வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 7 நவம்பர், 2011

அடக்கம்.


சுதந்திர தினம்
குடியரசுதினம்
தீபாவளி
பொங்கல்

என எல்லா விழா நாட்களும் இப்போது தொலைக்காட்சிகளிலேயே கொண்டாடப்படுகின்றன.

இராசிபலன்கள், விளம்பர மூளைச்சலவைகள், பொய்யான செய்திகள், சிறப்புத் திரைப்படங்கள், பட்டிமன்றங்கள் என இவற்றுக்கே இன்றைய மக்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

அதிலும் கிரிக்கெட் என்றால் ஊரடங்கு உத்தரவு போட்டதுபோல தொலைக்காட்சிப் பெட்டிகளிலேயே மக்கள் அடக்கமாகிவிடுகின்றனர். 

வீட்டுக்கு விருந்தினர் வந்தால் கூட அவர்களிடம் பேச விளம்பர இடைவேளைகளையே எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்..

தொடர் நாடகம் பார்த்தல் இதை விடக் கொடுமையானது. தமிழகத்தில் அரசு கேபிள் என்ற சட்டம் கொண்டுவந்தபோது பல தனியார் தொலைக்காட்சிகள் தடைசெய்யப்பட்டன. இச்சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று எங்களால் தொடர்நாடகம் பார்க்கமுடியவில்லை என்று புகார் மனு கொடுத்த புதுமைபெண்கள் வாழும் காலம் இது... 

இந்த கொடுமைகளை எண்ணும்போது கவிஞர் காசியானந்தன் அவர்களின் இந்த நறுக்கு தான் என் நினைவுக்கு வருகிறது.

தொடர்புடைய இடுகைகள்

32 கருத்துகள்:

  1. நறுக்கென்று குத்துவது ஊசி-மிக
    நயமாக பாடியுள்ளார் காசி
    பொறுகின்ற வகையிலா இன்று-தம்
    பொன்னான நேரத்தைக் கொன்று
    வெறுக்கின்ற வகையிலே நன்றும்-தினம்
    வீணாகத் தொலைக்காட்சி என்றும்
    அறுக்கின்ற நிலையவர் சொல்ல-நீர்
    அப்படியே தந்ததும் நல்ல

    நன்றி முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூன் ஒன்றே எல்லா விஷயத்தையும் விளக்கி விட்டது. இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. நாம் நினைத்தால் மாற்றிக் கொள்ள முடியும்தானே? முனைய வேண்டும் முனைவரையா. அக்கறையான பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இந்த தொலைக்காட்சி பெட்டி முன்னாலேயே பொன்னான நேரத்தினைக் கழிப்பவர்கள் தான் எத்தனை பேர்.... :(

    அதுவும் பண்டிகை நாட்கள் எனில் இன்னும் மோசம்... கவிதை சொன்னது போல அடக்கம் செய்யப்படுகிறோம்....

    பதிலளிநீக்கு
  4. ஆம் ஐயா,கொடுமையாகத்தான் இருக்கு.

    அடக்கம் பற்றிய அந்த கவிதை அருமையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. அடக்கம் செம சூப்பர்.. தொலைக்காட்சி பெட்டியுமே ஒரு சவப்பெட்டிதான். சவம்போன்றுதான் பார்க்கிறோம்.த.ம 4

    பதிலளிநீக்கு
  6. நாமதான் பகுத்தறிவையே அடக்கம் பணிட்டமே. அப்புறம் என்ன

    பதிலளிநீக்கு
  7. இன்றைய மக்களை சிந்திக்கவிடாமல் அவர்களின் மூலையை மழுங்க வைத்த ஒன்று இந்த தொலைக்காட்சிப் பெட்டி...
    அதுவும் தொடர் நாடகங்களை பார்க்கிறவர்கள் மனிதன் என்ற சிந்தனையை முழுமையாக தொலைத்தவர்கள்... நிறைய கற்பனைகளிலேயே தன் வாழ்நாளை ஓடிக்கொண்டிருப்பவர்கள்...

    இதற்கு ஆங்கில கவிஞன் ஒரு பெயர் வைத்தான் Idiot Box என்று...

    இந்த Idiot Boxசை மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே சில நல்ல நிகழ்ச்சியும் அவ்வப்போது ஒளிப்பரப்பாகும் அது விதிவிளக்கு...

    பதிலளிநீக்கு
  8. விருந்தோம்பலை விற்று
    தொலைந்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  9. discovery channel, தமிழில் பலர் வீடுகளில் ஆட்சி புரிகிறது தோழர்
    சதா சர்வ காலமும் சீரியலில் மூழ்கும் என் மனைவியும்.. கார்டூன் அலைவரிசையில் சிக்கும் என் பிள்ளைகளும் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் இந்த discovery அலை வரிசையை காண்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  10. //வீட்டுக்கு விருந்தினர் வந்தால் கூட அவர்களிடம் பேச விளம்பர இடைவேளைகளையே எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்..//

    100 % உண்மை

    பதிலளிநீக்கு
  11. சீரியல் நடந்தால் சாப்பாடு கிடையாது

    பதிலளிநீக்கு
  12. இதுவும் ஒரு போதை மாதிரிதான்
    விழிப்பூட்டும் பதிவு
    த.ம 8

    பதிலளிநீக்கு
  13. ஆம் முனைவரே,
    திருவிழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில்
    அதிக நேரம் தொலைக்காட்சிகளில் தான் இன்றைய
    தலைமுறைகள் பொழுதைக் கழிக்கின்றன..
    மீதி நேரங்கள் இணைய தளத்தில்...
    கிட்டத்தட்ட அடிமை என்றே கூறிவிடலாம்..

    படிக்கும் பழக்கம் கிட்டத்தட்ட அறவே ஒழிந்து வருகிறது..
    காலக் கொடுமைதான் ...

    பதிலளிநீக்கு
  14. அது ஒரு போதை வஸ்து போல கட்டிப் போட்டு விடுகிறது நண்பரே,இதனால் பல வீட்டில் பிறச்சனையே வந்துள்ளது .பகிர்வுக்கு நன்றீ நண்பா ,த.ம 10

    பதிலளிநீக்கு
  15. சரியான ஆதங்கம்... பகிர்வுக்கு நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
  16. @ராஜா MVS அதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தேடிக் காண்பதே நம் கடன்..

    நல்ல தலைமுறையை உருவாக்க நம்மால் இயன்றதைச் செய்வோம் நண்பா.

    பதிலளிநீக்கு
  17. @suryajeeva உயிர்களின், இயற்கையின் கூறுகளை அறிந்துகொள்ளும் இந்தத் தொலைக்காட்சி வரவேற்றலுக்கு உரியது..

    பதிலளிநீக்கு
  18. @Ramani இந்தப் போதையிலிருந்து நல்ல பாதைக்கு மாற்றவேண்டியது நம் எழுத்துக்களின் கடமைதானே அன்பரே..

    பதிலளிநீக்கு
  19. @மகேந்திரன் படித்தல் என்பதைத் தூக்கம் வரவழைக்கும் மருந்தாகத்தான் இன்று பலர் பயன்படுத்துகிறார்கள்.

    பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்..

    எனக்கெல்லாம் தூக்கம் வரலன்னா..

    புத்தகத்தை எடுத்து நாலு பக்கம் படிப்பேன் உடனே தூக்கம் வந்திடும் என்று..

    அதிலும் பாடப்புத்தகம் என்றால் உடனே தூக்கம் வந்திடுமாம்...

    பதிலளிநீக்கு
  20. அட! இதென்ன அதிசயம். இதே கருத்து எனது வலைப்பூவிலும்.

    http://vaazhveperaanantham.blogspot.com/2011/09/blog-post_10.html

    பதிலளிநீக்கு