வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 15 செப்டம்பர், 2010

வேடிக்கை மனிதர்கள்!


மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்…

இந்த விடுமுறைநாளில் ஊருக்குச் சென்றேன். 3 நாள் விடுமுறையதனால் இரவு 12க்குக் கூட மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்யும் வீரதீர செயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

² பேருந்தின் சன்னல் வழியே ஏதோ ஒரு பொருளைப் போட்டு இடம்பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்……
அந்தப் பொருளுக்குப் பதில் தன் குழந்தையை வைத்து இடம்பிடிப்பவர்களைப் பார்த்து வியந்துபோனேன்!!

² பேருந்து நிற்கும் முன்னர் ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன்…..
ஒருவர் பேருந்து நிற்கும் முன்னர் படிவழியே ஏறமுடியாத அளவுக்குக் கூட்டமானதால்……….
மெதுவாக வந்த பேருந்தின் வலதுபுறம் வந்து பின்புற சக்கரத்தில் கால் வைத்து சன்னல் வழியே ஏறி அமர்ந்து தன்னைத்தானே வியந்துகொண்டு பெருமிதத்துடன் மற்றவர்களைப் பார்த்தார்…!!

v பேருந்துகளில் செல்லத்தக்க கூட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தது. நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்.

ஒரு பேருந்து வந்தது…. நிலையத்தின் முகப்பிலேயே இருந்தநான் வழியிலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு ஏறி ஒருவழியாக பேருந்து நிற்கும் முன்னரே அமர்ந்துகொண்டார்கள்…

ஆனால் அந்தப்பேருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர்தான் செல்லும் என்று சொல்லிவிட்டு நடத்துனரும், ஓட்டுநரும் எங்கோ சென்றுவிட்டனர். வெறுப்படைந்த மக்கள் அரசுமுதல் பணியாளர்கள் வரை யார் யாரையோ திட்டினார்கள். மக்களை மேலும் வெறுப்பேற்றும் விதமாக….

அந்த 30 நிமிடத்தில் 5 பேருந்துகள் வந்து மக்களை ஏற்றிக்கொண்டு உடனேயே சென்றுவிட்டன.

இறங்கி அந்தப் பேருந்துகளி்ல் ஏறிச்சென்றவர்கள் சிலர். (சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பவர்கள்!)

நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவி்டலாம் என்றிருந்தனர் சிலர் (தெளிவாக முடிவெடுப்பர்கள்)

இறங்கி ஏறுவோமா?
வேண்டாமா? என்று சிந்தித்துக்கொண்டே பேசாமல் (பேசிக்கொண்டே) இருந்துவிட்டவர்கள் பலர்
(இவர்களுக்கு முடிவெடுக்கத்தெரியாது. காலம் தான் இவர்களுக்கு வழிசொல்லும்)

எதைப் பற்றியும் கவலைப் படாமல் தூங்கி அருகில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உரிமையுடன் தோளில் சாய்ந்துகொண்டவர்கள் சிலர்!!(எங்கிருந்துதான் இவர்களுக்கு இப்படித் தூக்கம் வருகிறதோ!)


நள்ளிரவு என்றும் பாராமல் பலவித உணவுப்பொருள்களை தன் குடும்பத்துடன் பெரும் சத்தத்துடன் வயிற்றில் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தனர் சிலர்!! ( பாவம் அவர்களுக்கு என்ன பசியோ!)

அந்தப் பேருந்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, கேட்டுக் கொண்டே நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவிடலாம் என்று காத்திருந்தேன்..

மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள். எங்கடா நடத்துனரையும், ஓட்டுநரையும் காணோம்….

நேரமாகும்னா வண்டியை ஏன்டா பேருந்து நிலையத்துக்குக் கொண்டுவரீங்க? என்றார் ஒருவர்

பேருந்தில் ஏன்டா பெயர்ப்பலகை போட்டீங்க? வண்டியை எடுக்கும் போது வெச்சிக்க வேண்டியதுதானடா என்றார் ஒருவர்?


ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவழியாக ஓட்டுநரும், நடத்துனரும் உள்ளே வந்தார்கள்..

எல்லோரின் கோபமும் நடத்துனர் மீது திரும்பியது. பலரும் திட்டிக்கொண்டிருக்க ஒருவர் நடத்துனரைப் பார்த்து….

ஏன்யா என்னயா நினைச்சிட்டிருக்கீங்க?
நீங்க பாட்டுக்க எனக்கென்னன்னு வண்டிய நிறுத்திட்டுப் போய்டீங்க?
பெயர்பலகை வைக்காவிட்டால் நாங்க ஏறியிருப்போமா? வேறு பேருந்தில் போயிருப்போம்ல. வண்டி போயிடுச்சு?

என்று வாய்மூடாமல் பேசிக்கொண்டிருந்தார்…..

அதானே நல்லா கேளுங்க என்று பிறரும் அவரை உசுப்பேத்திவிட்டனர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நடத்துனர்….

அமைதியாக….

நான் தூங்கி 3 நாளாச்சுங்க..
அரசுப் பேருந்து அதனால் நடத்துனர் பற்றாக்குறை..
காலைல 12 மணிக்குச் சாப்பிட்டதுங்க..
இரவு 12 மணியாச்சு பசிதாங்கமுடியாம சாப்பிட்டு வந்தேங்க….

அவ்வளவு தான் வண்டிய எடுத்தாச்சு என்றார்..

அதற்கு மேல் யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. பேருந்து அமைதியாகச் செல்ல ஆரம்பித்தது.

மக்கள் கோபமாகப் பேசும் போது நடத்துனரும் கோபமா….

உங்கள யாருய்யா ஏறச் சொன்னது?
நான்தான் அப்பவே சொன்னேன்லயா 30 நிமிடம் ஆகும்னு?

என்று ஏதாவது பதில் பேசியிருந்தால் வார்த்தை வளரும், கோபம் அதிகரிக்கும்.

இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்ட நடத்துனரின் பண்பு வியப்பிற்குரியாதாக இருந்தது.

18 கருத்துகள்:

 1. Naanum niraiya parthirukkean. pillaiya thukkii itampitikkirathu. sannal vazhiya erurathu ellam enga uril thinasari nadakkum sambavam.

  nadaththunarin thanmai mathikkaththakkathu. unmaiyum kooda.

  nalla pakirvu.

  பதிலளிநீக்கு
 2. ஆகா விளக்கிய விதம் அருமை நண்பா, மக்கள் பஸ்ஸில் ஏறுவதை வைத்தே அவர்களின் மனநிலையை அழகாக வர்ணித்து உள்ளீர்கள் நண்பா வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. பெருந்தன்மையான நடத்துனர்ங்க..

  //.. எதைப் பற்றியும் கவலைப் படாமல் தூங்கி ..//
  நான் இந்த வகை.. :-))))

  பதிலளிநீக்கு
 4. //இரவு 12 மணியாச்சு பசிதாங்கமுடியாம சாப்பிட்டு வந்தேங்க….
  அவ்வளவு தான் வண்டிய எடுத்தாச்சு
  என்றார்..//
  வயிறு காலியா இருந்தா..உள்ள கப கப'ன்னு எரியும்...
  கோவம் அதிகமாகி பேச்சு முத்தும்...
  அவர் சாப்பிடலைன்னா...மக்கா இவங்க வார்த்தைகள்ல அவர் சிக்கன் 75 போட்டிருப்பாரு...

  பதிலளிநீக்கு
 5. இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது நண்பரே...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 6. பஸ்சில் சீட் பிடிப்பது எம்.எல்.ஏ சீட்டை விட பெரியது நண்பரே... அச்த்தல் அனுபவம் .. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. @spதங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்ற அன்பரே

  பதிலளிநீக்கு
 8. மிகச் சாதாரணமாக வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான் என்றாலும் படிக்கச் சுவாரசியமாக இருந்தது. உங்கள் உரையின் வீச்சு சிறப்பான வகையில் உள்ளது.

  பதிலளிநீக்கு