வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 13 பிப்ரவரி, 2013

இன்று உலக வானொலி நாள்ஒரு காலத்தில் நாகரீகத்தின், தொழில்நுட்பத்தின், செல்வத்தின் அடையாளமாக இருந்தது வானொலி ஆகும். டேப் ரிக்கார்டர், தொலைக்காட்சிகள் வந்தபின்னும் இன்றுவரை காலத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொண்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்குகிறது வானொலி.
வானொலி, எப்எம், சேட்டிலைட் வானொலி, இணைய வானொலி.. என இதன் படிநிலை வளர்ச்சி வியக்கத்தக்கது.
இன்றும் நாள்தோறும் வானொலி கேட்போர் நிறையவே இருக்கிறார்கள்.
பயணம் மேற்கொள்வோர், அலுவலகங்களில், கடைகளில் இன்றும் பலர் வானொலி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தால் கட்சிசார்புடைய செய்திகளை அவை போட்டிபோட்டுக்கொண்டு வழங்குவதால் எது நடுநிலையான சரியான செய்தி என்று தெரியாமல் இன்று மக்களிடையே குழப்பநிலையே நீடித்துவருகிறது. அதனால் தொலைக்காட்சிகளோடு ஒப்பிடும்போது வானொலி நடுநிலையுடைய செய்திகளை வழங்குகிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.

மேலும் அழுதுவடியும் தொடர்நாடகங்களும், அறிவாளியைக் கூட முட்டாளாக்கும் கேளிக்கூத்துகளும் காணும்போது குரங்கு கையில் சிக்கிய மலர் மாலைதான் நம் கையில் இந்தத் தொழில்நுட்பம் என்று தோன்றுகிறது. அதனால் பலரும் மீண்டும் என் தொட்டிலுக்கு என்று வானொலி கேட்டுவருகிறார்கள்.

இன்றைய வானொலி அறிவிப்பாளர்கள் பலர் காலில் சுடுதண்ணீர் ஊற்றியதுபோல விரைவாக, மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் அறிவிப்பாளர்களிடம் சிக்கிக்கொண்டு தமிழ் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது.

இருந்தாலும், சிறுவயதில் வானொலியில் கேட்ட நாடகங்கள், இன்று ஒரு தகவல், பட்டிமன்றங்கள், விழிப்புணர்வுசார்ந்த செய்திகள், நேர்முக வர்ணனைகள் ஆகியவற்றை இன்று நினைத்துப்பார்த்தாலும் பசுமையாக மனதில் தோன்றுகிறது. குறிப்பாக அன்றைய நாட்களில் கேட்ட தென்கட்சி சுவாமிநாதன், இளசை சுந்தரம் ஆகியோரின் தகவல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அன்றைய வானொலி தந்த மனநிறைவை இன்றைய தொலைக்காட்சி தருகிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.

14 கருத்துகள்:

 1. பண்பலை (100.5) கேட்கவில்லை என்றால் சிறிது கஷ்டமாக இருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி நண்பரே.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.

   நீக்கு
 3. அருமை! கணிணி யுகத்திலும் வானொலியின் பயன்பாடு அதிகம் தான்! அதிலும் மின்சாரம் இல்லாமலும் எங்கேயும் எப்போதும் உதவும் நண்பன் வானொலி! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி

   நீக்கு
 4. அவசர காலத்தில் அவர்கள் பேச்சும் அவசரமாக ஆகிவிட்டது

  பதிலளிநீக்கு
 5. தொலைகாட்சி வந்து வானொலியின் மவுசு குறைஞ்சு போச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி குட்டன்.

   நீக்கு
 6. அந்த நாட்களில் இருந்த ஆதிக்கம் இப்பொழுது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். மறுமொழிக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி மாதேவி

   நீக்கு