Wednesday, November 16, 2011

மழலை உலகம்.

வாங்க விளையாடலாம்
அன்பு நண்பர் சென்னைப் பித்தன் ஐயா மழலை உலகம் தொடர்பாக எழுதுமாறு என்னை அன்புடன் அழைத்திருந்தார்..

பொதுவாக இதுபோன்ற தொடர் இடுகை எழுதும் மரபுகளிலிருந்து நான் கடந்த காலங்களில் ஒதுங்கியே இருந்திருக்கிறேன்.
காரணம்...
காலச்சூழல்தான்!
பணி,குடும்பம், சமூகம், பொழுதுபோக்கு என
யாவற்றையும் கடந்து இணையத்தில் என் துறை சார்ந்து எனக்குத் தெரிந்த சில செய்திகளை இலக்கியநயத்துடன் பதிவு செய்யவேண்டும் என்பதையே என் அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறேன்.

ஆனால் என்னால் மறுக்கமுடியாதவாறு நயமாக அழைத்த சென்னைப்பித்தன் ஐயா அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு மழலை உலகம் தொடர்பாக எழுத முன்வந்திருக்கிறேன்.

ஒரு கதை..

ஒரு புகழ் பெற்ற ஓவியர் குறித்த காலத்துக்குள் ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் தீவிரமாக வரைந்துகொண்டிருந்தார்.. 
அவரின் அருகே, ஓவியரின் உதவியாளர் ஆவலுடன் அந்த ஓவியத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார்..

கைகளையும், மூளையையும் சேர்த்துக் கட்டிப்போட்டது போல ஓவியருக்கு எந்த ஓவியமும் வரவில்லை..

சற்றுநேரம் சிந்தித்த ஓவியர் தன் உதவியாளரை தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்..

உதவியாளர் திரும்பி வந்தபோது பெருவியப்பில் ஆழ்ந்துபோனார்.
ஆங்கு அழகான ஓவியம் வரையப்பட்டிருந்தது.

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்..
இத்தனை நேரம் போராடிக் கொண்டிருந்தீர்கள்..
நான் சென்று வந்த இந்த சிறு இடைவெளியில் எப்படி இப்படியொரு ஓவியத்தை வரைந்து முடித்தீர்கள் என்று ஓவியரிடம் கேட்டார் உதவியாளர்.

அதற்கு ஓவியர் சொன்னார்.

“நீ சென்றபோது என்னை யாரும் உற்று நோக்கவில்லை!
 எந்தக் கட்டுப்பாடும் இல்லை!
 என் நிறைகுறைகளைப் பேச ஆள் இல்லை!
 என் மனமும் நானும் தான் இருந்தோம்!
அதனால் தான் என்னால் வரையமுடிந்தது“ என்றாராம்.

இந்தக் கதை இங்கு எதற்கு என்று சிந்திக்கிறீர்களா..?

இன்று இணையவுலகில் நுழைந்தவுடனே என்கண்ணில் ஐந்துக்கும் மேற்பட்ட மழலை உலகம் தொடர்பான இடுகைகள் கண்ணில் பட்டன..


இந்தச் சூழலில் நானும் சென்று மூவரை அழைத்து அவர்களது நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை..


குழந்தைகள் தினத்தன்று தான் குழந்தைகளைக் கொண்டாட வேண்டுமா?

நாம் குழந்தைகளைக் கொண்டாடும் நேரமெல்லாம் குழந்தைகள் தினம் தானே!!


அதனால்..

நான் தொடர்பதிவுக்கு யாரையும் அழைக்கப்போவதில்லை..
அந்த ஓவியர் போல கட்டுப்பாடுகளின்றி, 
தொடர் இடுகை என்னும் அறிவுறுத்தலின்றி,
முன்பே எழுதப்பட்ட மதிப்பு மிக்க இடுகைகள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளப்போகிறேன்..

மழலை தொடர்பாக நான் முன்பு எழுதிய இடுகைகள் சில..

மழலை உலகம் தொடர்பான பதிவு என்றவுடனே என் நினைவுக்கு வந்தது அன்பர் சம்பத் குமார் அவர்களின் வலைப்பக்கம் தான்.

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்குமான உறவுநிலைகளையே அதிகம் சிந்திக்கும் இந்த வலைப்பக்கத்தில் எனக்குப் பிடித்த மழலைக் கவிதை ஒன்று,

மழலை நாட்கள்

என்னும் இடுகையாகும்

அன்பு நண்பர் வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்த மழலை உலகம் குறித்த கவிதைகள் இரண்டு..

மழலையின் மருட்கை

என்னை நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்த்தின.

அன்பிற்கினிய ரியாஷ் அவர்களின் வலைப்பக்கத்தில் அவர் வெளியிட்ட

குழந்தைகள் உலகம் 

என்னும் கவிதை என்னை மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தது.

நாம் வாழும் உலகிலிருந்து தன்னுடைய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் குட்டி சொர்க்கமல்லவா குழந்தைகள்!

இயற்கையின் சொற்பொழிவுகளை மொழிபெயர்த்துச் சொல்லும் மழலை மேதகைள் அல்லவா குழந்தைகள்!

ஏழையைக் கூட செல்வந்தனாக்கும் மதிப்புமிக்க செல்வமல்லவா குழந்தைகள்!

மழலை உலகத்துக்குச் சென்றால் நிகழ்காலத்துக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடமுடியாது..

மேற்கண்ட இடுகைகள் வழியே
மழலை உலகத்துக்கு உள்ளே வாருங்கள்!
என உங்களை அன்புடன் அழைக்கிறேன்..

(மழலை தொடர்பான சிந்தனைக்குள் செலுத்திய சென்னைப் பித்தன் ஐயா அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்)

47 comments:

 1. மழலையர் உலகம் அலாதியான அற்புத உலகம்
  அதை உணர்வதற்குக் கூட ஒரு அலாதியான
  மன உணர்வு வேண்டும் அதை மிக அழகாக
  நேர்த்தியாகச்சொல்லிப் போகும் உங்கள் பதிவு
  அருமை. வாழ்த்துக்கள் த.ம 2

  ReplyDelete
 2. மிக அருமையாக சொல்லிருக்கீங்க முனைவரே! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. உங்களுக்கே உரித்தான பாணியில் மழலை உலகத்தைக் காட்டியுள்ளீர்கள் முனைவரையா... அருமை.

  ReplyDelete
 4. வணக்கம் நண்பரே..

  //நாம் வாழும் உலகிலிருந்து தன்னுடைய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் குட்டி சொர்க்கமல்லவா குழந்தைகள்!//

  முற்றிலும் உண்மையான வரிகள்.குழந்தைகள் உலகமே அலாதியானது.பொய், புரட்டு,சூது வாது ஏதுமின்றி கள்ளம் கபடமில்லா வெள்ளை உள்ளங்களின் உலகத்தில் சென்று வருவது நம்மை நாமே புத்துணர்ச்சி அடையச் செய்வதாகும்.


  என்னுடைய இடுகையையும் அறிமுகப்ப்டுத்தியதற்க்கு மனமார்ந்த நன்றிகள்

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 5. அருமையான பதிவு ..

  ReplyDelete
 6. //இயற்கையின் சொற்பொழிவுகளை மொழிபெயர்த்துச் சொல்லும் மழலை மேதகைள் அல்லவா குழந்தைகள்!//
  அருமை பாஸ்!

  ReplyDelete
 7. அருமை ஐயா.
  நன்றி.

  ReplyDelete
 8. //நாம் குழந்தைகளைக் கொண்டாடும் நேரமெல்லாம் குழந்தைகள் தினம் தானே!!//

  உண்மைதான். மிகவும் அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 9. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத உலகம் என்றால் மழலை உலகம் தான்...

  தாங்கள் பகிர்ந்துள்ள தொடர்பில்(Link) உள்ள கவிதை, தகவல் அருமை... நண்பரே...

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 10. தொடர் பதிவு.. என்னை கூட சென்னைப் பித்தன் அழைத்திருக்கிறார். நானும் எழுதவேண்டும்..

  நன்றி..

  ReplyDelete
 11. அன்புநிறை முனைவரே,
  சரியாகச் சொன்னீர்கள்...
  மழலை தொடர்பான இடுகைகள் இன்று மிக அதிகம்...

  படித்து ரசித்திருக்கையில் தங்களின் தொடர் பதிவும்..
  அழகான ஒரு சிறு கதையின் மூலம் சிறப்பாக
  படைப்பாளிகளை பற்றி சொல்லிவிட்டீர்கள்...

  அங்கே என்னுடைய கவிதைகளையும் பகிர்ந்திருக்கிறீர்கள்...
  நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் இரண்டு கவிதைகளும் என் நெஞ்சை ஆட்கொண்டவை..

  தங்களின் தொடர் ஆதரவிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.

  ReplyDelete
 12. சபாஷ் முனைவரே...

  ReplyDelete
 13. குழந்தைகளைப் பற்றிய நல்லதொரு பதிவு.. மற்றவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தி உங்களின் மேன்மையை காட்டுகிறது.. !! நன்றி முனைவர் அவர்களே..!!

  ReplyDelete
 14. tm 8 வாக்களித்துவிட்டேன். பதிவின் கருத்துக்கள் அனைவரையும் சென்றைய..

  நேரமிருந்தால்... இங்கு வந்து செல்லவும்..  எனது வலையில்

  வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

  உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

  நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete
 15. //நாம் குழந்தைகளைக் கொண்டாடும் நேரமெல்லாம் குழந்தைகள் தினம் தானே
  //
  ரொம்ப உண்மை

  ReplyDelete
 16. முதற்கண் நன்றி.
  அருமையானதொரு பதிவு.

  ReplyDelete
 17. தொடர் சீராகப்போவதற்கு தங்கள் கருத்துக்களும் காரணம் நன்றி

  ReplyDelete
 18. ஓவியர் கதை புடிச்சிருக்கு. நம்மை யாராவது உற்றுநோக்கினால் சிந்தனை வருவது தடைபடும் - நிஜம்தான்.

  ReplyDelete
 19. உங்க பாணியே தனி தான். நல்ல பதிவு.

  ReplyDelete
 20. மழலைகளாய் மாற பலரின் சொர்க்கவாசலைச் சுட்டியிருப்பது பெருமை, குணா.

  பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்!

  மழலைகள் நாளில் வழங்கியிருக்கும் என் வாழ்த்துக்கள் எதற்கென விளங்கியிருக்கும் என நம்புகிறேன்.

  ReplyDelete
 21. @Ramani தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @சம்பத் குமார் தங்கள் பயன்மிக்க இடுகைகள் தொடரட்டும் நண்பரே.

  ReplyDelete
 23. @மகேந்திரன் தங்கள் செம்மாந்த பணி தொடர வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 24. @தங்கம்பழனிதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்ந நன்றி நண்பா.

  ReplyDelete
 25. @ஷைலஜா தங்கள் கருத்துரைக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 26. @சத்ரியன் புரிகிறது கவிஞரே..

  வருகைக்கு நன்றிகள்..

  ReplyDelete