வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, March 27, 2012

பதிவுலகத் திருடர்கள் வாழ்க


பணத்தைத் திருடலாம்!
தங்கத்தைத் திருடலாம்!
அறிவை..?

காவல் நிலையங்கள் 
நீதி மன்றங்கள்
இத்தனை இருந்தும் 
ஏன் குறையவில்லை குற்றங்கள்?

பதிவுலகத் திருட்டைத் தடுக்க
எத்தனை எத்தனை 
வழிமுறைகள் 

வலதுசுட்டியைச் செயலிழக்கவும்
இடது சுட்டியைச் செயலிழக்கவும்
காப்புரிமை சட்டங்களும்
ஆயிரம் ஆயிரம் 
பாதுகாப்புகள் இருந்தாலும் 
தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன
பதிவுலகத் திருட்டுகள்..

பலர் புலம்புகிறார்கள்..

ஐயோ ஐயோ
குய்யோ முறையோ
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் 
என்னோட பதிவை தன்னோட பதிவென்று வெளியிடுகின்றானே..
என் பெயர் சொல்லியாவது வெளியிட்டிருக்கலாமே..

என்று..

இத்தனை காலம் நான் வாழ்ந்த வாழ்வில் கற்ற பாடம்..

திருடர்கள் என்றாவது அறிவாளியாவார்கள் 
                           ஆனால்
                        அறிவாளிகள் என்றும் திருடர்களாக மாறிவிடக்கூடாது..


ஒருவர் பதிவை இன்னொருவர் திருடுகிறார் என்றால் 
          எழுதுகிறவர் அறிவுபூர்வமாக எழுதுகிறார்
திருடுபவருக்கு அறிவுப் பசி எடுத்திருக்கிறது 
என்பது பொருள்.


நான் பதிவுலகில் கால்பதித்த காலத்தில் எனது பதிவைப்
 பலரும் என் பெயரோடு வலைமுகவரியோடு வெளியிட்டார்கள்
சிலர் என் பெயரில்லாமல் வெளியிட்டார்கள்
சிலர் என் பதிவைத் தன்பதிவு என்று வெளியிட்டார்கள்..

என் பதிவுகளை யார் எடுத்தாண்டாலும் அதற்காக நான் வருந்தியதில்லை...  
மாறாக நம் கருத்து இவருக்கும் பிடித்திருக்கிறது என்றே எண்ணி  மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.

நாலு பேர் நம்ம அறிவைத் திருடிக் கொள்வார்கள் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை..

நான் ஒவ்வொரு பதிவு எழுதும்போதும்..
இதுவரை எழுதாத ஒன்றை இதில் எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடனேயே எழுதுவேன்..
நான் எழுதிய பதிவை நானே படிக்கும்போது
புதிதாக நாம் எதையும் எழுதிவிடவில்லை என்றே
எண்ணி வந்திருக்கிறேன்.

நம் கருத்தை எத்தனைபேர் திருடியிருக்கிறார்கள்?
என்று பார்ப்பதைவிட
நம் கருத்து எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது?
என்ற தேடலே நம்மை நாம் வளர்த்துக்கொள்ளத் துணைநிற்கும் என்று கருதுகிறேன்.

தேனீ அயராது உழைத்துத் தேடிவைத்த தேனை யார்வேண்டுமானாலும் 
திருடிக்கொள்ளமுடியும் - ஆனால்
அந்தத் தேனைத் தேடும், அதன் கலைத்திறனையோ, முயற்சியையோ யாரும் திருடமுடியாது

அதனால் நாம் அறிவாளிகள் என்பதை
நமக்கும் உணர்த்தி
நம்மை உலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த 
பதிவுலகத் திருடர்கள் வாழ்க!தொடர்புடைய இடுகைகள்

அறிவெனப்படுவது யாது
புத்தியைத் தீட்டுவது எப்படி

71 comments:

 1. கவிதை நல்லா இருக்கேன்னு இதையும் திருடி போட்டுட்ட போறாங்க......

  ReplyDelete
  Replies
  1. கவிதையைத் தானே நண்பா திருடுவாங்க..
   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா..

   வருகைகக்கு நன்றி வரலாற்றுச் சுவடுகள்.

   Delete
 2. கொஞ்சம் நீரை
  யாரோ ஒருவர்
  அள்ளிப் போய்விடுவதால்
  வற்றிவிடாது
  மாக சமுத்திரத்திரம்


  என்ன செய்ய தோழரே
  சில களவாணிகள் அப்படித்தான்

  ReplyDelete
 3. அன்புநிறை முனைவரே,
  யார் யார்க்கு எது இல்லையோ அதைத்தானே திருடுவார்கள்..

  நீங்கள் இந்தத் திருட்டையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளுதல்
  அழகு. நம் பதிவை, நம் எழுத்தை அவர்கள் சுமந்து கூக்குரலிட்டு
  விற்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல புரிதல் நண்பரே நன்றிகள்.

   Delete
 4. sariyaaka sonneenga!
  thiruthuvathun moolam-
  namathu ennam naalu perukku seruthe-
  santhosamthaan!

  kaval entraalum ketkavaa pokiraarkal!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சீனி.
   தொடர் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 5. திருடர்களையும் வாழ்த்தும் தங்கள் பண்பு பாரட்டுக்குரியது. எந்தத் தொழில் நுட்பம் வந்தாலும் திருட்டு குறையவில்லை. நீங்கள் கூறியதுபோல் திருடர்கள் அறிவாளிகள்தான் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அவர்களுடைய சொந்த படைப்பு திருடப்படும்போதுதான் உணர்வார்கள் என்று நினைக்கிறேன். எனது பதிவுக் குறள் பத்தில்
  " பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
  உன்பதி வும்களவு போம்"
  இதெல்லாம் அவர்களுக்கு உறைக்கவா போகிறது?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவைக் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே நன்று..

   Delete
 6. இதுதான் நாலுபேர் நாலுவிதமாகப் பேசுவதோ!!!

  ReplyDelete
 7. //என் பதிவுகளை யார் எடுத்தாண்டாலும் அதற்காக நான் வருந்தியதில்லை...
  மாறாக நம் கருத்து இவருக்கும் பிடித்திருக்கிறது என்றே எண்ணி மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.//

  எத்துனை பரந்த உள்ளம்..... வாழ்த்துகள். ஆனால் என் பல பதிவுகள் இது போன்று வரும் பொழுது மனம் வலிக்கத்தான் செய்கிறது. வேறு என்ன செய்வது..?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் முத்து..
   சிந்திப்போம் சிந்திக்கவைப்போம்.

   Delete
 8. இப்படியும் சிலர்..... :(((

  ReplyDelete
 9. திருடனைப் பார்த்து திருந்தினால் தான் உண்டு !

  ReplyDelete
 10. 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

  ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-13

  அரசு தேவை இல்லாததை இனாமாக அள்ளி அள்ளிக் கொடுக்க உங்கள் அறிவை கொடுத்து மகிழுங்கள் .அது இறைவனது சொத்து. அது உங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்வையும் கொடுக்கும்.

  'நான் பதிவுலகில் கால்பதித்த காலத்தில் எனது பதிவைப்
  பலரும் என் பெயரோடு வலைமுகவரியோடு வெளியிட்டார்கள்
  சிலர் என் பெயரில்லாமல் வெளியிட்டார்கள்
  சிலர் என் பதிவைத் தன்பதிவு என்று வெளியிட்டார்கள்..

  என் பதிவுகளை யார் எடுத்தாண்டாலும் அதற்காக நான் வருந்தியதில்லை...
  மாறாக நம் கருத்து இவருக்கும் பிடித்திருக்கிறது என்றே எண்ணி மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.'
  -முனைவர். இரா.குணசீலன், தமிழ் விரிவுரையாளர்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவைக் கண்டு மகிழ்ந்தேன் அன்பரே மிக்க நன்றி.

