வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

இதுதான் வறுமை என்பதா?


ஒரு தந்தை தன் மகனுக்கு வறுமை என்றால் என்ன என்று புரியவைப்பதற்காக ஏழைகள் வாழும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்..

ஏழைகளின் பல்வேறு வாழ்வியல் கூறுகளைப் பார்த்துத் திரும்பிய பின்னர்,
தந்தை மகனிடம் கேட்டார் இப்போது தெரிகிறதா வறுமை என்றால் என்ன?
என்று கேட்டார்.

மகன் சொன்னான்…

ஓ நன்றாகத் தெரிந்துகொண்டேன் அப்பா..

○ நாம் ஒரு நாய் தான் வளர்க்கிறோம். ஆனால் அவர்கள் 4 நாய் வைத்திருக்கிறார்கள்.
○ நம்மிடம் ஒரே ஒரு சிறிய நீச்சல் குளம் தான் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் மிக நீண்ட பெரிய ஆறே நீச்சல் குளமாக இருக்கிறது.
○ நம்மிடம் சில விளக்குகள் இருக்கின்றன, ஆனால் அவர்களிடம் பல நட்சத்திரங்களே விளக்குகளாகவுள்ளன.
○ நாம் சிறிய அளவிலான நிலப்பகுதியில் தான் வாழ்கிறோம், ஆனால் அவர்கள் பெரிய அளவிலான நிலப்பகுதியல் வாழ்கிறார்கள்.
○ நமக்குப் பணியாளர்கள் தான் உணவு பரிமாறுகிறார்கள், ஆனால் அவர்கள் அவர்களுக்குள்ளேயே உணவு பரிமாறிக்கொள்கிறார்கள்.
○ நாம் உணவுப் பொருள்களை வாங்குகிறோம். ஆனால் அவர்கள் தேவையான உணவுப்பொருள்களை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
○ நமது வீட்டுக்குக் காவல் வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் நண்பர்களாக இருப்பதால் அவர்கள் வீட்டுக்குக் காவல் தேவைப்படுவதில்லை.


என்று தான் கண்ட வறுமையைத் தந்தையிடம் எடுத்துச்சொன்னான் மகன்.

தந்தை பேச்சின்றி நின்றார்.

மகன் தந்தையிடம் சொன்னான்..

நாம் எப்படி வறுமையுடன் வாழ்கிறோம் என்பதை எனக்குப் புரியவைத்ததற்கு நன்றி அப்பா என்றான்.

(எனக்கு ஆங்கிலத்தில் வந்த குறுந்தகவல் இது. படித்து மகிழ்ந்தேன்..

தங்களுடன் பகிர்ந்துகொண்டதால் என் மகிழ்ச்சி இருமடங்கானது)

4 கருத்துகள்:

  1. இதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு புதுக் கவிதை ஞாபகம் வருகிறது...யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை.
    அது இதோ:

    ”...கந்தையானாலும்
    கசக்கிக் கட்டு என்ற,
    அவ்வையே!
    இருக்கும் ஒரே
    கந்தையைக்
    கசக்கினால்,
    எதைக்
    கட்டுவதாம்?...”
    -அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு