுதியமைக்கு பாராட்டும் நன்றியும்

    பதிலளிநீக்கு
  11. வாகனப்பந்தயத்தில் முந்தநினைத்து கண்மூடித்தனமான வேகம் காட்டினால் வாழ்க்கைப் பந்தயத்திலும் முந்திக்கொண்டு கண்மூடவேண்டியதுதான். கவிஞர் உரைத்தது சாலச் சரி. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  12. நன்றி இரமணி ஐயா
    நன்றி டேனியல் ஐயா
    நன்றி அப்பு
    நன்றி கோவை நேரம்

    பதிலளிநீக்கு
  13. நன்றி இராஜி
    நன்றி கவியழகன்
    நன்றி நண்டு
    நன்றி மதுமதி

    பதிலளிநீக்கு
  14. நன்றி கவிப்பிரியன்
    நன்றி நாயகம்
    நன்றி கீதா

    பதிலளிநீக்கு