புதன், 5 டிசம்பர், 2012

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

இலஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம்!

ஆனால் இன்றைய சூழலில்,

கொடுக்கத்தெரிந்தவன் புத்திசாலி!
வாங்கத்தெரிந்தவன் பிழைக்கத்தெரிந்தவன்!
இயலாதவர்கள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன?

என்ற மனநிலைதான் எங்கும் காணப்படுகிறது.

இலஞ்சம் வாங்காதே பிச்சையெடு என்று கொடுத்தவர்கள் கோபப்படுகிறார்கள்!

சும்மாவா கிடைச்சது இந்த வேலை? பிச்சையெடுத்துத்தான்டா இந்த வேலையே வாங்கினேன் என்று வாங்குபவர்கள் சொல்கிறார்கள்.

கொடுப்பவர்களையும், வாங்குபவர்களையும் போலவே சராசரி வாழ்க்கை வாழப் பழகிக்கொண்டார்கள்  மக்கள்.

என்ன விதை போடுகிறோமோ அதைத்தானே அறுவடை செய்யமுடியும்.நம் முன்னோர் விதைத்துச் சென்ற இலஞ்சம் என்னும் விதையைத்தான் நாம் இப்போது அறுவடைசெய்கிறோம்.

நாமும் நம் குழந்தைகளுக்கு இலஞ்சம் என்னும் விதையை விதைத்தால் அவர்கள்
இலஞ்சம் என்னும் பயிரைத்தானே அறுவடை செய்வார்கள்.

குழந்தைகளிடம் இறைவனை வழிபடும் முறைபற்றிச்சொல்லும்போது..

இறைவனிடம் வேண்டினால் அவர் தருவார் என்றுதானே சொல்கிறோம்..

கொஞ்சம் சிந்திப்போம் இறைவனிடம் வேண்டினால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடாது.

உழைப்புதன் மெய்வருத்தக் கூலிதரும்.

ஆயிரம் கடவுள்களை வேண்டினாலும் 
உன் மீது நீ நம்பிக்கை வைக்காவிட்டால்
நீ தான் பெரிய நாத்திகவாதி என்ற சிந்தனைகள 
மனதில் வைத்து,

நாம் வாழும் உலகம் தான் இலஞ்சம் நிறைந்ததாக இருக்கிறது. இளம் தலைமுறையினரிடமாவது சொல்வோம்.

உழைக்காமல் எதுவும் கிடைக்காது! அப்படிக் கிடைத்தால் அது நிலைக்காது!
உழைக்காவிட்டால் சாமி எதுவும் கொடுக்காது!
உழைத்துக் கிடைத்த ஊதியம்தான் உடலில் ஒட்டும்.

உழைப்புக்கு ஊதியம் பெறு, கொடு என்ற பண்பை நம் குழந்தைகளுக்காவது சொல்லித்தருவோம்.


பணத்தை முட்டாள் கூட சம்பாதித்துவிடமுடியும்
அதை ஒரு அறிவாளியால் தான் பாதுகாக்கமுடியும்.

என்பதையும், இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் பாவம் என்பதையும் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தருவோம்.
தொடர்புடைய இடுகை

தேடிவந்த உணவு

நீங்க தீவிரவாதியா?

24 கருத்துகள்:

 1. munivar ayya!

  arumaiyaana pakirvu!

  iraivan kooda enathu arulai thedi petru kollungal..
  etrethaan thirumaraiyil koorukiraan...

  mikka nantri!

  பதிலளிநீக்கு
 2. 'இலஞ்சம் தவிர்
  நெஞ்சம் நிமிர்'
  என்ற வாசகம் காவல் நிலையத்தில் காணப்படும் ஒன்று.இதை நாம் பொது வாழ்விலும் கடைப்பிடிக்கவேண்டும். நல்லதொரு பதிவு!

  பதிலளிநீக்கு
 3. //பணத்தை முட்டாள் கூட சம்பாதித்துவிடமுடியும்
  அதை ஒரு அறிவாளியால் தான் பாதுகாக்கமுடியும்.//

  இந்நிலை மாற இளைவர் மனதில் விதைக்க வேண்டும் நல்ல விதைகளை அருமையான பகிர்விற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் சொல்வது உண்மைதான் உழைப்பே உயர்வு அதுதான் நிரந்தரம்.உங்கள் தகவலுக்கு நன்றி....

  பதிலளிநீக்கு
 5. கலக்குறிங்க தோழரே! அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 6. டாப்பு டக்கரு ஐயா....

  உங்களுடைய Photoshop யினை Activate செய்ய எவ்வாறு Adobe Photoshop CS5.1 யினை Crack செய்து Activate செய்வது எனும் Link ஐ click செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 7. பணம்தான் வாழ்க்கையே.இல்லாவிட்டால் எதுவும்,யாருமில்லை இப்போ !

  பதிலளிநீக்கு
 8. அருமையான கருத்து. எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் இலஞ்சத்துடன் தொடர்புடையவர்களாகிறோம் .யோசித்துப் பாருங்கள் நம் வாழ்வில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அளவு சிறிதோ,பெரிதோ நாமே குற்றவாளியாக இருக்கிறோம் .மாற்றத்தை நம்மிலிருந்தே ஆரம்பிப்போம் . முயற்சிப்போம்.இளையோருக்கு நாம் கண்ணாடி. நம்மைத்தான் பிரதிபலிப்பார்கள் . இது குறித்த யோசனையை தூண்டியமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. லஞ்சத்தில் திளைத்தவர்களின் பெரும்பாலான குடும்பங்கள் நான் பார்த்தவரைக்கும் கடைசியில் வரலாற்று பிழையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு