Thursday, August 11, 2011

வலைப்பதிவர்களைத் தாக்கும் நோய்கள்!


வலையுலகில் கால்பதிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் இயல்பான ஆசைகளே அவர்களைத் தொல்லை செய்யும் நோயாக மாறிப்போய்விடுகிறது. இவர்களை,

எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாதோர்!
நோயால் துன்பமடைவோர்!
நோய்கான மருந்து என்ன? என்பதை உணராதவர்கள்!
வருமுன் காப்பவர்கள்!
நோய்க்கான மருத்துவத்தை நன்கு அறிந்தவர்கள்!
என பலவகைப்பட்டவர்களாகப் பாகுபடுத்தி அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

நோய்களின் வகை.

1. தம் வலைப்பக்கத்தை இன்னும் அழகாக்க வேண்டும்.
2. வலைப்பக்கம் விரைவாகத் திறக்கவேண்டும்.
3. வலைக்கணக்கை தாக்குநர்கள் (ஹேக்கர்) தாக்கிவிடக்கூடாது.
4. வலைப்பக்கத்தில் நச்சுநிரல் (வைரசு) வந்துவிடக்கூடாது.
5. இடுகைகளை யாரும் திருடிவிடக்கூடாது (காப்பி)


மேற்கண்ட நோய்கள் தீர கொஞ்சம் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இதுவே இந்நோய் தீர சிறந்த மருந்து.

(வலைப்பக்கத்தின் அழகைவிட உள்ளே சொல்லபட்டவற்றைத் தான் பார்வையாளர்கள் விரும்புகிறார்கள் என்பது முதலில் புரியவேண்டும்.
வலைப்பக்கம் விரைவாகத் திறக்க குறைவான விட்செட்டுகள் குறைவான இடுகை எளிய அடைப்பலகையைப் பயன்படுத்தவேண்டும்.
தாக்குநர்களிடமிருந்து தப்பிக்க அடிக்கடி கடவுச் சொல்லை மாற்றவேண்டும். பிற இடங்களில் மின்னஞ்சல் கணக்கைக் கையாளும்போது மிகவும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.
வலைப்பக்கத்தில் தேவையில்லாத சுமைகளை ஏற்றக்கூடாது. கோப்புகளைச் சோதித்துப் பதிவேற்றவேண்டும்.
நம் பதிவுகளை நகலெடுக்க இயலாதவாறு நிரல்களை நம் வலைப்பக்கத்தில் சேர்க்கவேண்டும்.)

6. நிறைய பார்வையாளர்கள் வரவேண்டும்.
7. அனைவரும் கருத்துரையிடவேண்டும், பின்தொடரவேண்டும்.
8. குறைகூறும கருத்துரைகளே இடம்பெறக்கூடாது.
9. விருதுகள் தேடிவர வேண்டும்.
10. எல்லா சமூகதளங்களிலும் தம் இடுகை முன்னிலையில் இருக்கவேண்டும்.

மேற்கண்ட நோய் தீர ஒரே வழி எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்வதுதான்.

(தகுதியான இடுகையாக, சமூகத்தைப் பிரதிபலிக்கும், சிந்திக்கவைக்கும், சிரிக்கவைக்கும், இடுகை என்றால் பார்வையாளர்கள் அழைக்காமலே வருவார்கள். கருத்துரையிடாமல் செல்லமாட்டார்கள்.பின்தொடர்வார்கள். குறைகூற மாட்டார்கள். விருதுகள் தேடிவரும்.இடுகையும் எல்லா சமூகத் தளங்களிலும் முன்னிலையில் இருக்கும் தொடர்ந்து இற்றைப்படுத்தவேண்டும். பிற வலைப்பக்கங்களுக்கு தாம் அடிக்கடி செல்லவேண்டும் கருத்துரை இடவேண்டும்.ஓட்டளிக்கவேண்டும்.

வலையுலகில் என்னைத் தாக்க முயன்ற நோய்களிடமிருந்து நான் என்னை எவ்வாறு தற்காத்துக்கொண்டேன் என்ற அனுபவமே இப்பதிவு.
இளம்பதிவர்களுக்குப் பாடமாக அமையுமே என்பதாற்காக....

38 comments:

 1. மிக தேவையான நோய்களும் மருந்துகளும். சிந்தனைக்கு முதலில் சபாஷ் கூறவேண்டும். மிக்க நன்றி பல தடவை உங்களுக்கு கருத்திட முயன்று திரும்பிச் சென்றுள்ளேன் ஏதோ தவறு என்னிடமிருக்கலாம்..தொழில் நுட்பங்கள் புரியாத புதிராகவே உள்ளது.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www,kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 2. \\வலைப்பக்கத்தின் அழகைவிட உள்ளே சொல்லபட்டவற்றைத் தான் பார்வையாளர்கள் விரும்புகிறார்கள் என்பது முதலில் புரியவேண்டும்.\\

  தவறான கருத்து நண்பா! உள்ளே சிறப்பான கருத்துக்கள் இருந்தாலும் தளத்தின் வடிவமைப்பு என்பது முக்கியமானது. சந்தேகம் இருந்தால் சோதித்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்....

  ReplyDelete
 3. மேற்கண்ட நோய்கள் ஆட்கொள்ளாத எந்த பதிவரும் இல்லை...

  தீர்வுகளும் நல்லாதான் இருக்கும்...

  இருந்தாலும் தீர்வுகளைப்பற்றி நாம் யோசிக்போதவில்லை...


  சூப்பர்...

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி வேதா.
  தொழில்நுட்பம் ஒன்றும் புதிரல்ல திறக்கப்படாத புத்தகம் அவ்வளவுதான்.

  ReplyDelete
 5. நல்லதொரு இடுகை சகோ.

  ReplyDelete
 6. தங்கள் கருத்துரைக்கு நன்றி ஜிஎஸ்ஆர்.
  பலருடைய எண்ணம் தங்களைப் போலத்தான்.

  என்னைக் கேட்டால் அடிப்படையான அழகுடைய அடைப்பலகைகளே போதும் கருத்துதான் முதன்மையானது என்று கருதுகிறேன்.

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 8. அத்துணை நோய்களுக்கும் ஒரே மருந்தை தான் பரிந்துரைத்துள்ளீர்கள். வலைப்பூ மட்டுமல்ல வாழ்க்கைக்கும் உங்கள் மருந்து தான் சரியான தீர்வு.

  ReplyDelete
 9. வழிகாட்டுதல்களுக்கு நன்றி முனைவரே...

  ReplyDelete
 10. சசிகுமார் said...
  Useful post for beginners

  August 10, 2011 10:32 PM

  நன்றி சசி.

  ReplyDelete
 11. மகேந்திரன் said...
  நீங்கள் சொன்ன அத்தனையும் முத்தான உண்மைகள்.
  எம்மைப்போன்ற புதிய பதிவாளர்களுக்கு
  இது பேருதவியாக அமையும்.
  மிக்க நன்றி நண்பரே.

  August 10, 2011 10:55 PM

  நன்றி மகேந்திரன்

  ReplyDelete
 12. 'பரிவை' சே.குமார் said...
  முனைவரே...
  நல்ல பகிர்வு அதுவும் அவசியமான ஒன்று...
  பகிர்ந்தமைக்கு நன்றி.

  August 10, 2011 11:19 PM


  நன்றி குமார்.

  ReplyDelete
 13. சேட்டைக்காரன் said...
  //மேற்கண்ட நோய் தீர ஒரே வழி எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்வதுதான்.//

  நல்லாருக்கு! :-)

  August 11, 2011 12:39 AM

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சேட்டைக்காரன்.

  ReplyDelete
 14. குணசேகரன்... said...
  good information..nice post

  August 11, 2011 2:03 AM

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குணசேகரன்.

  ReplyDelete
 15. RAMVI said...
  பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி குணசீலன்.

  August 11, 2011 1:16 AM

  தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராம்வி.

  ReplyDelete
 16. VERY NICE POST ! AND USE FULL TOO!! :-)

  ReplyDelete
 17. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜீ

  ReplyDelete
 18. உங்கள் அனுபவபூர்வமான ஆலோசனைகளை நேர்த்தியாக பகிர்ந்து இருக்கீங்க.

  ReplyDelete
 19. ஹா...ஹா...சூப்பருங்கோ.

  ReplyDelete
 20. பதிவர்களின் பதிவுலக நோயை சரியாய் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறீர்கள். தேவையான பதிவு. நோயின் அறிகுறிகளை குணப்படுத்துவதை விட அதன் காரணத்தை கண்டுபிடித்து மாற்றுபவரே நல்ல மருத்துவர். அதேபோல், நீங்க ஒற்றை வரியில் சொன்ன மருந்து அழகு. ஆனால் அது ஒரு தவம் போல் கைவர வேண்டும்.

  ReplyDelete
 21. மிக அருமையான பதிவு! கண்ணியமான எழுத்தைப் பிரதிபலிக்கும் எந்த வலைத்தளமும் நிச்சயம் புகழடையும் என்பதில் சந்தேகமில்லை!!

  ReplyDelete
 22. கருத்துரைக்கு நன்றி மனோ

  ReplyDelete
 23. முதல் முறையாக உங்கள் படைப்புகளை வாசிக்கிறேன்...உங்கள் வலைவலம் சென்று வருகிறேன்...

  ReplyDelete
 24. எனக்கு இருக்கும் நோய்களை அடையாளம் கண்டு கொண்டேன்..
  நன்றி!!

  ReplyDelete
 25. சூப்பர் நா நம்பல மாரி கத்துகுட்டிகளுக்கு செம மேட்டர்..

  ReplyDelete
 26. வருகைக்கு நன்றி கும்மாச்சி நன்றி அபி.

  ReplyDelete