வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 11 மார்ச், 2012

வெற்றிதரும் பேச்சுக் கலை (ஆசிரியர்களுக்காக)



·        நான் பலமுறை எண்ணிப்பார்த்திருக்கிறேன்.
வேறு எந்தப் பணிக்காவது நாம் சென்றிருந்தால் இவ்வளவு மன நிறைவு கிடைத்திருக்குமா? என்று...


·        இளைய தலைமுறையினருடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் மனநிறைவைவிட. நான் சொன்ன சின்னச்சின்னக் கதைகளும்,பொன்மொழிகளும், சிந்தனைகளும் அவர்களைச் சிந்திக்கச் செய்திருக்கிறது என்பதை உணரும்போது பெரிதும் நெகிழ்ந்துபோயிருக்கிறேன்.

·        நான் இயல்பாகவே குறைவாகப் பேசக்கூடியவன்.
பேசவேண்டிய சூழலில் மட்டுமே பேசிவந்திருக்கிறேன்.

  • இரண்டுகாதுகளையும் ஒரு வாயையும் இயற்கை நமக்குத் தந்தது. நாம் நிறைய கேட்கவேண்டும் குறைவாகப் பேசவேண்டும் என்பதற்காகவே என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வேன்.

  • நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளமுடியாது என்பதை எப்போதும் எண்ணிக்கொள்வேன்.


·        மேடை நடுக்கம் ஏற்பட்டபோதெல்லாம், அதை நீக்க..
முதலில் நமக்கு முன் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் நான மட்டுமே அறிவாளி என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் பேசுவதை அவர்கள் உற்றுநோக்க ஆரம்பித்தபிறகு...
இங்கு நம்முன் இருப்பவர்கள் எல்லோருமே பெரிய அறிவாளிகள்   
    நாம் மட்டும் தான் முட்டாள் என்றே எண்ணி வந்திருக்கிறேன்.


ஒருமுறை சொன்ன கருத்தையே அடுத்தமுறை சொல்லும்போது இதுஇங்கு தேவையா? என்று சிந்தித்திருக்கிறேன். தேவையென்றால் அதே செய்தியை வேறுமுறையில் சொல்லிவந்திருக்கிறேன்.
  • அவ்வப்போது மாணவர்களிடம் என் நிறைகுறைகள் பற்றி கருத்துரைகளை வாங்கி என்னைத் தன்மதிப்பீடு செய்துகொள்வேன்..
அதில் ஒரு மாணவர் எழுதியிருந்தார்...
ஐயா.. உங்கள் வகுப்புகளில் நீங்கள் எங்களை வெளியே பார்க்கவிட்டதே இல்லை.. ஒருமணிநேரமும் எங்களை பாடத்தையே உற்றுநோக்கவைத்திருக்கிறீர்கள். எங்கள் சிந்தனை திசைமாறும்போதெல்லாம் எங்களைத் திசைமாற்றி ஏதாவது நகைச்சுவையோ, கதையோ சொல்லி கைதிபோலவே சிறைப்படுத்திவைத்திருக்கிறீர்கள்..

-இப்படிக்கு உங்கள் கைதிகளில் ஒருவன் 
என்று எழுதியிருந்தார்.

நான் வகுப்பெடுக்கும் முறைபிடித்திருக்கிறது என்று பல மாணவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

மாணவர்களுக்குப் பிடிப்பது போலப் பாடம் எடுப்பது மிகவும் எளிது. ஆனால் அவர்களைத் தேர்ச்சியும் அடையவைக்கவேண்டும் ஒழுக்கத்தையும் கற்றுத்தரவேண்டும் என்ற சூழலில் தான் ஆசிரியர்களுக்கு சுமை அதிகரிக்கிறது.

ஆசிரியருக்கு அடிப்படையானது பேச்சுக்கலை. அதன் நுட்பங்களை நான் அதிகமாகக் கற்றுக்கொண்டது நம்ம வள்ளுவரிடமிருந்துதான்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
திருக்குறள் -100

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
திருக்குறள் -643

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
திருக்குறள் -645

என்னும் குறள்கள் என்னைப் பெரிதும் மாற்றியிருக்கின்றன.



29 கருத்துகள்:

  1. ஆசிரியர்கள் மட்டுமல்ல.எல்லோரும் பேசும் கலையை அறிவது நல்லதுதான்.தங்கள் கட்டுரைகள் தாங்கள் சிறந்த ஆசிரியர் என்பதையும் பேச்சிலும் வல்லவர் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. இதை
    வாசித்தபோது
    நினைவில் உயிர்த்தெழுந்தார்
    என் தமிழ் ஆசிரியர்

    ''எந்திரி
    நீ வருங்காலத்தில்
    மந்திரி ''

    என் நடுநிலைப்பள்ளியின் முதல் நாளில் எங்கள் தமிழ் ஆசிரியர் சொன்ன முதல் வாசகம்

    எங்களுக்கு ரெம்பவே சுவராசியமாக இருக்கும் அவருடைய தமிழ் வகுப்பு
    அதிகம் மார்கக் எடுப்பதும் தமிழில்தான் (நல்ல படிச்சதால இல்லங்க )
    அவர் சொல்லிக்கொடுக்கும் முறை மனதில் ஆழமாய் பதிந்ததால்


    அறிவில்
    உறங்கும் மாணவனை தட்டி எழுப்பி
    உர்ச்சகபடுத்துதல் வேண்டும்
    ஆசிரியனின் சொல்


    உங்களின் அனுபவத்தையும்
    அய்யன் குரலையும் சுட்டிகாட்டிய அழகிய பதிவு

    மிக்க நன்றி ஆசிரிய பெருன்தொகையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தன்மதிப்பீட்டிற்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.

      நீக்கு
  3. ஆசிரியர்களுக்காக மட்டுமல்ல....
    ஆற்றிவு படைத்த
    அனைவரிலும்
    ஆழப்பதியவேண்டிய பதிவு
    உங்கள சேவைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. தம் பேச்சுக்கலையால்
    தூங்கி விழும்
    மாணவர் கூட்டத்தை
    தட்டி எழுப்பிய
    ஆசிரியர்கள்
    ஏராளம் ஏராளம்.....

    என்றென்றும் சொன்னதை
    நினைவில் வைத்துக்கொள்ளும்
    அளவுக்கு தம் பேச்சுத்
    திறமையால்
    விளங்க வைத்த
    ஆசிரியர்கள் ஏராளம் ஏராளம்...

    அருமையானதொரு படைப்பு முனைவரே...

    பதிலளிநீக்கு
  5. இங்கு நம்முன் இருப்பவர்கள் எல்லோருமே பெரிய அறிவாளிகள்
    நாம் மட்டும் தான் முட்டாள் என்றே எண்ணி வந்திருக்கிறேன்.

    சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்! நல் ஆசானாய் நல் மாணாக்கர்களை உருவாக்கும் உங்கள் பணிக்கு, வள்ளுவரின் வாக்கு நல்ல வழிகாட்டியாய் இருப்பது உங்களுக்கு பெருமைதான்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு நல்லாசிரியருக்குத் தேவையான இலக்கணங்கள் அமையப் பெற்ற தங்களிடம் படிக்கும் மாணவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  8. நல்ல கருத்துக்கள் ! அருமையான குறள்கள் ! நன்றி சார் !

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தையுமே நான் கடைபிடித்து வருகிறேன். படித்து முடித்து ஏழு ஆண்டுகள் ஆன பிறகும், இப்போதும் மாணவர்களோடு மாணவனாக இருக்கிறேன். ஆசிரியனாக இருப்பது நான் பெற்ற வரம்,

    பதிலளிநீக்கு
  10. //மேடை நடுக்கம் ஏற்பட்டபோதெல்லாம், அதை நீக்க..
    முதலில் நமக்கு முன் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் நான மட்டுமே அறிவாளி என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் பேசுவதை அவர்கள் உற்றுநோக்க ஆரம்பித்தபிறகு...
    இங்கு நம்முன் இருப்பவர்கள் எல்லோருமே பெரிய அறிவாளிகள்
    நாம் மட்டும் தான் முட்டாள் என்றே எண்ணி வந்திருக்கிறேன்.// நன்றாகச் சொன்னீர்கள்! அருமை!

    பதிலளிநீக்கு
  11. தங்கள் கருத்து முற்றிலும் சரியே
    காரணம் நானும் ஆசிரியனாக முப்பது
    ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன் இன்றும்
    அந்த அனுபவம் பசுமையாக மனதில் உள்ளது!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. பேச்சுல இம்புட்டு விசயம் இருக்கா? பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. இதை
    வாசித்தபோது
    நினைவில் உயிர்த்தெழுந்தார்
    என் தமிழ் ஆசிரியர்

    பதிலளிநீக்கு