வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 18 செப்டம்பர், 2010

கணினி செயல்பாடுகளை வீடியோவாக்க..


இன்றைய சூழலில் நம் கணினியில் பயன்டுத்தும் பலவிதமான கோப்புகளை நாம் விரும்பும் வெவ்வேறு வடிவங்களாக மாற்றிக்கொள்வதற்கெனப் பல தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன.

பவர் பாயின்ட் கோப்பினை வீடியோவாக்கும் வசதிக்குப் பின்னர் நானறிந்து வியந்த தொழில்நுட்பம்..

கணினி செயல்பாட்டை வீடியோவாக்கும் தொழில்நுட்பமாகும்.
இந்த இலவச மென்பொருளைப் இங்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்..


கணினியின் செயல்பாடுகளை வீடியோவாக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி..

1. கணினியில் ஒரு செயல்பாட்டை அடுத்தவருக்கு ஒலி ஒளி வசதியுடன் தெளிவாக விளக்கலாம்.
2. எந்தத் துறையாக இருந்தாலும் நம் கருத்துக்களை இதுவரை வேர்டு, பவர்பாயின்ட், ஒலி, ஒளி என வெவ்வேறு தொழில்நுட்பங்களின் துணைகொண்டு கொடுத்திருப்போம்…

இந்த முறை அதற்கு ஒரு மாற்றாகவும் புதிய அனுபவமாகவும் அமையும்.


கூகுளில் சென்று ப்ரீ ஸ்கீரீன் ரெக்கார்டர் என்னும் குறிச்சொல்லைக் கொடுத்துத் தேடினால் நிறைய மென்பொருள்கள் கிடைக்கின்றன. அதில் இலவசமாகவும் நல்ல தொழில்நுட்ப வசதியும் கொண்டதாக இந்த மென்பொருள் விளங்குகிறது.

கணினி செயல்பாட்டை இலவசமாக ரெக்கார்டு செய்யம் வசதி விண்டோசின் ஏழாவது பதிப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வசதி இல்லாதவர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மென்பொருள் விண்டோசின் எச்பியில் நன்றாகப் பணிபுரிகிறது.

10 கருத்துகள்:

 1. அருமை நண்பா வாழ்த்துக்கள் நான் பதிவிறக்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 2. தொழில் நுட்பத்தில் கலக்குகிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 3. உபயோகமான பதிவு.
  பதிவிறக்கி பயன்படுத்திப் பார்க்கிறேன் நண்பரே..!

  பதிலளிநீக்கு
 4. நன்றி நண்பரே..தமிழ்பதிவுகள் என்ன ஆச்சு...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  பதிலளிநீக்கு
 5. @தேவன் மாயம் ஏதோ நானறிந்ததை நண்பர்களும் அறியட்டுமெ என்ற எண்ணம் தான் மருத்துவரே.

  பதிலளிநீக்கு
 6. @வேலன். தொடர்ச்சியான தமிழ்ப்பதிவுகளுக்கிடையெ இணையத்தமிழ்நுட்பமும் அன்பர்களுக்காக...
  நண்பரே.

  பதிலளிநீக்கு