வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்

ஒரு நூலகத்தில் இருந்த குப்பைத்தொட்டி தனியே புலம்ப ஆரம்பித்தது...

இந்த நூலகத்தில் நிறையபேர் பயன்படுத்துவது என்னைத்தான். இங்கு நிறைய சுமப்பவனும் நான்தான். இருந்தாலும் என்னை யாருமே மதிப்பதில்லை. ஆனால் இங்கு யாருமே பயன்படுத்தாத நூல்கள் நிறைய உள்ளன. இருந்தாலும் அவை எதையும் சுமப்பது கூட இல்லை. இருந்தாலும் அந்த நூல்களையே எல்லோரும் மதிக்கிறார்கள். 
என்ன உலகம்டா இது..” என்று தன்னைத்தானே நொந்துகொண்டது குப்பைத்தொட்டி.

சிலநூல்கள் குப்பைத்தொட்டியின் அறியாமை குறித்து வருத்தமடைந்தன. அந்த நூல்களுள் ஒருநூல் மட்டும் குப்பைத்தொட்டிக்கு அறிவுரை சொன்னது...

நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்?  என்பதைவிட
எதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது!

நாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட
எதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது!

என்று குப்பைத்தொட்டிக்கு அதன் அறியாமையைச்சுட்டிக்காட்டியது ஒரு நூல்.

இருந்தாலும் குப்பைத்தொட்டி புலம்பிக்கொண்டே இருந்தது. எல்லாம் என் தலைவிதி என்று..


(விதியை எண்ணிப் புலம்பும் மனிதர்களைக் காணும் போது என்மனதில் தோன்றிய சிந்தனையே இக்கதை)
தொடர்புடைய இடுகை



ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும்!



19 கருத்துகள்:

  1. // நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்? என்பதைவிட
    எதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது!

    நாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட
    எதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது!//
    அருமை

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    முல்லைக் காடாய் மணக்கின்ற
    முனைவா் வலையைக் கண்ணுற்றேன்!
    எல்லை இல்லாப் பேரழகில்
    இன்பத் தமிழின் நடங்கண்டேன்!
    வில்லை நிகா்த்த நற்கூா்மை!
    விளைவை நிகா்த்த பொற்பசுமை!
    சொல்லைப் பொருளை ஆய்ந்துதரும்
    தொடா்கள்! வணங்கி வாழ்த்துகிறேன்!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் மிக மிக அருமை........உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  4. குப்பைத் தொட்டிகளின் கதை இந்த நாட்டில் ஏராளமாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் சிந்தனையை அன்புடன் வரவேற்கிறேன் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
  6. மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு