Wednesday, November 23, 2011

மாணவர்களின் உடலசைவு மொழிகள்.

வகுப்பறையில் மாணவர்களைப் புரிந்துகொள்தல் என்பது ஒரு கலை.
ஒவ்வொரு மாணவர்களும் ஒரு புத்தகம் போல..
அந்த ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பக்கங்களைக் கொண்டிருக்கும்..

நாள்தோறும் படித்தால் மட்டுமே அவர்களைப் புரிந்துகொள்ளமுடியும் என்பது என் அனுபவம்.

என் பார்வையில் மாணவர்களின் உடலசைவு மொழிகளுக்கு நான் புரிந்துகொண்ட பொருள்களை என்னைப் போன்ற கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கும் பயன்தருமே என்பதற்காக 
வரிசைப் படுத்தியுள்ளேன்..1. தலையைச் சொறிதல்.
வியப்பு, புதிர், குழப்பம், மறதி

2. ஆசிரியரையே உற்று நோக்குதல்
நான் உங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால்..
என்னை மட்டும் கேள்விகேட்காதீர்கள்.

3. ஆசிரியரின் கண்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தல்.
நான் உங்கள் கண்களைப் பார்த்தால் உண்மையை உளறிக்கொட்டிவிடுவேன்.

4.கொட்டாவி விடுதல்.
எதுவும் புரியலை, பிடிக்கல, தூக்கம் வருது, வேற எதாவது பேசுங்களேன்.

5.நன்றாகத் தலையாட்டுதல்.
எல்லாம் புரிகிறது.
எதுவும் புரியலை.
தூக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையே போராடிக்கொண்டிருக்கிறேன்.

6.பேசும்போது அடிக்கடி கண்சிமிட்டுதல்
நான் சொல்வது முற்றிலும் பொய்.

7.திட்டும்போதெல்லாம் சிரித்தல்.
எனக்கு வலிக்கலையே, இதுக்கெல்லாம் நாங்க வருத்தப்படுவோமா..

8. தேர்வு எழுதும்போது எழுதுகோலைச் சுற்றுதல்
சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

9. கண்ணத்தில் கைவைத்தல்.
எப்படா இந்த வகுப்பு முடியும்!

10. கடிகாரத்தைப் பார்த்தல்.
வகுப்பு முடிஞ்சும் இன்னும் ஏன் மணி அடிக்கல?


தொடர்புடைய இடுகை


கல்வி உளவியல்

48 comments:

 1. அனுபவம் பேசுகிறது..! அனைவரும் மாணவப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தாமே... கடைசி இரண்டு விஷயங்களும் நான் மாணவனாக இருந்த காலத்தில் நினைத்ததுண்டு. பயனுள்ள பகிர்வு முனைவரையா...

  ReplyDelete
 2. நன்றாகத் தலையாட்டுதல்.
  எல்லாம் புரிகிறது.
  எதுவும் புரியலை.
  தூக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையே போராடிக்கொண்டிருக்கிறேன்.

  இதை புரிஞ்சுக் கொள்ளவே முடியாது போலிருக்கே

  ReplyDelete
 3. மிகச் சரியாக கணித்துள்ளீர் முனைவரே!
  அத்தனையும் அனுபவ உண்மை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. வகைப்படுத்தல் நன்று முனைவரே,
  அத்தனையும் செய்தபோது இப்படியெல்லாம் தோன்றவில்லை
  இப்போது சரிதான் எனப் படுகிறது...

  ReplyDelete
 5. ஒவ்வொரு மாணவர்களும் ஒரு புத்தகம் போல..
  அந்த ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பக்கங்களைக் கொண்டிருக்கும்..


  நாள்தோறும் படித்தால் மட்டுமே அவர்களைப் புரிந்துகொள்ளமுடியும் //

  ந‌ல்ல‌ அவ‌தானிப்பு! போத‌னைக்கு அடித்த‌ள‌த்தில் இப்ப‌டியான‌ நுணுக்க‌ங்க‌ள் அனுப‌வ‌ வாயிலாக‌வே கிடைக்கின்ற‌ன‌. இதெல்லாம் க‌ட‌ந்து ந‌ம் சொல் காதிலேறி ம‌ன‌சில் நின்று...

  ReplyDelete
 6. மாணவர்களை சரியாக புரிந்து வைத்து உள்ளீர்கள்

  ReplyDelete
 7. ம்ம்ம்..! அனுபவம்.

  ReplyDelete
 8. மாணவர்களுடைய மனோ நிலையை சரியா கணிச்சு இருக்கீங்க.,.

  ReplyDelete
 9. உடல் மொழி விளக்கம் ஒரு ஆசிரியரின் பார்வையில்
  மிக மிக அருமை
  த.ம 7

  ReplyDelete
 10. மாணவர்களை நன்றாக படித்திருக்கிறீர்கள் நண்புரே....

  ReplyDelete
 11. நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 12. மாணவர்களின் உடல் அசைவுகளைக் கொண்டு இத்தனை அர்த்தம் கண்டுபிடித்துள்ள பேராசிரியர் உண்மையிலேயே சிக்மன் பிராய்டா?

  வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  முனைவர் துரை.மணிகண்டன்.

  ReplyDelete
 13. மாணவர்களின் நிலை உணர்ந்து பாடம் நடத்துவதென்பது மிக உயரிய பண்பு...
  அதில் தங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்களே...

  வாழ்த்துகள்... நண்பரே...

  ReplyDelete
 14. அடேயப்ப்பா இப்படியெல்லாமும் கண்டுபிடிக்கலாமா? நான் வியப்பில் புருவத்தை உயர்த்துகிறேன்!! நல்ல பகிர்வு!

  ReplyDelete
 15. அந்த ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பக்கங்களைக் கொண்டிருக்கும்..

  பயனுள்ள அனுபவ ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. அப்படியே மாணவர் பருவத்து சிந்தனைக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள் ...அருமை முனைவரே உங்கள் ஆய்வு..

  ReplyDelete
 17. ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்குமுன் குழந்தைகளை படிக்கவேண்டும், குழந்தை மனங்களை படிக்கவேண்டும், ஒவ்வொன்றும் ஒரு குணம் அத்தனையும் ஒரு வகுப்பறையில் அடைத்துவைத்து இன்னும் இம்சிக்காமல் அதன் வழியில் போய் படிப்பென்றால் அது எட்டிக்காயாக கசக்காமல் ஈடுபாடு உண்டாக்கவேண்டும்... பிள்ளைகளே படிப்பை விரும்பும்படி செய்யவேண்டும்....

  அதற்கு???

  குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லி தர ஆரம்பிக்குமுன் அவர்களை படிக்கவேண்டும்... ஒவ்வொரு குழந்தையும் பிரிக்கப்படாத புத்தகங்கள்.... அதன் தன்மைகள் அதன் குணங்கள் அதன் விருப்பங்கள் எல்லாமே அறியவேண்டும்.... அதன்படி பிள்ளைகளை தன் வழிக்கு கொண்டு வருவது இன்னும் எளிதாகும் அதன் மூளைக்கு புரியும்படி பாடங்கள் சொல்லி தர தன்னை லகுவாக்கிக்கொள்ள வேண்டும்...

  அதற்கு???

  குணசீலனைப்போன்ற ஆசிரியர் வேண்டும்... பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தருமுன் பிள்ளைகளின் முக குறிப்புகளை அதன் குறும்புகளை ரசிக்கும் தன்மைக்கொண்ட ஆசிரியர் வேண்டும்... குணசீலனிடம் படிக்கும் பிள்ளைகள் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கவேண்டும்...

  ஆசிரியர்கள் பிள்ளைகளை படிக்குமும் இந்தக்காலத்து பிள்ளைகள் வேகம் அதிகம் ஸ்கான் எடுத்துவிடும் ஒவ்வொரு ஆசிரியரையும் தன் மூளைக்கெட்டும் வாரி மார்க்குகளும் இடும்... ( நான் இட்டிருக்கிறேனே...)

  ரசிக்க வைத்த பகிர்வு குணசீலா. ஆசிரியர் பணி எனக்கு மிகமிக மிக பிடித்த பணி.. அவர்களை அதிகம் மதிக்கிறேன். ஏன் தெரியுமா பிரம்மா மனிதர்களை படைக்கிறான் என்றால் ஒவ்வொரு பிள்ளைகளின் எதிர்க்காலமும் வளமாக்கும் மேஜிக் ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்கிறது என்றும் நம்பும் ஜீவன் நான்....