   Delete
 11. தங்களின் நல்ல மனதுக்குப் பாராட்டு. ஆனால்........
  திருடுகிறவன் திருடியவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டுச் சப்பாதிக்கலாமே?
  திருடு கொடுத்தவர்கள் இதை அனுமதிக்கலாமா?
  நல்லவராக...பெருந்தன்மை உள்ளவராக இருக்கலாம். ஏமாளியாக இருக்கலாமா?
  நான் கடவுளின் ‘இருப்பு’ தொடர்பாக மட்டுமே எழுதி வருகிறேன். நூலாக வெளியிடும் எண்ணமும் உள்ளது.
  ’நான் நாத்திகன்’ என்று சொல்லிக் கொள்கிற ஒரு திருடன், என் ஐந்து பதிவுகளைத் திருடி, தன் சொந்தச் சரக்காக வெளியிட்டுவிட்டான்.
  கூகிளுக்கு முறையிட்டு அவற்றை நீக்கச் செய்தேன்.
  இனியும் அவன் திருடலாம் என்பதால் உற்சாகமிழந்து புதிய பதிவு போடாமல் சிறுகதைகள் மட்டும் வெளியிட்டேன்.
  பதிவு போடுவதையே நிறுத்திவிடலாம் என்ற எண்ணமும் உள்ளது.
  வேறு என்ன செய்ய?
  நன்றி நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. இதெற்கெல்லாம் அசரலாமா நண்பரே..
   ஒரு விதை செடியாவதற்கும் செடி மரமாவதற்கும் போராடும் போராட்டத்தைவிட இதுபெரிதா என்ன...?

   தொடர்ந்து எழுதுங்க நண்பா.

   Delete
 12. உண்மை...ஆனாலும் திருட்டை ஒத்துக் கொள்ள முடியாது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி அன்பரே

   Delete
 13. வித்தியாசமான சிந்தனை

  ReplyDelete
 14. திருட்டை கூட இப்படி பார்க்க முடியுமா ? அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இராஜா

   Delete
 15. நல்லா இருக்கட்டும்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்ந்துட்டுப் போகட்டும் விடுங்க..

   வருகைக்கு நன்றி பாலா

   Delete
 16. சொந்தமாய் யோசிக்க புத்தியில்லாதவர்கள் புத்திசாலிகளின் அறிவை திருடி தன்முகவரி தேடுகிறார்கள். இறைக்க இறைக்க வற்றாத கேணி அல்லவா நம் அறிவு. கவலை வேண்டாம்.

  ReplyDelete
 17. "ஒருவர் பதிவை இன்னொருவர் திருடுகிறார் என்றால்

  எழுதுகிறவர் அறிவுபூர்வமாக எழுதுகிறார்
  திருடுபவருக்கு அறிவுப் பசி எடுத்திருக்கிறது
  என்பது பொருள்."

  ***மிகச்சரியான சொன்னீர்கள்.***

  ReplyDelete
 18. உங்கள் பெருந்தன்மைக்கு பாராட்டுகள். ஆனால் எல்லோரும் இதே மனப்பான்மையில் எடுத்துகொள்வார்கள் என்று நினைக்கவில்லை. எழுத்து என்பது பல உரு; கரு மாற்றங்களுக்கு பின்னரே வடிவம் கொள்கிறது. அதனை திருடுபவர்கள் உணர வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. உணர்த்த முயற்சிப்போம் பாரதி.

   Delete
 19. எடுத்தாளல் என்பது சரிதான், ஆனால் கருத்துகளை திருடுதல் தவறுதான்..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அன்பரே..
   தவறைக் கூடத் தவறின்றி செய்யத்தெரியாதவர்களே இவ்வாறு செய்துகிறார்கள் என்பது என் கருத்து.

   Delete
 20. நேர்மறை எண்ணம் நன்று முனைவர் அவர்களே...


  :)

  ReplyDelete
 21. முனைவரே... நாம் கற்றதையும் கண்டதையும் தான்
  நாம் எழுதுகிறோம். நம்மிடம் கற்றதை மற்றவர்கள்
  எடுத்து எழுதுகிறார்கள் என்று விட்டுவிடுவோம்.
  சங்ககால இலக்கியங்கள் யாரிடம் போய் முறையிடும்? சொல்லுங்கள்....

  ReplyDelete
  Replies
  1. நன்றாகக் கேட்டீர்கள் நண்பரே

   Delete
 22. நயமுடன் சொன்னீர்கள் முனைவரே! திருடர்கள் இருக்கும் வரைதான் நல்லவர்களுக்கு நல்ல பெயர். எல்லாருமே நல்லவர்களாகி விட்டால் யாரை நல்லவர்கள் என்று அழைப்பது? தங்களது சிந்தனை அருமை.

  ReplyDelete
  Replies
  1. திருடர்கள் இருக்கும் வரைதான் நல்லவர்களுக்கு நல்ல பெயர். எல்லாருமே நல்லவர்களாகி விட்டால் யாரை நல்லவர்கள் என்று அழைப்பது?

   தங்கள் வினா சிந்திக்கவைத்தது..

   நன்றி அன்பரே

   Delete
 23. மேலே உள்ள அனிமேஷன் படத்தில் உள்ள தமிழ்ப்பெரியார்களைக் காணும் போது உள்ளம் நெகிழ்கிறது. திருவள்ளுவர், தஞ்சை கவிராயர் வேதநாயகம் சாஸ்திரியார், ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, தியாகராசனார், ஆறுமுகம் நாவலர், இன்னும் சில பெரியார்கள் வாழ்ந்த நாட்டில்தானா நாம் வாழ்கிறோம். மாணிக்கங்களல்லவா அவர்கள்? அவர்கள் சேவைகளை எண்ணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. தமிழனாய் பிறந்ததற்கு உள்ளம் பொங்குகிறது. தமிழ் பேச நா இனிக்கிறது. இவர்களைப் போல அல்ல அல்ல... இவர்கள் செய்ததில் 1 சதவீதமாவது நம் அன்னைத் தமிழுக்கு தொண்டாற்றினாலே ஜென்ம சாபல்யம் கிடைக்கும். பிளாஷ் ப்ளேயர் படம் அருமையிலும் அருமை. உங்களது தமிழ்த்தொண்டு பாராட்டத்தக்கது. வலைப்பூக்களில் நீங்கள் செந்தமிழ்ப் பூ.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி அன்பரே..
   இந்த படங்கள் யாவும் www.thamizham.net என்னும் தளத்தில் பெற்றேன். இவ்வேளையில் அதன் உரிமையாளர் ஐயா பொள்ளாச்சி நசன் அவர்களின் அரும்பணியை நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.

   Delete
 24. என் எண்ணத்தின் எதிரொலியாக தங்கள் பதிவு
  உள்ளது முனைவரே!
  மேலும் பல தில்லு முல்லு வேலைகளும்
  பதிவுலகில் இன்று நடக்கிறது நான் எதைப்பற்றியும்
  கவலைப் படுவதில்லை மறுமொழியும் வாக்கும்
  படிக்கும் வலைதோறும் தவறாமல் இடுவேன்
  சிலர் என் வலைவழி வந்து மறுமொழி
  இட்டு வேண்டுமொன்றே வாக்கிடாமல் போவதையும்
  அறிவேன்.
  என்ன இடம் என்றோ? எத்தனை வாக்கு
  என்றோ? பார்ப்பதோ கவலைப்படுவதோ இல்லை.

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மனநிலையே தாங்கள் இந்த வயதிலும் இவ்வளவு தூரம் வளர்ந்ததுக்கான காரணத்தை இயம்புவதாக இருக்கிறது..

   மகிழ்ச்சி புலவரே..

   Delete
 25. அருமையான பதிவு. நன்றி.
  மின்வெட்டு காரணமாக நிறைய படிக்க முடிவதில்லை.

