புதன், 25 மார்ச், 2009

ஒலியை மட்டும் பிரித்தெடுக்கபாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.அதனால் பல பாடல்களை இணையத்தில் தேடி பதிவிறக்கிப் பயன்படுத்துவது வழக்கம்.ஒரு பாடல் எனக்கு எம்பி3 வடிவில் கிடைக்கவில்லை.வீடியோவாக மட்டுமே அந்தப் பாடல் கிடைத்தது.இதனை மாற்றி எம்பி3 வடிவில் ஏதாவது இணையதளம் வழங்குகிறதா எனத் தேடிப்பார்த்த போது அறிந்து கொண்ட தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
யுடியுப் (http://youtube.com//" )யாவரும் அறிந்த இணையதளம்.இங்கு வீடியோ எனப்படும் ஒலி,ஒளிக் கோப்புகள் காணக்கிடைக்கின்றன.யாவரும் தம் கோப்புகளை எளிதில் பதிவேற்றவும்,பதிவிறக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் உள்ள ஒளி,ஒலிக் கோப்பு(வீடியோ)களிலிருந்து ஒலியை மட்டும் எம்பி3 வடிவில் பிரித்தெடுக்க ஒரு இணையதளம் பயன்படுகிறது.(http://listentoyoutube.com//")இவ்விணையதளத்துக்குச் சென்று நாம் மாற்ற வேண்டிய பாடலின் url முகவரியை அளித்து சொடுக்கினால் சிறிது நேரத்தில் பதிவிறக்கம் எனத் தோன்றும்.அதனைப் பதிவிறக்கும் போது அக்கோப்பு எம்பி3 வடிவில் கிடைக்கிறது.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக