வியாழன், 17 நவம்பர், 2011

எதிர்பாராத பதில்கள்.


விக்கிப்பீடியா : எனக்கு எல்லாம் தெரியும்..


கூகுள் : என்னிடம் எல்லாம் உள்ளது..

முகபுத்தகம் : எனக்கு எல்லோரையும் தெரியும்..

இணையம் : நான் இல்லையென்றால் உங்களுக்கு இதெல்லாம் கிடையாது!!

மின்சாரம் : என்னங்கடா அங்க சத்தம்??????

--oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo--

நடத்துநர்   : எல்லோரும் சீட்டு வாங்கியாச்சாப்பா...

பயணி  : ஓட்டுநர் தூங்கிக்கிட்டு பேருந்தை ஓட்டுறதப் பார்த்தா எல்லோரும் மொத்தமா சீட்டு வாங்கியாச்சுன்னு தான் நினைக்கிறேன்.. 

--oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo--

மருத்துவர் :  உங்களை முழுவதும் சோதனை செய்து பார்த்துட்டேன். உங்களுக்கு வந்த நோய் என்ன என்றே தெரியவில்லை!!


ஆமா புகையிலை போடற பழக்கம் உண்டா??


நோயாளி : எதுக்குங்கய்யா அதைக் கேட்கறீங்க..?
அஞ்சாறு ஏக்கரில புகையில தான் போட்டிருக்கேன்..

மருத்துவர் : !!!


--oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo--

நம்மாளு :  ஐயா உங்க வங்கியில கல்விக் கடன் கொடுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன் என் பையனுக்காக அதை வாங்கலாம்னு வந்தேங்க..

வங்கி மேலாளர் : ஆமா.. எவ்வளவு வேணும்..?

நம்மாளு :  ஐயா ஒரு இலட்சம் ரூபாய் போதுங்க..
வங்கி மேலாளர் : உங்க பையன் என்ன படிக்கிறான்..

நம்மாளு : இப்பதாங்க எல்கேசில சேர்க்கபோறேன்...
வங்கி மேலாளர் : !!!!!

--oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo----oOo--

36 கருத்துகள்:

 1. ஆம் ....எதிர்பாராத பதில்கள்.//

  நன்றி ..

  பதிலளிநீக்கு
 2. எல்லா நகைச்சுவைத் துணுக்குகளும்
  அருமையோ அருமை
  குறிப்பாக கரண்ட்டின் அலம்பல் அருமை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் முனைவர் அவர்களே..

  இரண்டாவது பத்தியில் தந்தையின் பரிதவிப்பை உணர்கிறேன்

  அருமை

  பதிலளிநீக்கு
 4. //மின்சாரம் : என்னங்கடா அங்க சத்தம்??????//கலக்கல் அன்பரே ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 5. முதலில் வந்த மின்சாரத்தின் குரலுக்குச் சிரிக்க ஆரம்பித்தவன், கடைசி துணுக்கைப் படிக்கும் வரை நிறுத்த முடியவில்லை. பிரமாதம் முனைவரே...

  பதிலளிநீக்கு
 6. எதிர்பாராத பதில்களை எதிர்பார்க்கவில்லை முனைவரே,
  நகைச்சுவைகள் நல்ல சுவையாக இருந்தன..

  பதிலளிநீக்கு
 7. நன்றாக சுவைத்தோம். தொடரட்டும்!.. பதிவுக்கு நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு