வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 16 மே, 2011

தேர்வு என்றால் என்ன?


பள்ளிக்கூடமாகட்டும்..
பல்கலைக்கழகமாகட்டும்..

மாணவர்களை மதிப்பீடு செய்ய இக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகள்..

மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பிடுவதாக இருக்கிறதா?
படைப்பாக்கத் திறனை மேம்படுத்துவதாக இருக்கிறதா?
சிந்தனையை வளர்ப்பதாக உள்ளதா?
அறிவுத் திறன் என்பது என்ன?
3 மணிநேரத் தேர்வில் அந்த அறிவு முழுமையும் வெளிப்பட்டுவிடுமா?
உள்மதிப்பீடு, அகமதிப்பீட்டு முறைகள் எந்த அளவுக்கு மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயனளிப்பதாக அமைகின்றன?
இன்றைய கல்விமுறையையும், தேர்வுமுறையையும் பார்க்கும்போது இப்படி ஓராயிரம் கேள்விகள் மனதில் தோன்றும்.

இது நகைச்சுவைக்கா மட்டுமல்ல..

“மனதில் நிறைய இருந்தாலும்
ஒன்றுமே எழுத வராது..

அது காதல் கடிதம்!!

மனதில் எதுவுமே இல்லாவிட்டாலும்
எழுதிக்கொண்டே இருப்போம்..

அதுதான் தேர்வு!!!“

4 கருத்துகள்:

  1. இன்ட்லியில் ஏதோ ப்ரோப்லேம் போல. என்னால் வோட்டு போட இயலவில்லை. பிறகு முயற்சி செய்கிறேன்.
    போட்டிகள் அதிகம் உள்ள இடமாக தேர்வுகளும் அமைந்து விடுவதால், சரியான முறையில் மதிப்பீடு செய்யும் வகையில் ஒரு மாறுதல் வர வேண்டியதன் அவசியத்தை நன்கு சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  2. @Chitra தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி சித்ரா

    பதிலளிநீக்கு
  3. //மனதில் நிறைய இருந்தாலும்
    ஒன்றுமே எழுத வராது..

    அது காதல் கடிதம்!!

    மனதில் எதுவுமே இல்லாவிட்டாலும்
    எழுதிக்கொண்டே இருப்போம்..

    அதுதான் தேர்வு!!!//

    மிக அருமையான வரிகள் தோழரே

    பதிலளிநீக்கு