வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

இன்று மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள்


மாயூரம்
 வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர்தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். இவர்,1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேருஎன்ற பாடலை எழுதினார். தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ்மொழிக்கல்வியை தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.
இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல்தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.
அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின்மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.

ஆக்கங்கள்

வேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
·                    1862இல் சித்தாந்த சங்கிரகம் - உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
·                    1869இல் பெண்மதி மாலை - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடையாலும் கூறும் நூல்.
·                    1873இல் மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவற்றைப் புலப்படுத்துவது.
·                    1878இல் பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
·                    1878இல் சர்வ சமய சமரசக் கீர்த்தனை ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
·                    1887இல் சுகுண சுந்தரி புதினம்
·                    1889இல் சத்திய வேத கீர்த்தனை
·                    பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்

 (தரவுகளுக்கு நன்றி தமிழ் விக்கிப்பீடியா)

15 கருத்துகள்:

  1. அவசியம் அறிந்திருக்க வேண்டியதை அருமையான
    விரிவான பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. பி.மு.ச.. மற்றும் எழுதியவர் பெயர் போன்றன பெயரளவில்தான் தெரியும், அவரைப்பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. nice to read abt Mr.மாயூரம் வேதநாயகம் பிள்ளை

    பதிலளிநீக்கு
  4. வேதநாயகம் பிள்ளை பற்றிய பகிர்வுக்கு நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  5. தமிழ்ப் பதினத்தின் முன்னோடி பற்றிய அறியாத தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
  6. இவரைப்போன்ற தமிழ் சான்றோர்களை எல்லோருக்கும் தெரியப்படுத்துவது நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டு. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு