வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்.


“ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்கிறார்கள்
ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்கிறார்கள்“

“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

Þ ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.


இவர்….

(செப்டம்பர் மாதம் 5,ஆம் தேதி 1888ஆண்டில் - பிறந்தார்) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 42 டாக்டர் பட்டங்களைப் பெற்றவராவார். ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.Ø ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தம்பணியை நேசித்து அர்பணிப்பு உணர்வுடன் வாழ்ந்துகாட்டிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை இவ்வேளையில் ஒப்புநோக்கி தம் பணியை சீர்தூக்கிப்ப பார்ப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.

Ø தமது வாழ்க்கையை வடிவமைத்த, வடிவமைக்கும் ஆசிரியர்களை நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது மாணாக்கர்களின் கடமையாகும்.


-------------/\--/\-------------------/\--/\--------------------/\--/\--

7 கருத்துகள்:

 1. "ஒரு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை தருவது
  சிறந்த கல்வி மட்டுமே அப்படிப்பட்ட நல்ல கல்வி தரும் ஆசிரியர்களுக்கு ஒரு சல்யுட் "

  பதிலளிநீக்கு
 2. தகவலுக்கு நன்றி, ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அருமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ஒரு நல்லாசிரியருக்கு,

  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

  சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஜி பற்றி
  புதுப் புது தகவல்களறிந்து கொண்டோம்.
  நன்றி!!

  பதிலளிநீக்கு
 5. நம் வாழ்வை செழுமையாக்க அடிக்கல்லாக இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 6. எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு