Thursday, November 24, 2011

அழிந்து வரும் தமிழர் அடையாளங்கள்!தமிழன் என்றோர் இனமுண்டு தனியே 
அவர்க்கோர் குணமுண்டு". என்பார் நாமக்கல் கவிஞர்.

“தனி“ என்பது நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வதல்ல..
நம் மரபுகளைத் தனித்துவப்படுத்திக் காட்டுவது!


இன்று நம் மொழி, நம் மரபுகள், நம் பண்பாடுகள் என்று தனித்து எடுத்துக்காட்ட, பெருமிதம் கொள்ள நாம் என்ன சேர்த்து வைத்திருக்கிறோம்..


கொஞ்சநாளுக்கு முன்னர்..


“அவள் பெயர் தமிழரசி“ என்றொரு படம் வந்தது. அதைப் பார்ப்பதற்கு ஆள் இல்லை..!


“கிராமியக் கலைகள்“ என்றொரு நூலைப் பார்த்தேன்..


அதில் நம் மரபுக் கலைகளாக அதன் ஆசிரியர் “சிங்கனூர்.கே.தனசேகரன்“ அவர்கள் நிறைய குறிப்பிட்டிருந்தார்..


படித்துப் பார்த்து பெருமிதம் கொள்ள முடியவில்லை..
நாம் தொலைத்தவை இத்தனை செல்வங்களா!! என்ற அவலம் தான் மனதில் தோன்றியது..


இதோ நாம் தொலைத்த கலைச் செல்வங்கள்..கரகாட்டம்
காவடியாட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்
மயிலாட்டம் 
ஒயிலாட்டம்
மாடு ஆட்டம்
உறியடி ஆட்டம்
கொல்லிக் கட்டை ஆட்டம்
புலி ஆட்டம்
சிலம்பாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம்
கைச்சிலம்பாட்டம்
மயானக் கொள்ளை
கும்மியாட்டம்
பொம்மலபாட்டம்
தேவராட்டம்
வில்லுப்பாட்டு
கோலாட்டம்
தப்பாட்டம்
காளியாட்டம்
கரடிஆட்டம்
தெருக்கூத்து
மேடைக்கூத்து
பாம்பு நடனம்


சேவையாட்டம்
பேயாட்டம்


சாமியாட்டம்
கெங்கையம்மன் ஆட்டம்
குறவஞ்சியாட்டம்
அரிகதை ஆட்டம்
மின்னல் கோலாட்டம்
கணியான் கூத்து
பகல்வேடம்
நாட்டுப்புறப் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்கள்
விளையாட்டுப் பாடல்கள்
தொழிற்பாடல்கள்
ஏற்றப்பாட்டு
ஏர்ப் பாட்டு
சமுதாயப் பாட்டு
பக்திப் பாட்டு
விநாயகர் பாடல்
மாரியம்மன் பாடல்
வண்டிக்காரன் பாடல்
காதல் பாடல்கள்
ஒப்பாரிப் பாடல்
பிற பாடல்கள்
குறவன் குறத்திப் பாட்டு
குடுகுடுப்பைக் காரன் பாட்டு.

நூலாசிரியர் - சிங்கனூர் கே.தனசுகரன்
திருவரசு புத்தக நிலையம்
23 தீனதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை.
நூலின் விலை ரூ -60.

33 comments:

 1. இன்றைய நாகரிக உலகில் பல விஷயங்களை நாம் இழந்து விட்டோம்
  அன்புடன் :
  ராஜா

  அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

  ReplyDelete
 2. வேதனையான விஷயம் சொல்லியிருக்கிறீர்கள் குணா !

  ReplyDelete
 3. அப்பாடி இத்தனை வகையா?இதில் மிகச் சிலவற்றை பல வருடங்களுக்கு முன் பார்த்தது நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
 4. பலர் இதுக்காகதான் திரும்பி பார்கவே பயப்படுகிறார்கள்... நாம் தொலைத்து வந்தவை மலைப்போல் குவிந்து கிடக்கிறது...

  இந்த காலப்பெண்களுக்கு குழந்தை தாலாட்டப்பாட்டு பாடசொன்னால் சினிமா பாடல்தான் பாடுவார்கள்... அந்த கலையை கற்றுக் கொள்ளும் ஆர்வம் பலருக்கு இல்லை... நண்பரே...

  ReplyDelete
 5. உண்மை... ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடல் குறித்து இந்து போன்ற நாளிதழ்களில் முதல் பக்கத்தில் செய்தி வரும் பொழுது... இந்த பாரம்பரிய கலைகள் அழிந்து போவதில் வியப்பில்லை

  ReplyDelete
 6. இந்த ஆட்ட வகைகள் கிராமத்தில் கூட இப்போது இல்லை. குத்து டான்ஸ் பாட்டு தான் களைகட்டுது...


  நம்ம தளத்தில்:
  மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

  ReplyDelete
 7. அன்புநிறை முனைவரே,
  நாட்டுப்புறக் கலைகள் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் போற்றி
  காத்து வளர்த்தவை. ஊடகங்கள் இல்லாத சூழ்நிலையில் அத்தனைக்கும் சேர்த்து மொத்தமாய் நானிருக்கிறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு பொறுப்பேற்று நல்ல பல செய்திகளை சுமந்து சென்று நாடெங்கும் விதைத்த பெருமை இவைகளியே சாரும்...

  அவள் பெயர் தமிழரசி பட இயக்குனர் பாவைக்கூத்து பற்றிய ஒரு குறும்படம் எடுத்து வெற்றி பெற்றார். அதன் பின்னர் அதே கருவை வைத்து திரைப்படம் எடுத்தார், முதல் மற்றும் கடைசி காட்சிகளில் கலையின் ஆழத்தை அருமையாக புனைந்திருப்பார்...
  என்ன செய்ய நல்ல படம் ஓடவில்லை.. கலையை கூட குத்து பாட்டு வடிவில் கொடுத்தால் தான் ஏற்றுக் கொள்கிறார்கள்..
  இன்று நாட்டுப்புறப் பாடல்கள் கானாப் பாடல்கள் என்ற சீர் கெட்ட வடிவில் சிதைந்து போய்கொண்டு இருக்கிறது..
  திரைப்படங்களிலும் குடிப்பதற்கும் கும்மாளம் போடுவதற்குமே நாட்டுப்புறப் பாடல்களை பயன்படுத்துகிறார்கள்.
  அழிந்து வரும் இக்கலைகளை காக்க வேண்டும்..
  நம் கலாச்சார பெருமைகளை பதப்படுத்த வேண்டும்...

  ஆசிரியர் “சிங்கனூர்.கே.தனசேகரன்“ அவர்களின் “கிராமியக் கலைகள்“ என்ற நூலை நிச்சயம் வாங்கி படிக்கிறேன் முனைவரே..

  ReplyDelete
 8. ம்.நிறைய இழந்திருக்கிறோம்.
  கொஞ்சம் நஞ்சம் இருக்கும் கலைச்செல்வங்களையாவது காப்பாற்ற
  முயற்சி எடுக்கப்பட வேண்டும்!

  ReplyDelete
 9. thiru guna avargalukku vankkam
  mele kurippitta kurippugaludan akkalaigalin kurippaiyum ittrindhdhal nandraga irukkum nandri
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 10. நம் பாரம்பரியத்தின் மேன்மை எடுத்துரைக்க அந்நாளில் இத்தனைக் கலைகள் இருந்தனவா? தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் ஏழெட்டு அறிந்திருந்தால் பெரிய விஷயம். வெள்ளமடித்துக் கொண்டு போனதுபோல் நாகரிக வளர்ச்சி என்னும் பெயரில் அத்தனையையும் அழித்துவிட்டோமே என்று நினைக்கையில் வேதனைதான் மிஞ்சுகிறது. தமிழர் பெருமிதமடையும் வகையில் பதிவுகளைப் பதிப்பதற்கு மிகவும் நன்றி முனைவரே.

  ReplyDelete
 11. இக்கலை ரசிகர்கள் இருக்கிறோம். ஏதாவது வழியில் இவை நம்மைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறது
  என்று நான் நினைக்கிறேன்

  ReplyDelete
 12. இத்தனை ஆட்டங்கள் இருக்கிறதா???
  நிறைய பெயர்களை இப்போது தான் கேள்விப்பட்றேன்.

  ReplyDelete
 13. @thirumathi bs sridhar தங்கள் தேடலுக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 14. @suryajeeva எல்லாம் காலத்தின் கோலம் நண்பரே..

  ReplyDelete
 15. @மகேந்திரன் தங்களைப் போன்றவர்களால் தான் நான் மேற்குறிப்பிட்ட கலைகளை...

  இவை நம் மரபுசார்ந்த கலைகள் என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும் நண்பா..

  தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..

  இந்த இடுகை வெளியிடும்போதே தங்கள் பணியை எண்ணிக்கொண்டு தான் பதிவுசெய்தேன்..

  ReplyDelete
 16. @கீதா என்போன்ற இலக்கியத்தமிழ் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் தங்களைப் போன்றோர் இருக்கும் வரை தமிழ் அழியாது தோழி.

  ReplyDelete
 17. இழந்ததனை எண்ணினால் மனம் வாடுகின்றது நண்பரே... இக்கலைகளை மீண்டும் இம்மண்ணினில் நிலைப் பெற வைக்க வழிகள் யாதென எண்ணி அவற்றினை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு... ஆனால் ஏனோ முடியுமா?... என்றக் கேள்வி உள்ளே எழுவதை தடுக்க முடியவில்லை அண்ணா... ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் தமிழர்களை சுற்றி இருக்கின்றன... அனைத்தையும் சமாளித்து நம் இனம் மீண்டும் வல்லமை பெற வைக்க இயலுமா?

  ReplyDelete
 18. கலைகள் மாண்டு போகவில்லை..ஆங்காங்கே உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது..வேடிக்கை பார்க்க ஆட்கள் இருக்கிறார்களே தவிர ஊக்குவிக்க ஆட்கள் இல்லை..

  ReplyDelete
 19. @வழிப்போக்கன்நம்பிக்கை மீதான நம்பிக்கை அது ஒன்றுதான் நாம் கையில் உள்ளது அன்பரே..

  ReplyDelete
 20. ஆம். நாம் இழந்தவை அதிகம் :(

  ReplyDelete
 21. படிக்கும் போதே வருத்தமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் புரிதலுக்கும் சிந்தித்தமைக்கும் நன்றிகள் நண்பா.

   Delete
 22. தமிழரின் பண்பாட்டை பிரதிபலிக்கச் செய்வது தான் நம் நாட்டுப்புறக்கலைகள்

  ReplyDelete