வெள்ளி, 17 ஜூலை, 2009

நோக்கு ( நூறாவது இடுகை )

( வலைப்பதிவு குறித்த தன்மதிப்பீடு, பட்டாம்பூச்சி விருது வழங்குதல்)

வேர்களைத்தேடி..........

இதுவரை 71 நாடுகளிலிருந்து 11535 பார்வையாளர்கள் 500க்கு மேல் கருத்துரையளித்துள்ளனர். இவர்களுள் 62பேர் இப்பொழுது இவ்வலைப்பதிவைப் பின்தொடர்ந்து வருகின்றனர். அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவு எழுதுவது எனது கனவாகவே இருந்தது.சோதனை முயற்சியாக இரு ஆண்டுகளுக்கு முன்பு கூகுளில் வலைப்பதிவை ஆரம்பித்தேன்...

கடந்து வந்த பாதை...........

எழுத்துருச்சிக்கல்....


o வலைப்பதிவில் எழுதுவது எனக்கு மிகப்பெரிய சிக்கலாகவே இருந்தது. முதலில் தமிங்கில முறையில் வலைப்பதிவுப்பக்கத்திலேயே எழுதினேன். அவ்வாறு எழுதுவதில் ஒரு சிக்கல் இருந்தது. இணையதளத் தொடர்பு இருந்தால் மட்டுமே எழுத முடியும் என்ற நிலையில் தொடர்ந்து அதிகசெய்திகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டது...

o பொங்கு தமிழ் என்னும் எழுத்துரு மாற்றியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டேன். பாமினி எழுத்துருவில் வேர்டு கோப்புகளை உருவாக்கி, அதனை பொங்குதமிழ் வழியாக யுனிகோடாக மாற்றி பயன்படுத்தி வந்தேன்..

o எழுத்துருச்சிக்கலுக்கு மிகப்பெரிய தீர்வாக என்.எச்.எம் எழுதியை இணையவழியே அறிந்து கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தேன்.இயல்பாகவே பாமினி எழுத்துருக்களை தட்டச்சு செய்யத்தெரிந்த எனக்கு என்.எச்.எம் எழுதியைப் பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவும் உதவியாகவும் இருந்தது.

o எனது கருத்துக்களை எழுதுவதில் ஒரு வழியாக சிக்கல் தீர்ந்தது.

வேர்களைத்தேடி...............

வலைப்பதிவுப் பயன்பாடு அதிலுள்ள தொழில்நுட்பங்கள்
ஆகியவற்றை ஓரளவுக்கு அறிந்து கொண்ட பிறகு....
என்ன எழுதுவது என்று சிந்தித்தேன்...
வலைப்பதிவுகள் பலவற்றையும் பார்த்த போது...
அவற்றுள் இலக்கியப் பதிவுகள் குறைவுபட இருப்பதை உணர்ந்தேன்.

நகைச்சுவை,சமூகம்,தொழில்நுட்பம், அரசியல் பொழுது போக்கு, விளையாட்டு ஆகியவையே பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றன...

இலக்கியம் குறித்த தேடல் சார்ந்த வலைப்பதிவுகள் பற்றாக்குறையுடனேயே உள்ளன....

நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபோது பல தமிழாய்வுத் தரவுகளையும் இணையத்தில் தேடி கிடைக்காமல்த் தவித்தேன். அதனால் இலக்கியப் பதிவுகள் எழுதுவது என்று தீர்மானித்துக்கொண்டேன்.

சங்க இலக்கியம் சார்ந்த செய்திகளை முதன்மையாகவும், இணையதள தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளை துணையாகவும் கொண்டு பதிவிட்டு வருகிறேன்....

இன்றைய தமிழர்கள் தம் மொழி, மரபு, பண்பாடு உள்ளிட்ட பல கூறுகளையும் தொலைத்து தமிங்கிலர்களாக வாழும் அவலம் கண்டு மனம் வருந்தினேன்..
அதனால் தமிழரின் மொழி, மரபு, பண்பாட்டுக்கூறுகளின் வேர்களைத்தேடவேண்டும் என்னும் ஆசை மேலிட்டது....
அதன் காரணத்தால் எனது பதிவுக்கு வேர்களைத்தேடி.......
என்று பெயரிட்டு மகிழ்ந்தேன்..


திரட்டிகள் ஏற்படுத்திய திருப்பம்.

ஆரம்பத்தில் எனது வலைப்பதிவை எந்த திரட்டியிலும் இணைக்கவில்லை. பின் தமிழ்மண உறுப்பினர் ந.கணேசன் ஐயா அவர்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தமிழ்மணத்தில் எனது பதிவை இணைத்தேன்..

தமிழ்மணம் வாயிலாக பல இலக்கிய ஆர்வலர்களின் அறிமுகம் கிடைத்தது..

அடுத்து தமிழிஷில் இணைத்தேன்....
ஒரே நாளில் 600 பார்வையாளர்கள் வந்தனர். எனக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது..

தமிழிஷில் பிரபல இடுகையாக
இணையதளத் தொழில்நுட்பம், சங்க இலக்கியம் உள்ளிட்ட பல இடுகைகளையும் ஓட்டளித்துப் பிரபல இடுகையாக்கிய நண்பர்கள் யாவருக்கும் மிகுந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

முதல் திருப்பம்...

திரட்டி இணையதளத்தில் நட்சத்திர வலைப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வலையுலக வாழ்வில் மறக்கமுடியாததாக அமைந்தது.


பிற இணையதளங்களில்

படிக்கும் காலத்தில் இணையதளங்களில் எனது கட்டுரைகளை வெளியிடுவதற்கு பல முறை முயன்றும் இயலாது போனது...
அந்த நிறைவேறாத ஆசைகள் கடந்த இரு ஆண்டுகளில் நிறைவானபோது மிகுந்த மகிழ்வெய்தினேன்..

திண்ணை , முத்துக்கமலம் , தினகரன்
பதிவுகள்

தமிழ் ஆதர்ஸ் ( 6 கட்டுரைகள்)

1.தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

2. காதலின் அகலம்- உயரம் – ஆழம்

3.பழந்தமிழர் விளையாட்டுக்கள்


4. ஈமத்தாழி

5.பெண்களும் மலரணிதலும்

6. சகோதரியான புன்னைமரம்


இளமை விகடன் குட்பிளாக்ஸில்

ஐந்திணைப்பெயர் மூலம்

ஓரிற்பிச்சையார்

கவைமகனார்

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

பழந்தமிழரின் விளையாட்டுகள்

ஈமத்தாழி

உள்ளிட்ட 6 இடுகைகள் வெளிவந்துள்ளது.


கருத்துரைகள்.............

வேர்களைத்தேடி.........

வந்து கருத்துரையிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு என்றும் என் நன்றிகள் உண்டு..
எனது எழுத்துக்கு உயிரூட்டி மேலும் மேலும் எழுதத்தூண்டியவர்கள் கருத்துரையாளர்களே....

கருத்துரையாளர்கள் பல வகை....
பாராட்டிச் செல்பவர்கள்.....
வாழ்த்திச் செல்பவர்கள்.....
குறை கூறிச் செல்பவர்கள்....
அறிவுரை கூறிச் செல்பவர்கள்...
சந்தேகம் கேட்கக் கூடியவர்கள்....

என இவர்கள் பலவகைப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களின் கருத்துரைகளை அவர்களின் நோக்கிலிருந்து பார்த்து எனது வலைப்பதிவை பயனுள்ளதாக்க முயற்சி செய்து வந்திருக்கிறேன்.


இந்த கருத்துரைகள் எனது எழுத்துக்களை மேலும் முதிர்ச்சி பெறச் செய்தன...

ஆரம்பத்தில் இலக்கிய நயத்தோடு எழுத ஆரம்பித்த எனக்கு உலகு பரவி வாழும் தமிழர்களின் நிலைகண்டு இன்னும் எளிமைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று சிந்தனை வந்தது. அதனை கருத்துரை வாயிலாக தெரிவித்த அன்பு நெஞ்சங்களின் சொல்லுக்கு மதிப்பளித்து மேலும் எனது எழுத்துக்களை எளிமைப்படுத்தி்க்கொண்டேன்....

மறக்க முடியாதவர்கள்.....


தமிழரசி ............
எனது வலைப்பதிவின் மீது தீராத பற்றுடையவர்...
இவரது கருத்துரைகளில் தமிழின் மீது அவர் கொண்ட தீராத காதல் புலனாகும்..
எழுத்தோசை என்னும் வலைப்பதிவு வாயிலாக நாளும் கவியோசை எழுப்பி வருகிறார்
இவர் தம் வலைப்பதிவில் வேர்களைத்தேடி..........
என்ற எனது வலைப்பதிவை அறிமுகம் செய்து வைத்ததோடு
பட்டாம்பூச்சி விருது வழங்கியும் பாராட்டினார். அதோடு நில்லாமல், அவர் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றியபோதும் மற்றொரு முறை எனது பதிவினை அறிமுகம் செய்துவைத்து மகிழ்ந்தார்....
தமிழுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தேவன் மாயன்...
தமிழ்த்துளி என்னும் தம் வலைப்பதிவு வாயிலாக மருத்துவம், பொழுதுபோக்கு, நகைச்சுவை, பொது அறிவு என பல செய்திகளையும் அளித்து வருகிறார்.....
அவரைப் பார்த்து பல நேரங்களில் வியந்ததுண்டு.......
ஏனென்றால் எப்போது ஜிமெயிலைத் திறந்தாலும் அவர் இணையதள தொடர்பில் இருப்பார்...

கருத்துரை வழியே நண்பரான இவர் வாழ்வது காரைக்குடி என்பது அறிந்து பெரிதும் மகிழ்ந்து போனேன்..........

நான் பத்துவருடங்களாக எனது பல்கலைக்கழகக் கல்வி பயின்றது காரைக்குடி....

அதனால் இவர் பதிவினைப் படிக்கும் போது ஒரே ஊர்காரர் என்னும் மனநிலை ஏற்படுவதுண்டு...
தமிழ் நெஞ்சம்....

நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த நாட்களில் இவரைப் பார்த்து மலைத்ததுண்டு....
தொழில்நுட்பக் கடல் என்றே இவரை அழைக்கலாம். அந்த அளவுக்குத் தொழில்நுட்பத்தகவல்களை இவர்தம் வலைப்பதிவில் தந்துள்ளார்..
எனது வலைப்பதிவுக்கு ஆரம்ப காலங்களில் இருந்தே கருத்துரையிட்டும்.. தமிழிஷில் ஓட்டளித்தும் என்னை ஊக்கப்படுத்தி வரும் இவரின் அன்பை என்றும் மறவேன்..


இன்னும் வலைப்பதிவு வாயிலாக எனக்குக் கிடைத்த நண்பர்களைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்...
ஆயினும் பக்க நீட்சி கருதி....
இத்துடன் நிறைவு செய்கிறேன்..
அதற்கு முன்னர்......
ஐவருக்குப் பட்டாம்பூச்சி விருதளிக்க விரும்புகிறேன்....
எனது நண்பர்கள் பலர் பிரபல பதிவர்களாக உள்ளனர். அவர்கள் பல முறை இவ்விருதைப் பெற்றுள்ளனர். அதனால் இவ்விருதினைப் பெறாதவர்களுக்கு இதனை அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்...

முதலாவதாக....

முனைவர்.சே.கல்பனா (தமிழ்விரிவுரையாளர்)

இளங்கலை வேறு துறை பயி்ன்றவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவராகத் திகழ்பவர்...
அவரது வலைப்பக்கத்தில்
இலக்கியம், இலக்கணம், வரலாறு, அகராதி என பல்துறைத் தகவல்களையும் காணமுடியும். ஒவ்வொரு இடுகையின் போதும் கருத்துரையிட்டு எனது பக்கத்தை வளமாக்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அவருக்கு எனது முதலாவது விருதினை அளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

இரண்டாவதாக......


எம்.ஏ.சுசீலா
சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு ஆகிய துறைகளில் சிறப்புப் பெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன்,தினமணிகதிர்,மங்கையர் மலர்,அவள்விகடன்,புதிய பார்வை,வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன.தமிழ்இலக்கியத்தில்,முனைவர்(Ph.d)பட்டம்பெற்று,மதுரை, பாத்திமாக்கல்லூரியில், தமிழ்த்துறைப்பேராசிரியர் பணி.(1970-2006);அதிலிருந்து ஓய்வு பெற்றவர்.


மூன்றாவதாக....
குமரன்..

இவரைக் கருத்துரைகள் வாயிலாகவே அறிந்தேன்.
இவர் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் தமிழின் மீது அவருக்கு இருந்த புலமை கண்டு வியந்தேன்.
எனது இடுகைகளில் பல சிக்கலான் ஐயங்களை எழுப்பி என்னை மேலும் பட்டை தீட்டியவர் இவராவார்...
இவர் உண்மையிலேயே தொழில் நுட்பத்துறை தானா?
தமிழ்த்துறை சார்ந்த ஆய்வாளரா? என்று கூட எனக்கு ஐயம் வந்ததுண்டு.....
அவர் பல வலைப்பதிவுகள் வழியே தமிழ் மணம் பரப்பி வருகிறார்...
அவரின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
அவருக்கு எனது இரண்டாவது விருதினை அளித்து மகிழ்கிறேன்..


நான்காவதாக.........
சுமஜ்லா

கடந்த சில நாட்களாகவே இவரை அறிவேன்....
தொழில்நுட்பம் சார்ந்த பல செய்திகளையும் அயராது கண்டறிந்து கூறுபவர். இவரின் வலைப்பதிவுக்குச் சென்றாலே அவரது கடின உழைப்புத் தெரியும். வலைப்பதிவுகளைப் பகலில் ஒரு வடிவிலும், இரவில் வேறொரு வடிவிலும் காண்பது போன்ற தொழில்நுட்பம் உள்ளிட்ட பல அரிய செய்திகளை இவரது பக்கத்தில் காணலாம். அவருக்கு எனது மூன்றாவது விருதினை அளித்து பெருமிதம் கொள்கிறேன்.

ஐந்தாவதாக........

சந்ரு..
தமிழ் இலக்கியங்களின் மீது மிகுந்த காதல் கொண்டவர். அதனால் எனது வலைப்பதிவைத் தன் பதிவில் இலக்கியம் கற்க ஒரு வலைப்பதிவு என்று அறிமுகம் செய்து மகிழ்ந்தார். அவரது வலைப்பதிவைக் காணும் போது சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பினைக் காணமுடிந்தது. கவிதை, கட்டுரை, நகைச்சுவை, நிழற்படங்கள் என தினம் பல இடுகைகள் இட்டு வரும் நண்பர் சந்ரு அவர்களுக்கு ஐந்தாவதாக விருதளித்து மகிழ்கிறேன்.


வலைப்பதிவு அறிமுகத்துக்குப் பின்னர் இவ்வையகமே சிறு கிராமம் போல ஆகிவிட்டது. உலகு பரவி வாழும் தமிழர்கள் யாவரும் ஒரே கிராமத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கான பொருள் எனக்கு இப்போது தான் முழுமையாகப் புரிந்தது....

ஊக்கமளித்துவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

48 கருத்துகள்:

 1. நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பல்லாயிரம் இடுகைகள் மூலம் எங்களுக்கு தமிழ் அமுதம் பருக தருக...

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் பட்டாம்பூச்சி விருது கொடுத்ததன் மூலம் சில பதிவர்களை அடையாளம் கண்டு கொண்டோம். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. தாங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்குப் பின்பும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.

  என்னை கவுரவித்து விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி! எனினும், நண்பர் உழவன் ஏற்கனவே எனக்கு பட்டாம் பூச்சி விருது தந்து விட்டார். நான் தான் இட நெருக்கடி காரணமாக, என் டெம்ப்ளேட் மாற்றத்தின் போது அதைப் போடாமல் விட்டு விட்டேன். இனி, உங்கள் பெயரையும் இணைத்து போட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் குணா நூறாவது பதிவிக்கு மென்மேலும் சிறந்த படைப்புகள் வெளியிட வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அதன் காரணத்தால் எனது பதிவுக்கு வேர்களைத்தேடி.......
  என்று பெயரிட்டு மகிழ்ந்தேன்..]]

  பெயர்காரணம் அருமை.

  நீங்கள் கற்றுகொடுங்கள்
  நாங்கள் கற்றுகொள்கிறோம்

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் குணா...ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு உங்களின் 100வது பதிவு..அதிலும் இங்கு என்னை நினைவூட்டி என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டீர்...இந்த 100வது பதிவின் நினைவாய் தமிழ் தங்களுக்கு INTERESTING BLOG AWARD வழங்குவதில் பெருமைபடுகிறேன் இது 100வது இடுகையின் நினைவு மட்டுமல்ல நம் நட்புக்கும் ஒரு சான்றாயிருக்கும் என் நம்புகிறேன்..இதோ போய் பதிவிட்டு அதில் உங்கள் பெயரையுமிட்டு வருகிறேன்...மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும் குணா....

