Sunday, November 6, 2011

மனிதன் மட்டும் ஏன் இப்படி..??


றவைகள் எந்த மரங்களையும்
விலைக்கு வாங்கியதில்லை!
இருந்தாலும்..
மரங்கள் யாவும் பறவைகளுக்காகவே
வான் நோக்கி வளர்கின்றன!
 நிலவு என்றும்
இரவைச் சேமித்துவைத்தில்லை!
இருந்தாலும்..
இரவு நிலவை மட்டுமே
எதிர்நோக்கியிருக்கிறது!
டு, மாடுகள் யாவும்
தலையில் புல்லைக் கட்டிக்கொண்டு
மேயச்செல்வதில்லை!
இருந்தாலும்..
தாவரங்கள் இவற்றையே
பச்சைக் கொடிகாட்டி அழைக்கின்றன!

திகள் எங்கும்
முகவரி தேடி மயங்கியதில்லை!
இருந்தாலும் கடல்
நதிகளுக்காகவே காத்திருக்கிறது!


வேர்கள் எப்போதும்
தன்னை விளம்பரம் செய்துகொண்டதில்லை!
இருந்தாலும்..
மழை என்றும்
வேர்களை மறந்ததில்லை!

ஆனால் மனிதன் மட்டும்..
எதை எதையோ விலைக்கு வாங்குகிறான்!
சேமித்து வைக்கிறான்!
உணவுமூட்டையைத் தூக்கிக்கொண்டே திரிகிறான்!
முகவரியைத் தேடித்தேடி மயங்குகிறான்!
எதற்காகவோ காத்திருக்கிறான்!
விளம்பரப் பலகை ஏந்திக்கொண்டே நடக்கிறான்!

மனிதன்மட்டும் ஏன் இப்படி..??

தொடர்புடைய இடுகை


36 comments:

 1. ஏனெனில் அவனுக்கு ஏழாம் அறிவு இருக்கிறதாம்

  ReplyDelete
 2. உண்மையை அழகாக எடுத்துரைத்துள்ள பதிவு..

  எதற்காக சேர்க்கிறோம் என்று தெரியாமலே சேர்ப்பது தான் மனிதனின் குணமோ!!

  ReplyDelete
 3. யார்யாருக்கு எது எது கிடைக்கு வேண்டுமோ அதை காலம் கட்டாயம் கெர்டுக்கும்...

  வேர்களுக்கு மழைக்கெர்டுப்பது போல...

  ReplyDelete
 4. வேர்கள் எப்போதும்
  தன்னை விளம்பரம் செய்துகொண்டதில்லை!
  இருந்தாலும்..
  மழை என்றும்
  வேர்களை மறந்ததில்லை!

  ஆனால் மனிதன் மட்டும்..// சும்மா நச்சினு இருக்கு ...

  ReplyDelete
 5. நீங்கள் கூறியதில் வேர்களின் தாத்பர்யம்
  எனக்குப் பிடித்திருக்கிறது முனைவரே...
  நாம் இருக்கிறோம் என்ற விளம்பரம் எப்போதும் தேவையில்லை..
  நமக்குத் தேவையான விளம்பரம் நாம் செய்யும் நற்ச்செயல்களால்
  தானாக கிடைத்துவிடுமென
  அற்புதமாய் எடுத்துரைக்கின்றன...

  மரங்களும், பறவைகளும், விலங்கினங்களும் அடுத்தவரை
  நினைத்து ஏங்குவது இல்லை...அவர் நிலை பற்றிய பொறாமை இல்லை..
  அவர் போல நாமும் அவர்க்கு மேலே ஒருபடி போகவேண்டும்
  என்ற வஞ்சக எண்ணம் இல்லை...
  மனிதன் இதையெல்லாம் குத்தகைக்கு எடுத்து
  தன்னில் விதைபோட்டு வைத்திருக்கிறான்..
  அதனை நிறைவேற்றும் பொருட்டு எல்லாம்
  நடந்தேறிவிடுகிறது...

  அருமையாய் சிந்தனைப் பதிவுகளை
  தருகிறீர்கள் முனைவரே..

  ReplyDelete
 6. சிந்தனை என்பது மனிதனுக்கு எவ்வளவு பெரிய பலமோ... அதுவேதான் அதேஅளவு பலவீனத்திற்க்கும் காரணம்.

  ஒரு பென்டுலம் எவ்வளவு தூரம் இடதுபுறம் செல்கிறதோ அதே அளவு வலதுபுறம் சென்றே தீரும்... இதுவே வேறொரு கோணத்தில்...
  அது வலதுபுறம் சென்ற போதே இடதுபுறம் செல்ல தேவையான சக்தியை சேமித்து விடுகிறது...

