ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மன்னிப்புக்கு சமமான சொல்லா சாரி?


இன்றும் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று சாரி! மிக இயல்பாக சாரி என்று சொல்லிவிடுகிறோம். உதடுகள் ஒட்டாமல் வருவதாலே என்னவோ அந்த சாரி என்ற வார்த்தைகளுடன் உள்ளங்களும் ஒட்டுவதில்லை! ஆனால் மன்னிப்பு என்ற வார்த்தையைச் சொல்லும்போது அப்படி இயல்பாகச் சொல்லிவிடமுடிவதில்லை. அதுதான் தாய்மொழியின் தனித்தன்மை!

யானோ அரசன் யானே கள்வன் 
மன்பதை காக்குந் தென்புலங் காவல் 
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென 
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
ஒரு தவறு செய்தால், அதை அறியாமல் செய்தாலும் அது அரசனே என்றாலும் அதற்காக மன்னிப்புக் கேட்பதைவிட உயிர்விடுவதே மேலானது என்ற உயரிய கோட்பாட்டை மொழிந்தன நம் தமிழ் இலக்கியங்கள் நாமோ இன்று தயங்காமல் சாரி கேட்கிறோம்..
சாரி கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கில மேதைகள் என்று யாரும் எண்ணிக்கொள்ள மாட்டார்கள். மன்னிப்புக் கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கிலம் தெரியதவர்களாகிவிட மாட்டோம். ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் தொடர்வண்டியில் பயணம் செய்தார்அவரின் அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர்அண்ணாவின் 
தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர்அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார்அமைதியாக இருந்தார் அண்ணாமீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும்
அயாம் நாட்  லாரி கேரி யுவர் சாரி  
  (I am not a lorry carry your sorry)   என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி அவர்களை அதிர வைத்தார் அண்ணா
தவறு என்பது தவறி செய்வது!
தப்பு என்பது அறிந்தே செய்வது!
நாம் செய்த தவறுக்காக
ஏன் தெரிந்தே தப்பு செய்யவேண்டும்!

ஒன்றை மட்டும் உணர்ந்துகொள்வோம்
மன்னிப்பு என்ற வார்தைக்கு சாரி என்ற வார்த்தை என்றும் சமமனாதல்ல!

10 கருத்துகள்:

 1. #சமமனாதல்ல#
  சமமானதல்ல என்ற வார்த்தைக்கு இதுவும் சமமானதல்ல!
  பதிவை ரசித்தேன் பேராசிரியரே :)

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  மிக அற்புதமான விளக்கம் சார்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. அருமையான விளக்கம்
  Sorry ஐத் தவிர்த்து
  மன்னிப்பு என்பதையே பாவிக்கலாம்!

  பதிலளிநீக்கு