வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 26 மார்ச், 2012

எனக்குப் பிடிக்காத ஒரே மதம்!



எல்லோருக்கும் பிடித்த மதம் தான்
உலகிலேயே பெரிய மதம் தான்
எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான்
எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான்
பரப்பாமலே பரவும் மதம் தான்
என்றாலும்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை!
ஆம் அந்த மதத்தின் பெயர்..

“கால தா மதம்

எனக்குக் காக்கவைப்பதும் பிடிக்காது
காத்திருப்பதும் பிடிக்காது
அதனால் இந்த கால தா மதமும் பிடிக்காது!

தொடர்புடைய இடுகைகள்

37 கருத்துகள்:

  1. உங்கள் கருத்து எனக்கும்
    சம் மதம்

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதத்தை மதித்து காலதா மதமின்றி வந்தமைக்கு நன்றி புலவரே

      நீக்கு
  2. உண்மையிலேயே அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. நேரத்தை மதிப்பவர் நீங்கள் முனைவரையா. அதனால்தான் இந்த மதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நானும் உங்களைப் போலத்தான் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நன்றி!

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்
    அருமையான சிந்தனை முனைவரே

    பதிலளிநீக்கு
  5. உங்கள் தா மதம் கருத்தின் உடன்பாடு
    எனக்கும் சம்மதம் தாங்க குணா தமிழ்.

    பதிலளிநீக்கு
  6. வேடிக்கையாக ஒரு வேண்டாத மதம் பற்றிச் சொல்லிப் புரியவைத்திருக்கிறீர்கள்.பாராட்டுகள் முனைவரே. இதைப் பற்றிக் கொண்டுத் தொங்கும் உள்ளங்கள் பிடியை விட்டுவிட்டுச் செயலாற்ற முனையவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. இம் மதம் எனக்கும் பிடிக்காது...நன்று.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே
    பிரதிபலிக்கும் அருமையான பதிவு
    நிச்சயம் தங்கள் நியாயமான கோபம்
    இந்தக் கருங்காலிகளை நிச்சயம்
    அடியோடு கருவருக்கும்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. உண்மையிலேயே இந்த மதம் ஆபத்தானதுதான். மதவெறி என்றுமே பயங்கரமானதுதான். அருமையான சிந்தனை முனைவரே!

    - இன்றைய வலைச்சரத்தில் தங்களது பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் கிடைத்தது. வாய்ப்பிருந்தால் வருகை தரவும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் நன்றிகள் அன்பரே.
      கண்டு மகிழ்ந்தேன்..

      நீக்கு
  10. இந்த மதத்தை ஒழித்தால் நாம் செம்மையாவோம்..நாம் செம்மையானால் நாடு செம்மையாகும்..நாடு செம்மையானால் சமுதாயம் செம்மையாகும்..பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  11. நெடுநீர் - கெடுவாரின் காமக்கலன் என வள்ளுவன் சொன்னதை நாம் மறந்துவிட்டோம். அந்த அறிவுரையை நம் மனதில் நிற்கும்படி செய்துவிட்டீர்கள் உங்கள் கவிதையால். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அநேகமாக இந்த மதத்தை ஒழிக்கவே முடியாதென்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு