வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 5 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 129. புணர்ச்சி விதும்பல்

 


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு. - 1281

கள் குடித்தால்தான் இன்பம், காதல் நினைத்தாலே இன்பம்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்

காமம் நிறைய வரின். - 1282

பனையளவு காமத்தில், திணையளவும் கோபம் கொள்ளாதே

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண். -1283

என்னை அவர் விரும்பாது மறந்தாலும் அவரையே தேடும் கண்கள்   

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றது என் னெஞ்சு.-1284

அவரிடம் சண்டையிடச் சென்றேன், மறந்து தழுவயது என் நெஞ்சு

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து.-1285

மைதீட்டும் கோல் நாமறிவதில்லை! அதுபோன்றே அவரின் குற்றமும்

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை.- 1286

அவரைக் கண்டால் நல்லனவும், காணாதபோதே குறையும் காண்பேன்

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து?- 1287

வெள்ளத்தில் குதிப்பவர் போல, ஊட முடியாது என்பதறிந்தும் ஊடுகிறேன்

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு.- 1288

குடிகாரர்களுக்குக் கள்போல, காமமுடையார்க்கு காதலர் நெஞ்சம்         

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்.-1289

மலரைவிட மெல்லியது காமம், இதை உணர்ந்தோர் சிலரே            

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று. - 1290

கண்களில் ஊடலையும், தழுவுதலில் அன்பையும் வெளிப்படுத்துவாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக