சனி, 30 ஏப்ரல், 2011

நாலு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னிஅடுத்து ஆட்சிக்கு வருவது யாராக இருந்தாலும் நமக்கு என்ன செய்வாங்க..
தேர்தல் அறிக்கையில சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவாங்களா..
இலவசமா கொடுக்கறேன்னு சொன்னதையெல்லாம் மறக்காமக் கொடுப்பாங்களா..
என்று மட்டும் இங்கு ஒரு கூட்டம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது!

சரி இலவசமா கொடுக்கறாங்கன்னா எப்படிக் கொடுக்கறாங்க அவங்களோட சொந்தப் பணத்தையா கொடுக்கறாங்க..?
நம்ம வரிப்பணம் தானே இது!
இந்த இலவசமெல்லாம் நாளைய விலைஉயர்வுக்கு காரணமாகிவிடாதா..?

என்பதையெல்லாம் சிந்திக்க நேரமே இல்லை இவர்களுக்கு.

இதோ ஒரு சிந்திக்க வைத்த,வைக்கும் குறுந்தகவல்.

“எதுக்கு அரிசி? மிக்சி? கிரைன்டர்?
எல்லாத்தையும் தனித்தனியா கொடுக்கறாங்க?

ஒரு ஆளுக்கு நாலு இட்லி கொஞ்சமா கெட்டி சட்னின்னு வீட்டுக்கு வீடு கொடுத்துட்டா...
இலவச தொலைக்காட்சியப் பார்த்துட்டு எங்க காலத்தை ஓட்டிருவோம்ல..!“

இந்த நகைச்சுவை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தான்.

மக்களும் ரொம்பத் தாங்க மாறிப்போயிட்டாங்க.
கடைக்குப் போனேன்..
இடியப்ப மாவு வாங்கலாமேன்னு..
கடைக்காரர் சொன்னார்..
இன்னும் என்னப்பா மாவு வாங்கிட்டிருக்கீங்க..
இடியப்பத்தை அவித்து பாக்கெட் போட்டு வைய்திருக்கோம்..
இதை வாங்குங்க, வீட்டுக்குப் போங்க, வேகவைங்க, சாப்பிடுங்க.

இதை மாதிரி சப்பாத்தி கூட போட்டே பாக்கெட்ல வைத்திருக்கோம் என்றார்.
கடைக்காரர் நண்பர் என்பதால் நானும் விளையாட்டாகச் சொன்னேன்..

பாக்கெட்ல தான் வைத்திருக்கீங்களா..?
வீட்டுக்கும் வந்து ஊட்டிவிட்டா இன்னும் நல்லா இருக்குமே!!

என்று..
அதற்கு அவரு சொன்னார்..
அடுத்து அதைத்தான் யோசிச்சிட்டே இருக்கோம் என்று..

காலம் போற போக்கைப் பார்த்தா.. காலப்போக்குல வாசுதுபடி வீட்டில சமையல் அறையே இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க போலத் தெரியுது..

இந்த அரசியல்வியாபாரிகளும் திட்டமிட்டே மக்களை சோம்பேறிகளாக்குறாங்க.(அரசியல் வாதிகளும், வியாபாரிகளும்னுதான் எழுதவந்தேன் தவறி சரியா எழுதீட்டேங்க).

“சோம்பல் என்பது நம்மைச் சுற்றி நாமே
கட்டிக்கொள்ளும் கல்லறை“
என்பது இந்த மக்களுக்கு எப்போது புரியப் போகிறது..?

பெரியவர்களே இப்படி இருந்தா..
அடுத்து வரப்போற புதிய தலைமுறையோட நிலை எப்படியிருக்கும்..?

இதோ..

பையன் - அம்மா தண்ணீர் கொண்டுவா
அம்மா - டேய் வந்து குடிச்சிட்டுப் போடா
பையன் - நீயே கொண்டுட்டு வாம்மா
அம்மா - நா வந்தேன்னா நாலு உதை விழும் பரவால்லையா..?
பையன் - எப்படியும் உதைக்கறதுக்காவது எழுந்துதானே வருவ... அதுக்கு தண்ணீயைக் கொண்டு வந்தா வேலை முடிஞ்சி போயிடும்லமா..?
அம்மா - !!!!!

6 கருத்துகள்:

  1. சோம்பேறிகளாக்க படுகிறோம் சிலரின் சுயநலத்திற்க்காக....

    பதிலளிநீக்கு
  2. இங்க சில கடைகள்ள காய்கறி குழம்புக்கு, பொரியலுக்குன்னு வெட்டியே வச்சி விக்குறாங்க:))

    பதிலளிநீக்கு