  அருமையான பகிர்வுக்கு என் அன்பு நன்றிகள் குணசீலா.

  எப்போதோ ஒரு முறை இந்த மஞ்சு அக்கா நம் திரிப்பக்கம் எட்டி பார்க்கிறார்கள்.. அதிலும் எப்போதோ ஒரு முறை தான் வந்து கருத்தும் இடுகிறார்கள்.... ஆனாலும் இதோ இந்த குணசீலன் எனக்கு மனமும் உடலும் சரியில்லாத நிலையில் வந்து பார்த்துவிட்டு போகாமல் உடனே கரிசனத்துடன் அன்புடன் நலமடைய வேண்டிய அன்பு சகோதரனின் அன்பை என்னவென்று சொல்வது?

  மனம் நிறைந்த அன்பு நன்றிகளும் பிரார்த்தனைகளும் குணசீலா....தாங்களும் தங்கள் குடும்பம் என்றும் நலமுடன் இருக்க இறைவனிடம் கோருகிறேன்.

  ReplyDelete
 18. இப்போது நான் வேகமா தலையாட்டுறேன்..:)

  ReplyDelete
 19. சுவராஸ்யமான பதிவுங்க,நான் என் வகுப்பில் பல முறை நீங்கள் குறிப்பிட்டுள்ள 5 ஆம் எண் நபராக இருந்தது நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
 20. @suryajeevaஇதில் என்ன கொடுமைன்னா நண்பா...

  நல்லாப் புரிந்தவனும் தலையாட்டுவான்
  எதுவும் புரியாதவனும் தலையாட்டுவான்
  தூக்கத்தில இருக்கவனும் தான் தூங்கவில்லை என்று எங்களை நம்பவைக்கத் தலையாட்டுவான்..

  அதனால் இதைப் பிரித்து அறிதல் ஆசிரியர் கடமை.

  ReplyDelete
 21. @nilaamagalஉண்மைதான் தோழி.

  இத்தனையும் கடந்து...

  மலையேறுவது போலத்தான்..

  ReplyDelete
 22. @மணிவானதிதங்கள் வருகைக்கு நன்றி முனைவரே..

  ஏதோ என் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான் முனைவரே..

  ReplyDelete
 23. @மஞ்சுபாஷிணிஅன்பு சகோதரி..

  தாங்கள் நலமடைந்து மீண்டு வந்தமை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்..


  தங்கள் நீண்ண்ண்ண்ண்ண்ட கருத்துரை கண்டு மேலும் மகிழ்வடைந்தேன்..

  இரண்டு மூன்று வரிகளை எழுதிவிட்டு இடுகை என்று வெளியிடும் பதிவர்கள் நடுவே..

  இவ்வளவு பெரிய மறுமொழியிடும் பதிவர் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு யாவரும் சொல்வார்கள் அது மஞ்சுவாகிய தாங்கள் தானென்று..

  வலையுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை..

  அதில் தாங்கள் தனித்துவமுடைய ஒப்புமை சொல்லமுடியாத தனிவகை..

  தாங்கள் இடும் மறுமொழிகளில் தங்களின் தேடலும், ஆழ்ந்த வாசிப்பும் தெரிகிறது..

  ReplyDelete
 24. ஒவ்வொரு மாணவனையும் படிப்பது கடினமான காரியம் தான்.. ஆனால், அவற்றைச் சிறப்பாக செய்ய முனைந்தமைக்கு வாழ்த்துகள்!!

  ReplyDelete
 25. இந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............

  ReplyDelete
 26. தங்கள் தொடர் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி ஆளுங்க.

  ReplyDelete
 27. வாத்தியாரின் அனுபவங்களை கவனிப்புகளை சுவாரசியமாகத் தந்துள்ளீர்கள்

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் வாத்தியார்.

  மாணவர்கள் உங்களிடம் படிகிறார்கள். மாணவர்களை நீங்கள் படிக்கிறீர்கள். இந்த கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கிறது.

  உங்கள் படத்தை இளமையாய் வெளியிட்டதும், இளமை விகடனில் உங்கள் இடுகையை வெளியிட்டு விட்டார்கள். கலக்குங்க.

  ReplyDelete
 29. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...

  ReplyDelete
 30. அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 31. u understand the student psychology very well sir

  ReplyDelete
 32. u can understand us very well sir

  ReplyDelete