  ReplyDelete
 26. நம் கருத்து எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது?
  என்ற தேடலே நம்மை நாம் வளர்த்துக்கொள்ளத் துணைநிற்கும் என்று கருதுகிறேன்.

  சிறப்பான கருத்துகள்..

  ReplyDelete
 27. விடுங்க! உங்கள் எழுத்தைத்தானே திருடறாங்க. உங்கள் புகழைத் திருடமுடியாது.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் புரிதல்தான் நம் வளர்ச்சிக்கான அடையாளம் நண்பா.
   வருகைக்கு நன்றி

   Delete
 28. இந்த பதிவுக்கும் மைனஸ் ஓட்டா? என்னய்யா உலகம் இது? ஒண்ணுமே புரியலையே?!....!

  ReplyDelete
  Replies
  1. வேறொன்றுமில்லை நண்பரே..
   எனக்கு இதுவரை மைனஸ் ஓட்டே விழுந்ததில்லை..
   அது சரியாக இயங்குகிறதா என்று அந்த நண்பர்கள் சரிபார்த்திருக்கிறார்கள்..
   அவ்வளவுதான்..

   Delete
 29. ஆகா, இந்தப் பதிவுக்குக்கூட ஐந்து மைனஸ் வோட்டுகள்!
  ஒருவேளை திருடர்களாக இருப்பார்களோ.

  ReplyDelete
  Replies
  1. பதிவுலகத்திருடர்கள் வாழ்க என்ற என் வாழ்த்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கான அடையாளமே அது நண்பரே..

   Delete
 30. //பதிவு போடுவதையே நிறுத்திவிடலாம் என்ற எண்ணமும் உள்ளது.
  வேறு என்ன செய்ய?//


  பரமசிவம் அய்யா..
  அவர்களுக்கு பயந்து ஏன் உங்கள் படைப்பாற்றலை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா..
   தொடர்ந்து எழுதுங்கள்..
   இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சாதித்துக் காட்டுங்க..

   Delete
 31. மைனஸ் போட்ட கயவர்களே, உங்களை நீங்களே காட்டிக் கொடுத்து விட்டீர்களே....

  ReplyDelete
 32. மைனஸ் போட்டு கயவர்கள் தங்களைக் காட்டிக் கொடுத்து விட்டார்களே.....

  ReplyDelete
  Replies
  1. அந்த அன்புள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   Delete
 33. வணக்கம் நண்பரே,
  அருமையான பதிவு.32வது ஓட்டு.இந்த மாதிரி பதிவுக்கு கூட‌ யாருப்பா எதிர் ஓட்டு போட்ட புண்ணியவான்கள்?.மாறுக் கருத்துகளை தெரிவிக்கலாமே! வாழ்க வளமுடன்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. மாற்றக்கருத்துக்களைத் தெரிவிக்க ஒருவேளை அவர்களுக்குத் தமிழ்த்தட்டச்சுத் தெரியாதோ என்னவோ பாவம்..

   தங்கள் அன்புக்கு நன்றி சார்வாகன்.

   Delete
 34. உங்கள் பதிவில் மைனஸ் ஓட்டு போட்டவர்களை பார்க்க இந்த வலையை திறக்கவும்

  http://www.etakkumatakku.com/2012/03/blog-post_30.html

  ReplyDelete
 35. அன்று நீங்கள் போட்ட பதிவு. இன்றும் படிக்கும்படியாக உள்ளது. உங்களைப் போல எல்லோரும் இருப்பார்களா என்று சொல்ல முடியாது. வலைப் பதிவில் திருட்டு வேலை எதற்கு? இது அடுத்தவன் உழைப்பை சுரண்டுவது.

  ReplyDelete
  Replies
  1. உடல் உழைப்பைத் திருடுபவர்களைவிட
   அறிவு உழைப்பைத் திருடுபவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள் என்பது உண்மைதான் நண்பரே..

   தங்கள் கருததும் சிந்திக்கத்தக்கதே.

   Delete
 36. அருமை ஐயா. திருடர்களாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

  ReplyDelete