  பதிலளிநீக்கு
 7. ஹைய்யா எனக்கு மீண்டும் பட்டாம்பூச்சி விருது....தமிழ் வேந்தனின் கையில் தமிழரசிக்கு விருது என்னே என் பாக்கியம்..இது என் வலைபூ பாதையை மேலும் மெருகூட்டியது என்றே சொல்வேன்.. நன்றி குணா...உங்கல் நட்பின் அங்கீகாரத்தின் அடையாளமாய் இதை ஏற்றுக் கொள்கிறேன்....

  பதிலளிநீக்கு
 8. பட்டாம் பூச்சி விருது கிடைப்பதில் சந்தோசம். அதிலும் உங்கள் மூலமாக கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி...

  நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் முனைவரே

  உங்கள் பதிவை படிக்கும்போது பள்ளிக்காலத்துக்கு அழைத்துச்செல்லும், அவசர உலகில் தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் உங்கள் வலைத்தளம் நன்று. மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. மன்னிக்கவும் குணா நான் அவசரப்பட்டு எனக்கு பட்டாம்பூச்சி விருதுன்னு நினைச்சிட்டேன்..ஆர்வக் கோளாறு தான் ஹஹஹ்ஹ்ஹ எழுத்தோசை வரவும்..

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துகள்!! முனைவரே!

  வெங்கடேஷ்

  பதிலளிநீக்கு
 12. /நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பல்லாயிரம் இடுகைகள் மூலம் எங்களுக்கு தமிழ் அமுதம் பருக தருக.../

  வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு...

  பதிலளிநீக்கு
 13. தாங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்குப் பின்பும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது/

  வருகைக்கும் விருதினை ஏற்றமைக்கும் நன்றி சுமஜ்லா.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் முனைவரே/

  வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்ப்பிரியன்

  பதிலளிநீக்கு
 15. /வாழ்த்துக்கள் குணா நூறாவது பதிவிக்கு மென்மேலும் சிறந்த படைப்புகள் வெளியிட வாழ்த்துக்கள்/

  நன்றி வசந்த்...

  பதிலளிநீக்கு
 16. /பெயர்காரணம் அருமை.

  நீங்கள் கற்றுகொடுங்கள்
  நாங்கள் கற்றுகொள்கிறோம்/

  மீள் வருகைக்கு நன்றி ஜமால்...

  பதிலளிநீக்கு
 17. /100வது பதிவின் நினைவாய் தமிழ் தங்களுக்கு INTERESTING BLOG AWARD வழங்குவதில் பெருமைபடுகிறேன் இது 100வது இடுகையின் நினைவு மட்டுமல்ல நம் நட்புக்கும் ஒரு சான்றாயிருக்கும் என் நம்புகிறேன்..இதோ போய் பதிவிட்டு அதில் உங்கள் பெயரையுமிட்டு வருகிறேன்...மீண்டும் நன்றியும் வாழ்த்துக்களும் குணா..../

  வருகைக்கும் வாழ்த்துக்கும் விருது வழங்கியமைக்கும் நன்றிகள் தமிழரசி...

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துகள்! நண்பரே/..(ஜீவராஜ்)

  நன்றி மருத்துவரே.....

  பதிலளிநீக்கு
 19. /பட்டாம் பூச்சி விருது கிடைப்பதில் சந்தோசம். அதிலும் உங்கள் மூலமாக கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி/

  விருதினைப் பெற்றமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துக்கள் முனைவரே

  உங்கள் பதிவை படிக்கும்போது பள்ளிக்காலத்துக்கு அழைத்துச்செல்லும், அவசர உலகில் தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கும் உங்கள் வலைத்தளம் நன்று. மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்/

  கருத்துரைக்கு நன்றி அபு...

  பதிலளிநீக்கு
 21. /வாழ்த்துகள்!! முனைவரே!

  வெங்கடேஷ்.( திரட்டி)/

  நன்றி நண்பரே......

  பதிலளிநீக்கு
 22. மேன்மேலும் பல இடுகைகள் மூலம் எங்களுக்கு தமிழ் அமுதம் பருக தருக.......!!!!!!!
  நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள் முனைவரே.......!!!!!!!!

  பதிலளிநீக்கு
 23. அட, இது நூறாவது இடுகையா? இப்போ தான் கவனித்தேன். என்ன ஒரு ஒற்றுமை? நானும் இதே போல பதிவிட்டிருக்கிறேனே?

  பதிலளிநீக்கு
 24. உங்கள் தமிழ் பற்றினையும். உங்களின் எழுத்துக்களையும் பார்த்து வியந்தவன் நான். உங்கள் வலைப்பதிவினை குறுகிய நாட்களுக்குள்தான் காணக்கிடைத்தது. ஆரம்பத்திலே என் ஏந்த வலைப்பதிவை நான் கண்டு கொள்ளவில்லை என்று யோசிப்பதுண்டு.

  நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பழைய பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் தமிழ் பணி தொடர என் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் குணா.நீங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக விவரித்துள்ளீர்கள் நன்றாகவுள்ளது.
  உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய உள்ளன்போடு வாழ்த்துக்கின்றேன்.

  எனக்கு பட்டாம் பூச்சி விருது கொடுத்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 26. நூறாவது பதிவில் பட்டாம்பூச்சி பறக்கவிட்டு கலக்கிடிங்க!

  ஈரோட்ல தான் நானும் இருக்கேன்!
  கண்டுக்கோங்க தல!

  பதிலளிநீக்கு
 27. /மேன்மேலும் பல இடுகைகள் மூலம் எங்களுக்கு தமிழ் அமுதம் பருக தருக.......!!!!!!!
  நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள் முனைவரே.......!!!!!!!!/


  நன்றி பிரவின்குமார்

  பதிலளிநீக்கு
 28. தங்கள் பாதையில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 29. சிறந்த இடுகைகளை மட்டும் எழுதும் மன உறுதியை வியக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 30. தமிழுக்குத் தங்களைப் போன்றோர் அவசியம் தேவை!!

  பதிலளிநீக்கு
 31. /அட, இது நூறாவது இடுகையா? இப்போ தான் கவனித்தேன். என்ன ஒரு ஒற்றுமை? நானும் இதே போல பதிவிட்டிருக்கிறேனே?/

  மகிழ்ச்சி சுமஜ்லா..

  பதிலளிநீக்கு
 32. /உங்கள் தமிழ் பற்றினையும். உங்களின் எழுத்துக்களையும் பார்த்து வியந்தவன் நான். உங்கள் வலைப்பதிவினை குறுகிய நாட்களுக்குள்தான் காணக்கிடைத்தது. ஆரம்பத்திலே என் ஏந்த வலைப்பதிவை நான் கண்டு கொள்ளவில்லை என்று யோசிப்பதுண்டு.

  நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பழைய பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் தமிழ் பணி தொடர என் வாழ்த்துக்கள்.../
  தொடர்ந்து படிங்க சந்ரு.....

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் குணா.நீங்கள் கடந்து வந்த பாதையை மிக அழகாக விவரித்துள்ளீர்கள் நன்றாகவுள்ளது.
  உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய உள்ளன்போடு வாழ்த்துக்கின்றேன்.

  எனக்கு பட்டாம் பூச்சி விருது கொடுத்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி./

  வாழ்த்துக்கள் முனைவரே....

  பதிலளிநீக்கு
 34. /வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்./
  நன்றி ஊர்சுற்றி..

  பதிலளிநீக்கு
 35. /சிறந்த இடுகைகளை மட்டும் எழுதும் மன உறுதியை வியக்கிறேன்!/
  வருகைக்கும் கருத்துரைக்களுக்கும் நன்றி மருத்துவரே....

  பதிலளிநீக்கு
 36. உங்களுக்கு விருது கிடைப்பதனையிட்டு மகிழ்வடைகிறேன். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 37. இன்னும் பல நூறு இடுகைகளுடன் வலம் வர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டாக்டர்....

  பதிலளிநீக்கு
 39. உங்கள் அன்பிற்கும் பாராட்டுகளுக்கும் விருதிற்கும் நன்றி நண்பரே.

  நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 40. தங்கள் தளத்தில் ஆங்கிலத்தில் விருதா!?... தமிழ் வலைப்பதிவுகளுக்கு வழங்கும் விருதுகளைத் தேடுகையில் தாங்கள் தரும் விருது குறித்து அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு

வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.