புதன், 1 செப்டம்பர், 2010

சிரிப்பும் சிந்தனையும்.


பெண்.

காதலிக்கப் பெண் வேண்டுமாம்!
கல்யாணத்துக்குப் பெண் வேண்டுமாம்!
வாரிசு சுமக்கப் பெண் வேண்டுமாம்!
வாரிசு மட்டும் ஆண் வேண்டுமாம்!

என்ன பெயர்??

ஆசிரியர் - உன் பெயர் என்ன?
மாணவி - அமுதா.

ஆசிரியர் - வீட்டில எப்படிக் கூப்பிடுவாங்க?
மாணவி - பக்கத்துல இருந்தா மெதுவாக் கூப்பிடுவாங்க…
தூரத்துல இருந்தா சத்தாமாக கூப்பிடுவாங்க!!


மதம்.

ராம் - இந்து
ஜான் - கிருத்தவம்

ரம்ஜான் - இசுலாமியர் கொண்டாடும் பண்டிகை!!

கடவுள்.

இறைவன் படைத்த உலகில்
மனிதன் வாழ்கிறான்!!

மனிதன் படைத்த சிலைகளில்
இறைவன் வாழ்கிறான்!

பாதை..

நீ செல்லும் பாதையில்
தடைகள் எதுவும் இல்லையென்றால்…

அது யாரோ சென்ற பாதை!!


பிரச்சனை

எதிர்மறை சிந்தனையாளர்கள்
பிரச்சனைகளை மட்டுமே பார்ப்பார்கள்!

நேர்மறை சிந்தனையாளர்கள்..
அதைத் தீர்க்கும் வழியை மட்டும் பார்ப்பார்கள்!!

நேசி.

உன்னை நேசிக்கும் இதயத்தை
நேசி!!
உன்னை கோபப்படுத்தும் இதயத்தை
அதிகமாக நேசி!!
-அன்னை தெரசா.

14 கருத்துகள்:

 1. Sirippum sinthanaikalum arumai...

  kurippaga

  //ஆசிரியர் - உன் பெயர் என்ன?
  மாணவி - அமுதா.

  ஆசிரியர் - வீட்டில எப்படிக் கூப்பிடுவாங்க?
  மாணவி - பக்கத்துல இருந்தா மெதுவாக் கூப்பிடுவாங்க…
  தூரத்துல இருந்தா சத்தாமாக கூப்பிடுவாங்க!!//

  rasiththean.

  Kumar.S
  http://vayalaan.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தொகுப்பு!

  பதிலளிநீக்கு
 3. கலவையாய் இருந்தது இந்த பதிவு தலைப்புக்கு ஏற்ப சிரிக்க சிந்திக்க...அருமை குணா...

  பதிலளிநீக்கு
 4. சிரிக்கவும் ஒரு நிமிடம் சிந்திக்கவும் வைத்த தொடர்...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 5. `பெண்`.. ந‌ல்ல‌ சிந்த‌னை,
  `என்ன‌ பெய‌ர்` ந‌ல்ல‌வெடி

  பதிலளிநீக்கு
 6. சிரிப்பும் சிந்தனையும் ஒரு கலவையாய் அருமை!!

  பதிலளிநீக்கு