கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ
செவிலித்தாய் வைணவத் துறவியிடமும் அவருடைய மாணாக்கர்களிடமும் சொன்னது :
எறித்தரு
கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித்
தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட
சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு
ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ்
இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை 5
என்
மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம்
உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார்
இருவரை காணிரோ பெரும?
வைணவத்
துறவி:
காணேம்
அல்லேம்! கண்டனம்! கடத்து இடை
ஆண்
எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய, 10
மாண்
இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!
பல
உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை
உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால்
நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு
வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை, 15
நீர்
உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால்
நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ்
புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ்
உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால்
நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே! 20
என, ஆங்கு
இறந்த
கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை
வழிபடீஇச் சென்றனள்,
அறம்
தலை பிரியா ஆறும் மற்று அதுவே.
என்ற பாடலை மையக்கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டது.
செலவு
ஞாயிற்றுக் கிழமையென்பதால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் இனியன்.
வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா?
என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்களே!
என்ற அணியில் பேசிய கவிஞர் பரிதி “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்று சும்மாவா நம் முன்னோர் சொல்லியிருக்காங்க நடுவரே!” ஆண்
குழந்தை என்றால் வரவு பெண் குழந்தை என்றால் செலவு என்பது அன்றும் இன்றும் என்றும் மாறாதது நடுவர் அவர்களே,
என்று பேசினார். தொடர்ந்து விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.




