Wednesday, November 2, 2011

மறைபொருள் தெரிகிறதா..?

ழை, பணக்காரன்
அறிவாளி, முட்டாள்
உயர்ந்தவன், தாழ்ந்தவன்

என எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்குமான காரணத்தை வாழ்க்கை மறைத்து ஐந்து இரும்புக் கதவுகளுக்குள் வைத்துப் பூட்டிவைத்திருக்கிறது.

இந்தக் கதவைத் திறந்து பார்த்தவர்கள் மட்டுமே திரும்பிப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள்!

வியாபாரியின் பார்வைபட்ட பின் 
குப்பை கூட பணமாகிவிடுகிறது!

குட்டிக்கரணம் போடுவதால்
குரங்கு கூடத் திரும்பிப்பார்க்கப்படுகிறது!

முன்னோருக்கு உணவுபடைக்க
காக்கை கூட அதன்மொழியில் அழைக்கப்படுகிறது!

கடையில் லாபம் பெறுக
கழுதைகூட நிழற்படமாகிவிடுகிறது!

இப்படி உயிரற்ற, உயிருள்ள இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றும்..
ஏதோ புரிந்துகொண்டிருக்கின்றன..


இல்லையென்றால்..


நமக்கு ஏதோ புரியவைக்க முயற்சிக்கின்றன.

விலைமதிப்பில்லாத
இந்த இயற்கைக் கூறுகள் கூட
தேவை, தனித்தன்மை காரணமாக

விலை மதிக்க முடியாதவையாக ஆவிடுகின்றன!

விலை மதிக்கமுடியாத மனிதன் மட்டும்
தன்னை உணர்ந்துகொள்ளாததால்
விலை மதிப்பே இல்லாதவனாகிவிடுகிறான்!!

அதனால்..

கொம்பை மறந்த மாடுபோல
துயர வண்டி இழுக்கிறான்!

மந்தையில் பிரிந்த ஆடுபோல
திருதிருவென விழிக்கிறான்!

தாயின்றி அழும் குழந்தைபோல
அழுது தவிக்கிறான்!

வாழ்க்கையின் மறைபொருளை அறிந்துகொள்ள மனிதன் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல....

எத்தனையோ பேர் வாழ்க்கையின் இந்த மறைபொருளை அறிந்து, உணர்ந்து சாதித்திருக்கிறார்கள்..

இன்னொருவன் உண்பதால் நம் பசி தீராது!!

நாமே உழைப்போம்..

உடலால் உழைத்து உழைத்து மாடாகியது போதும்!!
அறிவால் உழைத்து உலகாளுவோம்!!


இதோ மறைபொருள் திறக்க ஐந்து திறவுகோல்கள்!


1. நான் ஏன் பிறந்தேன்?

2. என் தனித்தன்மை என்ன?

3. நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

4. நான் ஏன் இவர்களோடு இருக்கிறேன்?

5. நான் ஏன் இன்னொருவர் சென்ற பாதையில் செல்லவேண்டும்?

இந்தக் கேள்விகளே நான் உங்களுக்குத் தரும் திறவுகோல்கள்!!


என்ன நண்பர்களே மறைபொருள் தெரிகிறதா..??


தொடர்புடைய இடுகைகள்


48 comments:

 1. முதல் கேள்வியிலே, பலர் குழம்பி இருப்பதால், பிற கேள்விகளுக்கு செல்லும் கேள்வியே இங்கு எழவில்லை போல் தெரிகிறது

  ReplyDelete
 2. //
  கடையில் லாபம் பெறுக
  கழுதைகூட நிழற்படமாகிவிடுகிறது!
  //
  உண்மைதான்

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்ற....தமிழ்மணம் 3

  ReplyDelete
 4. //இன்னொருவன் உண்பதால் நம் பசி தீராது!!

  நாமே உழைப்போம்..//

  அருமை.
  சிந்தனையை தூண்டும் விதமான சிறப்பான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 5. ஏதோ புரியற மாதி இருக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

  ReplyDelete
 6. மறை பொருள் தெரிவது மிகக்கடினம்!

