பக்கங்கள்
திருக்குறள் தேடுபொறி
திருக்குறள் தேடுபொறி
ஞாயிறு, 16 டிசம்பர், 2012
சனி, 15 டிசம்பர், 2012
ஊடுதல் காமத்துக்கு இன்பம்.
அன்று கோவலன் மாதவியிடம் சென்று மீண்டும் கண்ணகியிடம் வந்தபோது, அன்றைய கண்ணகி காலில் இருந்த சிலம்பைக் கழற்றிக் கொடுத்தாளாம். அதுதான் கற்புடைமை என இன்றும் போற்றப்படுகிறது.
இன்றைய கண்ணகியாகியரும் காலில் உள்ளதைக் கழற்றிக்கொடுப்பார்கள். சிலம்பை அல்ல! செருப்பை!
தலைவன்
பரத்தையரிடம் சென்று மீண்டும் தலைவியை நாடி வருகிறான். அவனுடைய தவறை மறந்து, அவனை
ஏற்றுக்கொள். அவன் மீது கோபம் கொள்ளாதே என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். அப்போது தோழியிடம் தலைவி
சொல்வதாக இப்பாடல் அமைகிறது
நன்னலம் தொலைய நலம்
மிகச் சாஅய்
இன்னுயிர்க் கழியினும் உரையல் அவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியது எவனோ அன்பிலங்கடையே
அள்ளூர் நன்முல்லையார்
குறுந்தொகை -93
எனது பெண்மை நலம் கெடவும், உடல் மெலியவும், எல்லாவற்றையும்
விட எனது இனிய உயிர் நீங்கினாலும், அவரிடம் கோபமாக நடந்துகொள்ளாதே அவரை
ஏற்றுக்கொள் என்கிறாய்?
நீ சொல்வதும் சரிதான்!
தலைவர் நமக்கு தாயும், தந்தையும் அல்லவா?
அவரிடம் நான் எவ்வாறு கோபம் கொள்வேன்!
கோபம் கொள்ள அவர் என்ன என் தலைவரா?
கோபமெல்லாம் அன்புடையாரிடத்தல்லாவா நிகழ்வது?
இப்பாடலை நேரடியாகப் பார்த்தால் தலைவன் பெற்றோருக்கு இணையாக வைத்துப் பாராட்டப்படுகிறான்
என்றுதான் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால், தலைவன் மீது தலைவிகொண்ட கோபம்
புரியும்.
தலைவன் பெற்றோரைப் போல மதிக்கத்தக்கவன்
ஆனால் என் கணவன்(காதலன்) போல அன்புகொண்டு கூடி மகிழத் தகுதியில்லாதவன்.
என்ற கருத்துதான் தலைவியின் ஆழ்மனவெளிப்பாடாகவுள்ளது.
தலைவன் பரத்தையிடம் சென்றதால், தலைவிக்கு ஏற்பட்ட நயமான ஊடல்(புலவி) நறுக்கென்று தலைவனுக்குத் அவன் தவறை உணர்த்துவதாக உள்ளது.
அன்பு யார் மீதும் காட்டலாம்
ஆனால்
கோபம் உயிருக்கு மேலான உரிமையுடையவரிடம் தான் வெளிப்படத்தமுடியும்
என் கருத்தை
எடுத்தியம்புதாக இப்பாடல் அமைகிறது.
செவ்வாய், 11 டிசம்பர், 2012
திங்கள், 10 டிசம்பர், 2012
உங்கள் வீட்டுத் திறவுகோல்
·
வெள்ளையனே
வெளியேறு என்று அன்று காந்தியோடு
சேர்ந்து பலரும் போராடினார்கள்..
·
இன்று
வெ(கொ)ள்ளையனே கடைபோடு என்று இந்தியா சத்தம்போட்டு அழைக்கிறது.
·
விடுதலை
வாங்கிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டாலும், நாம் இன்னும் மொழியால் (ஆங்கிலம்)
அடிமைப்பட்டுத்தான் இருக்கிறோம்.
·
இந்தச்சூழலில்
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என நம் மீண்டும் அடிமைப்படுகிறோமோ என்ற சிந்தனை
பாமர மக்களைக்கூட அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
·
இந்த
சூழலில் விடுதலைப்போராட்ட காலத்தில் பாலகங்காதர திலகர் அவர்கள் பேசிய வார்த்தைகள்
தான் நினைவுக்கு வருகிறது.
மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டலாம் வரலாம்..
அப்போதும் ஒரு திலகர் வரலாம்..
இப்படி உணர்ச்சிபொங்கப் பேசலாம்..
ஆனால் நமக்கு உணர்ச்சி வருமா?
என்பதுதான் ஐயப்பாடாகவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)