வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 24 நவம்பர், 2012

கருத்து சொல்(லலாமா?)

ஒவ்வொருவரும் தம்கருத்துகளை மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ள நிறையவே சமூகத் தளங்கள் வந்துவிட்டன. தனிமனிதர்கள் முதல் அரசு வரை யாவரும் இன்று பல்வேறு கருத்துக்களை
 இணையமேடையில் பகிர்ந்துகொள்கின்றனர்.

சாலையில் நேரும் விபத்துக்களைப்போல சமூகத் தளங்களில் சிலரால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக, கருத்துசுதந்திரம் குறித்த சில கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன.
அரசியல்,ஆன்மீகம், விளையாட்டு, கலை, வணிகம் என பல்வேறு துறைசார்ந்து நாள்தோறும் வெளிவரும் கருத்துக்களை இன்று பார்வையாளர்கள் அச்சத்துடனேயே காண்கின்றனர். இதில் நாம் கருத்து சொல்லலாமா? வேண்டாமா?
சொன்னால் ஏதும் சட்டரீதியான சிக்கல்கள் வருமா? என்று ஒவ்வொருவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அன்று தேநீர்க்கடை வாசலில் நாளிதழ் படித்துக்கொண்டு உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை விவாதித்து வந்த மக்கள் இன்று வீட்டுக்குள்ளேயே தேநீர் அருந்திக்கொண்டு உலகில் பல்வேறு இடங்களில் வாழும் மக்களுடன் அதே செய்திகளை மனம் விட்டுப் பகிர்ந்தவருகின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைவது தன்மதிப்பீடு ஆகும். அடுத்து அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். அது சரியா? தவறா? என்ற மதிப்பீடு. இவை ஒரு மனிதனை உயரத்துக்கு அழைத்துச்செல்லும் கூறுகளாகும்.

நாம் நினைப்பதுதான் சரி. அடுத்தவர் சொல்வது தவறு. நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று மட்டும் எண்ணிக்கொண்டிருந்தால் ஒருவன் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லவேமுடியாது.
அடுத்தவர் சொல்லும் கருத்துக்களையும் செவிமடுத்துக் கேட்கவேண்டும்.தவறென்றால் திருத்திக்கொள்ளவேண்டும்.

தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் நாடு அதனால் அரசுக்கும் இது பொதுவானதாகும். எந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் முழுவதும் இருக்கிறதோ அந்த நாடு விரைவில் வளர்ச்சியடையும் என்பது உலகோர் ஒப்பிய முடிவு.

சமூகத்தளங்களில் இப்போதே உலவுபவர்களில் பலர் முகமற்றவர்களாக (அனானி) உலவிவருகிறார்கள் அதற்குக்காரணம் சட்டரீதியான கருத்துரிமை குறித்த அச்சமே. கருத்து சுதந்திரம் குறித்த தெளிவான முடிவை அரசு விரைவில் வகுக்காவிட்டால் இணையத்தில் உலவும் பலரும் இனி வரும் காலங்களில் முகமற்றவர்களாக மாறும் அவலம் நேரலாம் என்ற கருத்து மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஒரு கதை..

கடவுளே இல்லையென்று சொல்லும் ஒருவர்
கடவுள் உண்டு என்று சொல்லும் ஒருவர். இருவரும் மிகவும் அறிவாளிகள், பேசுவதில் சிறந்தவர்கள். இவர்கள் பேசுவதைக் கேட்பவர்கள் இவர்கள் சொல்வதுதான் சரி என்று எண்ணுவார்கள்.

மக்களுக்கு ஒரு ஆசை. இவர்கள் ஒவ்வொருவரும் பேசும்போது இவர்கள் பேசுவதுதான் சரியென்று தோன்றுகிறது. ஆனால் கடவுள் உண்டா இல்லையா? இரண்டில் ஒன்று தெரியவில்லையே. இவர்களை ஒன்றாக ஒரே மேடையில் பேசவிட்டால் தெரிந்துவிடுமே என்று அவர்களிடமே கேட்டார்கள். அவர்களும் பேச உடன்பட்டு வந்து 
ஒரே மேடையில் பேசினார்கள்.

கடவுள் உண்டு என்றவர் அதற்கான சான்றுகளை
 அழுத்தமாக முன்வைத்தார்.
கடவுள் இல்லை என்றவர் அதற்கான சான்றுகளை 
நன்றாக எடுத்துரைத்தார்.

மக்களுக்கு இப்போதும் குழப்பமாக இருந்தது. முடிவு தெரியவில்லை. மேடையை விட்டு இறங்கும்போது ஆத்திகரும், நாத்திகரும் 
மனதளவில் மாற்றம் அடைந்திருந்தனர்.
இவ்வளவு அழுத்தமாகப் பேசுகிறாரே ஒருவேளை கடவுள் இருக்குமோ என்று எண்ண ஆரம்பித்தார் கடவுள் இல்லை என நம்பியவர்.

இவ்வளவு தெளிவாகப் பேசுகிறாரே ஒருவேளை கடவுள் இல்லையே என்று எண்ண ஆரம்பித்தார் அதுவரை கடவுள் உண்டு என்று நம்பியவர்.

இதுதான் கருத்துசொல்வதால் ஏற்படும் மாற்றம்.

கருத்து ஊடக சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 131 வது இடம் கிடைத்திருக்கிறது. 
மக்கள் கருத்து சொல்(லலாமா?) வேண்டாமா? என்று அஞ்சிவரும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கவேண்டியது அரசின் கடமையாகும்.


தொடர்புடைய இடுகை


27 கருத்துகள்:

  1. மிக மிக அருமையான அலசல்
    இன்றைய சூழலுக்கு அவசியமான பதிவும் கூட
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வலைத்தளங்களில் கருத்து சுதந்திரம் குறித்து விரிவாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள். பொதுவாகவே வலையில் ஜாதி, மதம், இலங்கைத் தமிழர் போன்ற தலைப்புகளில் எழுதவும் கருத்துரை சொல்லவும் யோசனை செய்ய வேண்டித்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதையும் அருமையான திருக்குறளும்-சரியான விளக்கங்கள்...

    சற்று முன் ஒரு சகோதரி தளத்தில் ஒரு கருத்து இட்டேன்... மின்வெட்டு காரணமாக அதையே இங்கு பதிவு செய்கிறேன்...

    நபர் 1-ஒரு கருத்தை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்... அதற்கு நபர்-2 மாற்றுக் கருத்தை சொல்கிறார்... (அவர் மனம் புண்படாதவாறு சொல்ல வேண்டும்-அது வேறு கதை, இருக்கட்டும்...) நபர்-2 அந்த மாற்றுக் கருத்தை சொல்பதற்கு சிலரிடம் பேசி இருக்கலாம்... இல்லை புத்தகம் படித்திருக்கலாம்... அதுவும் இல்லை என்றால் சுயமாக சிந்தித்தும் இருக்கலாம்... அதற்கு நபர்-1 க்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்... அதை செய்யாமல் ஆட்டம் போட்டால் என்ன செய்வது...? (நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பவரோ...?)

    நன்றி முனைவரே...
    த.ம. 6

    பதிலளிநீக்கு
  4. உங்களின் பதிவு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கிறது.கருத்து சுதந்திரத்தை பற்றிய உங்களின் கருத்தை தெளிவாக எழுதியிருக்கிறார்கள்.உங்களின் கருத்துக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கம்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. இணைய கட்டுபாடுகள் பற்றிய முழு வரையறையை வகுத்து தெரிய படுத்தவேண்டும் ..

    பதிலளிநீக்கு
  7. கருத்திட யோசனையாகத்தான் உள்ளது. சிறப்பான அலசல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அச்சமின்றிக் கருத்திட்டமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  8. நல்ல பதிவு.மற்றவர் கருத்தை மதிக்க வேண்டும்
    வால்டேர் சொன்ன கருத்தை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. சரியான நேரத்தில் சரியான பதிவு. அனைவருக்கும் தம் கருத்தை வெளியிடத் துணிவு அதிகரிக்க வேண்டும்.

    “If freedom of speech is taken away, then dumb and silent we may be led, like sheep to the slaughter.”
    ― George Washington
    "பேச்சு சுதந்திரம் இல்லையென்றால் அமைதியாய், ஊமைகளாய், பலியிடப்படும் ஆடுகளைப் போல வழிநடத்தப்படுவோம்."-ஜார்ஜ் வாஷிங்டன்

    யாரும் ஆடாய் இருக்க விரும்புவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான பொன்மொழியை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் கிரேஸ்

      நீக்கு
  10. ஒரே விஷயத்துக்கான கருத்துக்களை மாறி மாறிக் கேட்கும்போது ஒரு குழப்பம்தான் !

    பதிலளிநீக்கு
  11. இன்றய சூழலை நன்றாக உணர்த்தீனீர்கள் கருத்துச் சுதந்திரம் என்ன என்பது பற்றிய அறிவின்மை அதிகமாக காணப்படுகிறது அதே நேரம் கருத்துச் சுதந்திரம் இருக்கு என்று கூறிக்கொண்டு சட்டச் சிக்கலான விடயங்களிலும் மூக்கை நுழைக்கின்றனர் அதற்கு உதாரணம்தான் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற கருத்துப் பிழை http://hafehaseem00.blogspot.com/2012/11/blog-post_21.html இந்த விடயத்தில் அனைவரும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் முனைவரே..
    இன்றைய சூழலில் தெளிவு படுத்தப்பட வேண்டிய செய்தி இது...
    கருத்து சுதந்திரம் என்பது என்ன....
    எவ்வாறு கையாள வேண்டும்
    அதற்கான வரைமுறைகள் தான் என்ன....

    அடுத்தவர்கள் மனது புண்படாமல்
    உரைப்பது தான் கருத்து சுதந்திரம் என்றால்....

    நாம் உழைத்து அதற்காய் செலுத்தும் வரிப்பணத்தை
    ஏப்பமிட்டு சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும்
    பெருந்தகையோரை பற்றி இங்கே
    கோபமாக பேச நமக்கு உரிமையில்லையா....

    அரசு என்பது குடிமக்களின் கடமைகளை
    எப்படி வகுக்கிறதோ அதே போன்று
    அவர்களின் உரிமைகளையும்
    வரையறுக்க வேண்டும்....

    சட்டம் என்பது சாமானியருக்கு மட்டும் அல்ல...
    அனைவருக்கும் ஒன்றே...
    என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அழகாக நம் ஒட்டுமொத்த மனநிலைகளை எடுத்துரைத்தீர்கள் நண்பரே.

      நீக்கு
  13. ஆமாம், யோசிக்கவேண்டிய விஷயம்தான், ஒவ்வொரு எழுத்தை தட்டச்சிய பிறகு யோசிக்கிறேன், இது சரியா? தவறா? வெளியிடலாமா? வேண்டாமா?

    நீங்கள் சொல்வதைப்போல் இப்படியே தொடர்ந்தால் கூடிய சீக்கிரம். இணைய உலாவிகள் இல்லாமல்போககூடும்.

    அருமையான தொகுப்புரைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர்களின் தயக்கத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றிகள் செம்மலை ஆகாஷ்

      நீக்கு
  14. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தினபதிவு

    பதிலளிநீக்கு