வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 4 நவம்பர், 2011

சமூக அவலங்கள்!


சிறந்த எரிபொருள் எது?

மின்சாராம்
எரிவாயு
மக்களின் வயிறு!


அதிக மறதியுடையவர்கள் யார்?

வயதானவர்கள்
அரசியல்வாதிகள்
மக்கள்!

காலந்தோறும் ஊழல்?

நேற்று இலட்சம்
இன்று கோடி
நாளை பில்லியன்!

தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க அடிப்படைத்தேவை?

நாளிதழ்
தொலைக்காட்சி
பொய்யை உண்மைபோல கூறும் திறன்!

இன்றைய கல்வி?

மனப்பாடம் செய்யம் இயந்திரங்களை உருவாக்குகிறது
பணம் ஈட்டும் கருவிகளைப் படைக்கிறது

வணிகமாகிவிட்டது!


தொடர்புடைய இடுகைகள்..


43 கருத்துகள்:

 1. படத்திலே புரியுது முனைவரே ..........

  பதிலளிநீக்கு
 2. அத்தனையும் நிதர்சனம் முனைவரே...

  இதில் வயிறு எரிபடும் பொருளாக காலங்காலமாக இருக்கிறது...
  மக்கள் மறதியுடைவர்களாகவும், மறக்கப்படுபவர்களாகவும்
  இருக்கிறார்கள்..
  என்ன செய்ய...
  இதைத்தான் குடியரசு என்றும் ஜனநாயகம் என்றும்
  சொல்லிக்கொள் (கொல்) கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 3. இழிவானது உலகம் மட்டும் தானா நண்பா அதை வேடிக்கை பார்க்கும் நாமும் தானே

  பதிலளிநீக்கு
 4. அத்தனையும் உண்மை..

  இது என்று மாறுமோ...
  வேதனையுடன் காத்திருக்க வேண்டியதுதான்...

  பதிலளிநீக்கு
 5. அவலங்களை போக்க அனைவரும் சிந்திக்க வேண்டும் .. சிந்திக்க வைக்க நல்ல தலைவன் வேண்டும் .. அந்த தலைவன் மக்களின் நலனையே காண வேண்டும் ..
  ஐயோ நான் ஏதோ உளற ஆரம்பித்து விட்டேன் ..

  முனைவரே உண்மை சுடுகிறது

  பதிலளிநீக்கு
 6. கார்ட்டூன்கள அருமை.

  இன்றைய கல்வி, வணிகமாகிவிட்டது என்பது உண்மை.

  நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சிறந்த கேள்வி பதில்கள்... ஆனால் அனைத்தும் சுடும் நிஜங்கள்...

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 8. எல்லாம் உண்மைகள் என்பதைவிட... இதில் திருத்தங்களே இன்றைய அவசியம் தேவை...

  பதிலளிநீக்கு
 9. ஒரு மதிப்பெண் வினாக்கள் போல் உள்ளது. மதிப்பெண் முக்கியமல்ல.
  மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும். மாற்றம் கொண்டு வர முயற்சி
  செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. சமூக அவலங்கள்
  இந்த உலகத்தில் தனி ஒரு மனிதனால் தீர்மானிக்க முடியாத ஒன்று
  தாங்கள் கூறும் அவலங்களுக்கு
  காலம் தான் விடை என்று சொன்னால் அது தவறு.
  இந்த அவலங்களை ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே அலசினால் அதற்கான விடை
  அந்தந்த அவலங்கள் வினவுக்கு விடையான வழி கிடைக்கும்
  இந்த இடுகைக்கு தனியொரு மனிதன் விடைகூற முடியாத ஒன்று..........

  நல்ல நல்ல பதிவன்றோ
  நானிலம் விடை காண துடிக்கும் பதிவன்றோ
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
  வலைப்பதிவு வாசமாகட்டும்
  வயதாகாத வலிமையான வலைப்பூ-இதுவே
  என் அன்பன்றோ........

  பதிலளிநீக்கு
 11. இன்றைய கல்வி?

  மனப்பாடம் செய்யம் இயந்திரங்களை உருவாக்குகிறது
  பணம் ஈட்டும் கருவிகளைப் படைக்கிறது//

  மிக அருமையாக சொன்னீங்க முனைவரே! அருமை பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. தாங்கள் கூறியது முற்றிலும் சரியே.

  பதிலளிநீக்கு
 13. அருமையான நல்ல பதிவு ..
  பகிர்விற்கு நன்றி ..
  http://nallavankavithaigal.blogspot.com/

  பதிலளிநீக்கு
 14. அவலங்கள் அதிகரித்தபடியே இருக்கிறது.

  விடிவும் விரைவில் நிகழும்!

  பதிலளிநீக்கு
 15. மனப்பாடம் செய்யம் இயந்திரங்களை உருவாக்குகிறது
  பணம் ஈட்டும் கருவிகளைப் படைக்கிறது//


  மறதி மக்களுக்கே இன்றைய‍ அவல நிலை!

  இவை ஏன் அனைத்துமே உண்மை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 16. @ஜ.ரா.ரமேஷ் பாபு அழகாகச் சொன்னீர்கள்..

  மறுக்க முடியாத உண்மை நண்பா..

  பதிலளிநீக்கு
 17. @அரசன் இது உளறல் அல்ல நண்பா..

  இது உங்கள் உள் மனக் குமுறல்.

  பதிலளிநீக்கு
 18. @RAMVIஇணையத்தில் கிடைத்த நிழற்பங்கள் தான் இராம்வி..

  வருகைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 19. @Sankar Gurusamy தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி நண்பா

  பதிலளிநீக்கு
 20. @புலவர் சா இராமாநுசம் தங்கள் வாசித்தலுக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் புலவரே..

  பதிலளிநீக்கு
 21. //சிறந்த எரிபொருள் எது?

  மக்களின் வயிறு!//

  எரியுதுங்க.

  பதிலளிநீக்கு