மாணவர்களிடம் பண்பாடு குறித்து உரையாடும்போது கேட்டேன்..
பண்பாடு என்றால் என்ன?? என்று...
சில மாணவர்கள் சரியாகப் பதிலளித்தாலும், ஒரு சில மாணவர்கள் சொன்ன பதில் நான் சற்றும் எதிர்பாராததாக அமைந்தது..
1. ஏதாவது கூட்டமாக இருந்தால் அங்கு என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்ப்பது நம் பண்பாடு.
2. யாரையாவது திட்டுவது என்றால் மண்ணை வாறித் தூற்றுவது நம் பண்பாடு.
3. தூரத்தில் வரும்போது யாரையாவது திட்டினாலும் அருகே வரும்போது உங்களைப் பற்றிதான் இவ்வளவு நேரம் பெருமையாகப் பேசினேன் என்று கூறுவதுதான் தமிழர் பண்பாடு.
4. கடையில் சாமி கும்பிட்ட பின்னர் சாலையில் தேங்காய் உடைப்பதும் நம் பண்பாடுதான்.
5. யாரும் இறந்துவிட்டால் செத்துப்போயிட்டார் என்று சொல்லாமல் இயற்கை எய்திவிட்டார் என்று நாகரீகமாகச் சொல்வது நம் பண்பாடு என்று எதிர்பாராத பல்வேறு பதில்களை அளித்தார்கள்.
சரி தமிழர் பண்பாடுகள் குறித்து ஒரு பதிவு எழுதலாம் என எண்ணி இன்றைய பதிவைத் தமிழர் பண்பாடுகளை நினைவுபடுத்துவதாக வெளியிடுகிறேன்.
தமிழ் மொழி
தமிழர் அகவாழ்வியல் பண்பாட்டு நெறிகள்
தமிழர் புற வாழ்வியல் பண்பாட்டு நெறிகள்
தமிழர் கட்டிடக் கலை
தமிழர் சிற்பக் கலை
தமிழர் ஓவியக் கலை
தமிழர் நாடகக் கலை
தமிழர் இசைக் கலை
தமிழர் ஆடற்கலை
தமிழர் தற்காப்புக் கலை
தமிழர் யோகக் கலை
தமிழர் தத்துவவியல்
தமிழர் சமயங்கள்
தமிழர் வழிபாட்டு முறை
தமிழர் உணவுக்கலை
தமிழர் ஆடை மரபு
ஏறு தழுவுதல்
தமிழர் திருமண முறை
தமிழர் விளையாட்டுகள்
தமிழர் நம்பிக்கைகள்
மாட்டு வண்டிப் பந்தையம்
தமிழர் கப்பற் கலை
தமிழர் அரசியல்
தமிழர் உழவுமுறை
தமிழர் வணிகமுறை
தமிழர் கல்வி முறை
தமிழர் விருந்தோம்பல்
தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்
தமிழர் மருத்துவ முறைகள்
தமிழர் சித்தர் மரபு
தமிழர் நீதி வழங்கும் முறைகள்
என ஒவ்வொன்றிலும் தமிழருக்கென தனித்துவமான பண்பாட்டு மரபுகள் உண்டு.
தமிழர் பண்பாடு குறித்த விக்கிப்பீடியாவின் தொகுப்பைக் காண.
கிரிக்கெட்டும், டென்னசும் தானா விளையாட்டுக்கள்? தமிழர் பண்பாட்டை அடையாளப்படுத்தும் “36 வகையான பழந்தமிழர் விளையாட்டுக்கள்“
நம் பண்பாடுகளை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? “தெரிய வேண்டிய தமிழர் பண்பாடு“
நேரம் காலம் பார்க்காம எதுவும் செய்யலாமா? “சகுனம் பார்த்த பன்றி“
“காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல“
பழந்தமிழர் இசையிலும் தனித்துவமான பண்பாடு வளர்த்துவந்தனர். “ பழந்தமிழர் இசைக்கருவிகள்“
பெண்கள் மலரணிவதில் கூட தமிழர்கள் பண்பாடு வளர்த்தனர். “பெண்களும் மலரணிதலும்“







