வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


வியாழன், 17 ஜூலை, 2008

தமிழா!நீ பேசுவது தமிழா?

தமிழா!நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...
தமிழா!நீபேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்
வாழ்க்கைஇனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...
தமிழா!நீ பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
-உணர்ச்சிக் கவிஞர் .காசியானந்தன் .அவர்கள்


இக்கவிதை என்னை மிகவும் பாதித்த கவிதையாகும் .

திங்கள், 5 மே, 2008

வெள்ளி, 2 மே, 2008

இணையதளங்களை மொழி மாற்றிப் படிக்க

பிற மொழியில் உள்ள இணையதளங்களை,வலைப்பதிவுகளை தமிழிலும் ,தமிழில் உள்ள இணையதளங்களை,வலைப்பதிவுகளை பிற மொழியிலும் மாற்றிப் படிக்க ............
அதற்கான இணையதளம் கீழ்கண்டது
http://girgit.chitthajagat.in/

தமிழின் சிறப்பு

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள்
காணப்படுகின்ற்றான்
2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன

2500 ஆண்டாயினும் தமிழ் இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களும், தொல்காப்பிய இலக்கணமும், இன்று படித்தாலும் பொருள் புரிகிறது.
இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும்.

வ.ஐ. சுப்பிரமணியம்
(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்)


தம் கல்லறையில் மேல் “இங்கே தமிழ் மாணவர் உறங்குகிறார் “ என்று கல்லில் பொறித்து வைக்குமாறு
(உயில்) எழுதி வைத்த முனைவர் ஜி.யு.போப்

கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
- பேராசிரியர் மனோன்மணியம்


தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;
உயர் நிலையில் உள்ளது; வடமொழி
உதவியின்றி இயங்கவல்லது.
மொழியறிஞர்
டாக்டர் கால்டுவெல்
Dr.Calwell