  ReplyDelete
 7. விலை மதிக்கமுடியாத மனிதன் மட்டும்
  தன்னை உணர்ந்துகொள்ளாததால்
  விலை மதிப்பே இல்லாதவனாகிவிடுகிறான்!!
  >>>
  வித்தியாசமான கோணத்தில் சிந்திச்சு இருக்கீங்க சகோ

  ReplyDelete
 8. விலை மதிக்கமுடியாத மனிதன் மட்டும்
  தன்னை உணர்ந்துகொள்ளாததால்
  விலை மதிப்பே இல்லாதவனாகிவிடுகிறான்!!
  >>>
  வித்தியாசமான கோணத்துல சிந்திச்சு இருக்கீங்க சகோ

  ReplyDelete
 9. அழகாக பல உண்மைகளை சொல்லி உள்ளீர்கள் அருமை ,

  த .ம 7

  ReplyDelete
 10. நல்லதொரு பகிர்வு. அறிவால் உழைத்து உலகாளுவோம்.

  ReplyDelete
 11. சுயசோதனையே உயர்த்தும்.

  ReplyDelete
 12. மிகவும் அற்புதமான பதிவு.

  ReplyDelete
 13. உள்நோக்கி ஒருவன் சிந்தனையை செலுத்தினாலே மறைப்பொருளை உணரத்தொடங்கிவிடுவான்...
  மனிதனின் சிந்தனையில் அதிகம் ஆக்ரமித்திருப்பது வெளி மோகம்தான்...

  மறைப்பொருளை உணர்ந்துக்கொள்ள தங்களின் ஐந்து கேளிவிகள்...
  அருமை நண்பரே...

  சிந்திக்கத்தூண்டுகிறது...

  ReplyDelete
 14. விலை மதிக்கமுடியாத மனிதன் மட்டும்
  தன்னை உணர்ந்துகொள்ளாததால்
  விலை மதிப்பே இல்லாதவனாகிவிடுகிறான்!!/

  மதிப்பு நிறைந்த பகிர்வு..

  ReplyDelete
 15. அன்புநிறை முனைவரே...
  இங்கு தாங்கள் கேட்டிருக்கும் வினாக்களுள்
  ஒன்றனுக்கு விடை தெரிந்தாலே
  மறைபொருளை பற்றிய ஒரு முடிவு தெரிந்துவிடும்...

  விடை தேட முயற்சிப்போம்....

  ReplyDelete
 16. உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .

  ReplyDelete
 17. @ராஜா MVS அழகாகச் சொன்னீர்கள் நண்பா..

  ReplyDelete
 18. @மகேந்திரன் தங்கள் புரிதலுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 19. ஒரு நிமிடம் ஓட்டத்தை நிறுத்தி
  சுயம் தேடச் செய்யும் அருமையான பதிவு
  படங்களும் அதற்கு தொடர்புடைய
  விளக்கங்களும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. sir , unga airticle super..., but na ungalukku comment panna englishla varuthu tamila varla why rply fast i am waiting.,

  ReplyDelete
 21. மறைபொருள் தேடலுக்கான கேள்விகள் சிந்திக்கவைத்துள்ளன. விடை கண்டறிவது கடினம் என்றபோதும் அதற்கான முயற்சியே பெருமையென்று நினைக்கிறேன். சுயபரிசோதனைக்கான சிந்தனைகளைத் தூண்டும் நல்லதொரு பதிவு. மிகவும் நன்றி.

  ReplyDelete
 22. @naga physics எனது வலைப்பதிவில் இடதுபுறத்தில்..

  தமிங்கிலத்தில் எழுத என்னும் இணைப்பின் வழியே பயன்படுத்திக்கொள்ளவும்..

  ReplyDelete
 23. அருமை அருமை

  ReplyDelete
 24. மத்ததெல்லாம்-
  பிறவி பயனை அடையுது!
  மனிதனை தவிர! என்பதை உணர்ந்து
  கொண்டேன்!

  ReplyDelete
 25. @Seeni வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.

  ReplyDelete
 26. ragunathan487@gmail.comJanuary 21, 2012 at 11:28 AM

  thirai porulai paarthu rasikkum manidhanukku marai porulai sindhikka vaithu irukkireergal. vaalthukkal!! naan ungal maanaviyin thanthai!

  ReplyDelete