புதன், 6 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 130. நெஞ்சொடு புலத்தல்

 


அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது? - 1291

என் நெஞ்சே உன்னை நினைக்காதவரையே நீ நினைப்பது ஏன்?      

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. -1292

அன்பில்லாதவரைக் கண்டும் ஏன் அவரிடம் செல்கிறாய் நெஞ்சே!    

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல்? - 1293

கெட்டோருக்கு நட்பில்லை என்பதாலோ, நெஞ்சே அவா்பின் சென்றாய்

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று. - 1294

நெஞ்சே! ஊடலால் விளையும் கூடலை அறியாத உன்னிடம் பேசேன் 

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. - 1295

அவரைக் காணாத போதும் அச்சம்!, கண்டாலும் பிரிவெண்ணி அச்சம்  

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு. - 1296

தனிமையில் பிரிவு பற்றி நினைத்தால் என் நெஞ்சம் மேலும் வருத்தும்

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு. - 1297

அவரை மறக்கமுடியாததால், மறக்கக்கூடாத நாணத்தை மறந்தேன்

எள்ளின் இனிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. - 1298

பிரிந்தாலும் அவரை இகழ்வது இழிவென்பதால் புகழ்கிறது என் நெஞ்சு

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி. - 1299

துன்பத்தில் நெஞ்சமும் துணைவராவிட்டால் யார் துணை வருவார்!   

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி. - 1300

நம் நெஞ்சமே எதிர்க்கும் போது, அயலார் எதிர்ப்பது இயல்பே          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக