திங்கள், 18 ஆகஸ்ட், 2014

கனவுகள் மெய்ப்பட...பாரத மாதா!
உன் முகத்தில் அரிதாரம் பூசப்படலாம் – இல்லை
அமிலமும் வீசப்படலாம்..
அச்சம் கொள்ளாதிரு!

உன்னுள்
போர்கள் தொடுக்கப்படலாம் – இல்லை
பூக்களால் புன்னகைக்கப்படலாம்
பொறுமை கொண்டிரு!

முன்பொரு நாள்
முன்னோர்கள் இழைத்த முயற்சியால்
இன்றுவரை முயலாது இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்!

முடங்கிய சிங்கங்களாய்....
எங்கள் கனவுகள் என்றுமே
கசக்கி எறியப்பட்ட காகிதங்களாய்
கண்டுகொள்ளப்படுவதில்லை யாராலும்........

உயிரைக் கிழிக்கும் ஓசைகளும்
எங்கள் உணா்வை அழிக்கும் பாசைகளும்
ஒன்றா.... இரண்டா....
என் கனவுகளில்,

பாரத மாதா..
நீா் கொணா்ந்த சுதந்திர மாலை
எங்கள் கண்ணீரின் வெப்பத்தாலே கருகிவிட்டது!

நீர் அளித்த எம் உயிர்த்துளி
எங்கள் உணா்வுகளின்
வலியாலே உலர்ந்துவிட்டது...

முதல்முறையாய் நானழுதேன்
சில முகமற்ற மனிதர்களின்
முறையற்ற செயலுக்காக...
அன்று மட்டும்
என் கண்களுக்குள் ஏனோ வியர்வை!

அம்மானுடா்கள்
அதிசயப் பிறவிகள்!
தங்கத்திலே தாரூற்றினார்கள்!

செல்வாக்குப் பெற்ற இவ்வுலகிலே
நாங்கள் ஏனோ செல்லாக் காசுகள்!

வறுமை எம்முள் வாழ்ந்து வயதாகிவிட்டது!
எங்கள் திறமையும் தீர்ந்துவிட்டது!

சுதந்திர வீணையை வாசிக்கமுடியாத
தொழுநோயாளிகள் நாங்கள்!

திலகரே!
சுதந்திரம் எனது பிறப்புரிமை
என்பது சும்மா!

படைப்பாக்கம்
சு.லாவண்யா
இளங்கலை வேதியியல் இரண்டாமாண்டு.
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
திருச்செங்கோடு


3 கருத்துகள்:

  1. ஆஹா! இளையவர்கள் எப்படி அழகாகக் கவிதை புனைகின்றார்கள்! வாழ்த்துக்கள் படைப்பாளிக்கு! பகிர்தலுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு