வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 5 நவம்பர், 2011

சிரிப்பு மருத்துவம்!
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று சிரிப்பை வகைப்படுத்துவர் தொல்காப்பியர்.
நம்ம தாத்தா வள்ளுவர் கூட “துன்பம் வரும் போதும் சிரிங்க“ன்னு சொல்லியிருக்கார்.
வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப்போகும் என்று நம் முன்னோர் சொல்வார்கள்.
சிரிப்பின் தோள்களில் வெற்றி அமர்ந்திருக்கிறது.
அழுகையின் தோளில் என்றும் தோல்வியே குடிகொண்டிருக்கிறது.

உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவனை நீயும் சிரிக்க வை!
உன்னைப் பார்த்துச் சிரிப்பவனை நீ சிந்திக்கவை!

என்றெல்லாம் பொன்மொழிகள் வழக்கில் உள்ளன.
§  அசட்டுச்சிரிப்பு

§  ஆணவச்சிரிப்பு

§  ஏளனச்சிரிப்பு

§  சாகசச்சிரிப்பு

§  நையாண்டிச் சிரிப்பு

§  புன்சிரிப்பு (புன்னகை)

இன்றைய சூழலில் சிரிப்பு மருத்துவம் அதிக வழக்கில் வந்துவிட்டது.

ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறது. ஆனால்
பெரியவர்களோ 15 முறைதான் சிரிக்கிறார்களாம். "தினமும் குறைந்த பட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

சிரிப்பு மருத்துவர்கள்.
தெனாலிராமன் கதை, முல்லா கதை, மரியாதைராமன் கதை, விக்கிரமாதித்தன் கதை, பஞ்சதந்திரக்கதை, பரமார்த்தகுரு கதை என நம் இலக்கியக் கதை மரபுகள் தொடங்கி இலக்கியப் பரப்பில் நிறைய சிரிப்பு மருத்துவர்களைக் காணமுடிகிறது.

தமிழ்த்திரையுலக வரலாற்றில் அந்தக் காலத்து நகைச்சுவை நடிகர்கள் தொடங்கி இன்றைய நகைச்சுவை நடிகர்கள் வரை நிறைய சிரிப்பு மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்..

இன்றைய சூழலில் சிரிப்பு.

ஒருவரின் சிரிப்பை வைத்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று புரிந்துகொள்ளமுடியாது.
ஏன் என்றால் போலிச்சிரிப்புகளே பலரும் சிரிக்கிறார்கள்.
சிரிப்பின் இலக்கணமே நிறைய மாறிவிட்டது.

திரையுலகம் அப்படியொரு மூளைச் சலவையை நமக்குச் செய்துவருகிறது.
ஒருவரின் நிறம், உயரம், அழகு, உடல் குறைபாடு, மனக்குறைபாடு போன்றவற்றைச் சொல்லி சிரிப்பை வரவழைப்பது அதிக வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.
இதிலும் சில வகைப்பாடுகள் உண்டு..
1.       
   தன்னைத் துன்புறுத்திக் கொண்டு இன்னொருவரைச் சிரிக்கச் செய்வது.
2.       இன்னொருவரைத் துன்புறுத்திப் பலரைச் சிரிக்கச் செய்வது.
3.       இன்னொருவர் போல கேலி செய்து நடித்துக் காட்டுவது.

இதற்குப் பெயரா சிரிப்பு..??

சிரிப்பு ஒருவரைத் திருந்தச் செய்யலாம்.. வருந்தச் செய்யலாமா??

ஒருவரிடமிருந்து நயமாக, நலமாக, இயல்பாக சிரிப்பை வரவழைக்க ஆயிரம் வழிகள் உண்டு..

அன்பு நண்பர்களே.. 
இனிமேல் நாமும் ஒருவரைப் பார்த்துச் சிரிக்கும் முன்னரும், 
ஒருவரைச் சிரிக்கவைக்கும்போதும் இதனைக் கொஞ்சம் சிந்திப்போமே..

தொடர்புடைய இடுகைகள்

40 கருத்துகள்:

 1. சிரிப்பில் இத்தனை வகைகளா

  பதிலளிநீக்கு
 2. சிரிப்பு மட்டும் இல்லையென்றால்.. நாமும் மிருகங்கள் தான்...

  பதிலளிநீக்கு
 3. சிரிப்புக்கு மொழிகள் தேவையில்லை...

  வயிறு வலிக்க சிரிக்க வேண்டும்..
  பிறர் வயிறெறிய சிரிக்க கூடாது..

  பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 4. வலிந்தும், வலியோடும் சிரிக்கப் பழகிவிட்ட இந்த இயந்திர வாழ்க்கையில், யதார்த்த சிரிப்பின் அவசியம் அதிகமாகிவிட்டது.
  நல்ல பகிர்வு நண்பா....

  பதிலளிநீக்கு
 5. நகைச்சுவையின் அர்த்தம் பல நேரங்களில் மாறிவிடுகிறது...

  ஒருவர் தவறி கீழே விழுந்து விட்டால் அனேகப்பேருக்கு முகத்தில் சிரிப்புதான் எழுகிறது. விழுந்தவரை தூக்கிவிடவேண்டும் என்ற எண்ணம் சிலருடைய மனதில் தான் உதிக்கிறது...
  விழுந்தவரே எழுந்துவிட்டு முதலில் சுற்றிமுற்றி பார்க்கிறார்... ஏன்?
  நம்மை பார்த்து யாராவது சிரிக்கிறார்களா..? என்று...

  நம்மை அறியாமலேயே மனிதனுக்குள் ஊடுருவி விட்ட மிக மட்டமான குணங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து...
  பலர் கட்டாயம் சீர்த்திருத்திக் கொள்ளவேண்டியது...

  பதிலளிநீக்கு
 6. சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே பாடல் நினைவுக்கு வந்தது முனைவரே....

  நல்ல பகிர்வு...

  பதிலளிநீக்கு
 7. கண்டிப்பாக சிந்திப்போம் தோழரே

  பதிலளிநீக்கு
 8. புன்னகை முகத்திற்கு நல்லது, ஏளனச் சிரிப்பு மூஞ்சிக்கு நல்லது.

  பதிலளிநீக்கு
 9. சிரிப்பு வருது சிரிப்பு வருது
  சிரிக்க சிர்க்க சிரிப்பு வருது
  சிரிப்பு வருது சிரிப்பு வருது
  சிரிக்க சிர்க்க சிரிப்பு வருது


  இந்தப்பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
 10. இன்றைய சூழலில் சிலர் சிரிக்க மறந்துவிட்டனர்,சிலர் போலியாக சிரிக்கின்றனர்!

  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. சிரிப்பின் வகைகள் என்றதுமே
  முதலில் கலைவாணர் தான் மனதில்
  திரை விரித்து வருகிறார்....
  மனிதனுக்கே உரித்தான அபூர்வ குணம் சிரிப்பு...

  சிரிப்பு இயல்பாக வரவேண்டும்,

  அழகாய் சொல்லியிருக்கீங்க முனைவரே.

  பதிலளிநீக்கு
 12. நல்ல சிரிப்பு. அதை விளக்கியது அதனினும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 13. @!* வேடந்தாங்கல் - கருன் *! அசட்டுச் சிரிப்பு அறியாமை காரணமாகத் தோன்றுவது நண்பா.

  பதிலளிநீக்கு
 14. @கவி அழகன் வாய்விட்டுச் சிரித்தமைக்கு நன்றிகள் கவி.

  பதிலளிநீக்கு
 15. @ராஜா MVS ஆழமாகச் சிந்தித்து அழகாகச் சொன்னீர்கள் நண்பா.

  பதிலளிநீக்கு
 16. வாய் விட்டு சிரித்தல் , நோய் விட்டு போகும்...,

  பதிலளிநீக்கு
 17. சித்த மருத்துவம் தெரியும்
  சிரிப்பு மருத்துவம் தெரிய வைத்ததற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 18. வேறு எந்த ஜீவராசிகளும் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு!!

  பதிலளிநீக்கு
 19. உண்மையாக வாய்விட்டு மனம்விட்டு சிரிக்க குழந்தைகளிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும். அக்குழந்தைகளையும் தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றன, திரைப்பட நகைச்சுவைகள். பிறரது துன்பம் கண்டு சிரிப்பதை விடவும் சிரிக்காமலிருப்பதே நலமென்னும் அளவுக்கு இன்றைய திரைப்படங்கள் நகைச்சுவையைக் கேலிக்கூத்தாக்கிவிட்டன.மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 20. @கீதா தங்கள் புரிதலுக்கும், சான்றுக்கும், கருத்துரைக்கும் நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 21. @சி.பி.செந்தில்குமார்

  இடுகையின் நீளம் கருதி இதனை தொடர்புடைய இடுகை என்று இணைப்பாக வெளியிட்டிருக்கிறேன் நண்பா.

  பதிலளிநீக்கு