ஞாயிறு, 22 ஜனவரி, 2017

மாணவர் கட்சி.


தற்காலிக முதல்வரிடம் நிரந்தர சட்டம் கேட்டுக்கொண்டிருக்கும் நாம்...
அவசரமாகக் கூடிய இந்த மாணவர் கூட்டத்தை நிரந்தர அமைப்பாக மாற்றவேண்டும்...
இதுவரை சேவையாற்றிய அரசியல்வாதிகளுக்கு ஓய்வளிக்க வேண்டும்..
திரையரங்கங்களில் அடுத்த தலைவரைத் தேடியது போதும்..
இன்று எங்களுக்கு நீங்கள் தான் கதாநாயகர்கள், கதாநாயகிகள்.
படித்தவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும்.
படிச்சா வேலை கூட கிடைக்காது!
நடிச்சா நாடே கிடைக்கும்!
என்ற அவல நிலையை மாற்ற வேண்டும்!
வேலை தேடி அலைந்தது போதும்..
நம் மனித வளம் எவ்வாறெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களால் அபகரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தால் நாம் ஒவ்வொருவருமே பத்துபேருக்கு வேலை தரமுடியும்.
அறிவு மனித இனத்தின் பொதுச் சொத்து.
உலகின் எந்த மொழியில் எந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும் அது மனித இனத்தின் பொதுச்சொத்து..
இருந்தாலும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் நமது பங்கு என்ன இருக்கிறது? உலக நாடுகளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாம் இந்த உலகத்துக்கு என்ன கொடை வழங்கியிருக்கிறோம்.. என்று சிந்திக்கவேண்டும்.
தொலைக்காட்சி தொடங்கி நாம் பயன்படுத்தும் சமூகத் தளங்கள் வரை எல்லாம் வெளிநாட்டுக் கண்டுபிடிப்புகள். அதில் நமதுமொழியான தமிழ்மொழியில் தட்டச்சு செய்யவேண்டும் என்ற உணர்வு கூட நமக்கு இல்லை என்றால் நமது அடையாளம் இவ்வாறுதான் அழிக்கப்படும்.
ஒரு தொலைக்காட்சியும், பத்திரிக்கையும் இருந்தால் கட்சி ஆரம்பித்துவிடலாம் என்ற காலம் மாறிவிட்டது.
நியுஸ் 7 போன்ற தொலைக்காட்சிகள் போதும் நமக்கு..
யுடியுப்பில் கூட மாணவர்களுக்கு என ஒரு சேனல் ஆரம்பிக்கலாம்...
முகநூல் போன்ற சமூகத் தளங்களில் மாணவர் கட்சிக்கென ஒரு முகவரியை உருவாக்கவேண்டும்..
வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தமாட்டோம் என்று நாம் உறுதியெடுக்கும் அதே நேரத்தில் அந்த இடத்தை நிறைவு செய்யத் தேவையான உள்நாட்டு உற்பத்திக்கு நாம் முன்னுரிமையும் கொடுக்கவேண்டும்..
இளைஞர்களின் புரட்சியைக் கண்டு இன்று அரசியல்வாதிகள், நடிகர்கள், ஊடகங்கள், பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் என எங்கும் வியப்பு தான் ஏற்பட்டுள்ளது.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்வோம்...
மறதி நம் தேசிய வியாதி..
ஒரு பெரிய கோடை அழிக்காமல் சிறிய கோடாக மாற்ற அதனருகில் அதைவிட பெரிய கோடு போட்டால் போதும் என்று சிறுவயதில் படித்திருப்போம். அதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது.
இன்று தாய்மொழிக்குப் பதிலாக ஆங்கிலமொழி
குருகுலக் கல்விக்குப் பதிலாக மெக்காலே கல்வி
பாரம்பரிய விதைகளுக்குப் பதிலாக மரபணுமாற்ற விதைகள்
நாட்டுக்கோழிக்குப் பதிலாக பிராயிலர் கோழிகள்
நாட்டு மாடுகளுக்கு பதிலாக செர்சி மாடுகள்
உள்நாட்டு உணவுப் பொருள்களுக்குப் பதிலாக வெளிநாட்டு உணவுப் பொருள்கள் என அழும் குழந்தையின் கையில் பொம்மையையோ, இனிப்பையோ கொடுத்து அதன் அழுகையை மாற்றுவதைப் போலத்தான் இத்தனை காலமாக மத்திய மாநில அரசுகள் ஆட்சி செய்துவருகின்றன.
சகாயம் போன்ற நேர்மையான மனிதர்கள் தலைமையில் மாணவர் கட்சி செயல்படவேண்டும்.
இந்தியாவில் மொத்தம்,
பத்து லட்சம் பள்ளிகள்!
முப்பதாயிரம் கல்லூரிகள்!
500 பல்கலைக் கழகங்கள் உள்ளன!
இவற்றில் மொத்தம் 32 கோடி மாணவர்கள் பயில்கிறார்கள்!
இருந்தாலும் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இன்னும் நாம் முதல் 100 இடங்களுக்குள் கூட வரவில்லை..
காரணம் நம் கல்வி முறைதான். மாணவர்களின் ஆற்றலை மதிப்பட மதிப்பெண் மட்டுமே ஒரே வழி என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
கிரிக்கெட்டில் சாதிக்கமுடிந்த நாம் ஒலிம்பிக்கில் சாதிக்க முடியவில்லை. இனியாவது புரிந்துகொள்வோம்..
கல்வி என்பது பட்டங்கள் வாங்குவதோ!
வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதோ அல்ல!
கல்வி என்பது நம் ஆற்றலை நமக்குத் தெரியவைப்பது!
தன்னம்பிக்கையுடன் இந்த சமூகத்தை எதிர்கொள்ளத் துணை நிற்பது!
அன்பு மாணவர்களே இதுவரை நீங்கள் சமூகத் தளங்களில் ஏன் இவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்று பெற்றோரும், ஆசிரியர்களும் உங்களிடம் போர்க்குரல் எழுப்பி வந்தார்கள்..
அவர்களுக்குப் புரியும்படி இருந்தது இந்தப் புரட்சி.
ஒவ்வொரு மாணவர்களும் பேசிய பண்பாடு, பொது அறிவு, பன்னாட்டு அரசியல் என ஒவ்வொரு செய்திகளும் வகுப்பறைகளில் மட்டுமே கற்றவையல்ல...
இவை முகநூல், கட்செவி, டுவைட்டர் என சமூகத் தளங்களில் நீங்கள் கற்றது.
இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொண்டால்..
மதுக்கடைகள் வேண்டாம்..
இலவசம் வேண்டாம்
இளைய தலைமுறைக்குத் தரமான கல்வியும்
படிப்புக்கு ஏற்ற வேலையும் வேண்டும் என்று இனியும் கேட்டுக்கொண்டிருக்கமாட்டீர்கள்.
அந்நிலையை உருவாக்க நீங்களே முயற்சி செய்வீர்கள்..
அதனால் இனியாவது உணருங்கள்........
தமிழக இளைஞர்களின் புரட்சி என்பது உலக வரலாற்று மண்ணில்.....
மாணவர் கட்சி என்ற விதையாக விழவேண்டும்!
ஊழலற்ற இந்தியா என்ற மரமாக எழவேண்டும்!

14 கருத்துகள்:

 1. அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அருமையான எண்ணங்களின் வெளிப்பாடு
  மாணவர் கட்சி முயற்சியை வரவேற்கிறேன்.
  தமிழ் அடையாளம் மின்ன
  தமிழ் நாடு முன்னேற

  பதிலளிநீக்கு
 3. நம்பிக்கை பிறந்துள்ளது. மாணவர் எழுச்சியும் ஒற்றுமையும் நிலைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 4. திரு .சகாயம் போன்ற நல்ல மனிதர்கள் தலைமை தாங்கினால் இது சாத்தியமே !இங்கே ஒவ்வொரு இதயமும் மாற்றம் வேண்டுமென்று துடித்துக் கொண்டேயுள்ளது !முன்பு ,அஸ்ஸாம் மாணவர் அமைப்புதான் agp கட்சியாக மாறி ஆட்சியைப் பிடித்தது ,தமிழகத்திலும் இது நடக்க வேண்டும் !

  பதிலளிநீக்கு
 5. உண்மையான வார்த்தைகள். இனிமேல் எந்த விளம்பரங்களும் எங்களை போன்ற மாணவர்களை மூளை செலவு செய்ய முடியாது.

  மாணவர்களின் சக்தி பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை அனைத்து கட்சியினருக்கும் அரசுக்கும் புரிந்து இருக்கும்.

  இன்றைய தலைமுறையினர் நாளைய தலைமுறையினருக்கு ஊழல் இல்லாத நல்ல தரமான கல்வி அரசியல் அரசு அனைத்தையும் உருவாக்கி தருவோம்.

  இனிமேல், அரசியலில் படித்தவர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

  மாணவர்கள் தான் நாளைய இந்தியா. .

  நிச்சயம் நடக்கும். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 6. அருமை அருமை!!!! எல்லோரது ஆதங்கங்களும் இங்கு தொகுப்பாக !!! நம்பிக்கை பிறந்துள்ளது. இது தொடர வேண்டும்!! நாளை இந்தியா நேர்மையான இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

  அன்று கூட வைசாலி கேட்டிருந்தார் நாளைய இந்தியா? என்று கேள்விக் குறியுடன். நாங்கள் சொல்லியிருந்த பதில்..."உங்களைப் போன்ற இளைய சமுதாயத்தின் கைகளில்" என்று...

  ஆம் இப்போது எழுந்துவிட்டார்கள். பொதுமக்களும்தான்! நம்பிக்கை துளிர்க்கிறது.

  பதிலளிநீக்கு