  ஒரு மனிதன் நல்லதை நோக்கி சிந்தித்தால் கூடவே அதன் எதிர்மறையான விஷயங்களும் அவன் புத்தியில் தோன்றும். இது ஏன் தோன்ற வேண்டும்? அவன் நல்ல விஷயத்தை தானே சிந்தித்தான்.
  இது புரிந்துவிட்டால் விலங்கிலிருந்து மனிதனை பிரிக்கும் அல்லது வேறுபடுத்தும் ஆறாவது அறிவின் சூட்சுமம் புரிந்துவிடும்.

  ReplyDelete
 7. கவிதை மிகவும் அருமை ..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. மூன்றே காரணங்கள்:

  வாழ்வாதாரம் குறித்த பயம்..
  போட்டி..
  ஆசை..

  ReplyDelete
 9. முனைவர் அவர்களே..எனது தளத்தில் ஒரு குறுங்கதை இடுகையிட்டிருக்கிறேன்..நேரம் கிடைக்கும் போது வாசித்து பாருங்கள்..கருத்துகளையும் ஆலோசனைகளையும் எதிர்ப்பார்த்திருக்கிறேன்..:)

  ReplyDelete
 10. ம்...அவன்தான் மனிதன்.வெட்கமாவும் இருக்கு குணா !

  ReplyDelete
 11. மனிதனைச் சுற்றி இருப்பவையெல்லாம்
  மனிதத் தன்மையோடு இருக்க
  மனிதன் மட்டும் ஏன் தன்தன்மை இழந்து இருக்கிறான்
  என அறிவுறுத்திப்போகும் அருமையான பதிவு
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 8

  ReplyDelete
 12. ஒரு இடத்தில படித்தது நினைவுக்கு வருகிறது.
  இந்த உலகின் கடைசி நதி விஷமாகும் போது,
  கடைசி மரம் வெட்டப்படும் போதாவது
  உணருவானா மனிதன் தன்னால் பணத்தை பருகவோ,
  உண்ணவோ முடியாதென?

  ReplyDelete
 13. வேர்கள் கவிதையும் அதற்கான படமும் அருமை..

  ReplyDelete
 14. வாழ்க்கை தேடலைப்பற்றிய, சிந்தனையின் விளைவாக வந்த விடையாக கருதுகிறேன். யாவரும் சிந்தித்து உணர வேண்டிய பதிவு.

  ReplyDelete
 15. @suryajeeva தங்கள் புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 16. @ஆளுங்க (AALUNGA) வருகைக்கும் வாசித்தலுக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா..

  ReplyDelete
 17. @மகேந்திரன்தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும், இரசிப்புக்கும், நயம் பாராட்டியமைக்கும் நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
 18. @ராஜா MVS மிக அழகானதொரு வாழ்வியல் தத்துவக்கோட்பாட்டை முன்வைத்திருக்கிறீர்கள்.

  அருமை நண்பரே..

  ReplyDelete
 19. @ராஜா MVS மிக அழகானதொரு வாழ்வியல் தத்துவக்கோட்பாட்டை முன்வைத்திருக்கிறீர்கள்.

  அருமை நண்பரே..

  ReplyDelete
 20. @மயிலன் ஆழமான உண்மை.. அழகான வகைப்பாடு..

  அருமை நண்பா..

  ReplyDelete
 21. @மயிலன் ஆழமான உண்மை.. அழகான வகைப்பாடு..

  அருமை நண்பா..

  ReplyDelete
 22. @Ramani தங்கள் ஆழ்ந்த வாசித்தலுக்கும் நன்றி அன்பரே..

  ReplyDelete
 23. @கோகுல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் கோகுல்..

  உண்மைதான்..

  ReplyDelete
 24. @வே.சுப்ரமணியன். தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி மணி.

  ReplyDelete
 25. முகத்தில் அறைகிறது உண்மை. மனிதன் மட்டும் ஏன் இப்படி? வழக்கம்போல் சிந்தனையைத் தூண்டும் நற்பதிவு.

  ReplyDelete
 26. வணக்கம்
  வணக்கம்
  வணக்கம்
  வாத்தியாரே.
  எனக்கு இயற்கையை பாராட்டி பேசினா போதும். றெக்கை இல்லாமையே பறப்பேன்.
  அற்புதமான ஒரு கவிதைய எழுதினதுக்கு சந்தோசம், நன்றி.

  அப்படியே இதே உணர்வு எனது சமீபத்திய இடுகை. மூங்கில் காடுகளே... பாடல்.
  http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post.html

  ReplyDelete
 27. உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.

  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_16.html

  தாரிக்

  ReplyDelete