பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014
தை மாதத்தின் பிறப்பு!
Labels:
பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 31 ஜூலை, 2014
துளிப்பாக்கள்
வாா்த்தைகள்
உன்னுடன் பேச என் வாா்த்தைகள்
நான் நீ என சண்டைபோட்டுக்கொள்கின்றன
ஆனால் உன்னைப் பார்க்கும்போது
என் மௌனம் மட்டுமே எப்போதும் முந்திக்கொள்கிறது!
---- ---- -----
அழுகை
பிறக்கும்போதும் கலவரம்
இறக்கும்போதும் கலவரம்
இதுவே வாழ்வின் நிலவரம்!
----- --- -----
பிாிவின் வலி
மரணத்தினால் ஏற்படும் வலியைவிட
.
பிாிவினால் ஏற்படும் வலி கொடுமையானது
மரணம் ஒரு நிமிட வலியைத் தரும்
பிாிவு மரணத்தையே வலியாகத் தரும்!
----- ---- -------
படைப்பாக்கம் - இளம் கவிஞர் மு.தமிழ்மணி
வேதியியல் முதலாம் ஆண்டு
கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி
திருச்செங்கோடு
Labels:
கவிதை,
மாணவர் படைப்பு
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
செவ்வாய், 29 ஜூலை, 2014
கேள்வி கேட்கவேண்டிய முறை (தென்கச்சியார்)
முன்னொரு காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டார்கள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி அவர்களுக்கிடையில் விவாதம் எழுந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாக விளக்கம் கூறினார்கள். இருந்தாலும் அவர்களுக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
ஆதலால் அவர்கள் தங்கள் சந்தேகத்தை உத்தாலக மகரிசியிடம் சென்று கேட்டனர்.
ஆனால் உத்தாலகரோ,
“இதற்கு ஒருவரால்தான் விளக்கம் கொடுக்கமுடியும். அவர்தான் மன்னர் அசுவபதி. மகாஞானி
அவர். எனவே நாம் அனைவரும்அவரிடம் சென்று இதைப்பற்றிக் கேட்கலாம்.”என்றார்.
அதன்படியே அனைவரும்
அசுவபதி மன்னரிடம் சென்றனர்.
அசுவபதி எல்லோரையும்
மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவா்களுக்கு உயர்ந்த ஆசனம் கொடுத்து விதிமுறைப்படி வணங்கினார்.
பிறகு நல்ல உணவு பரிமாறி அவர்கள் அனைவரையும் சாப்பிடும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால்
ரிசிகள் யாரும் சாப்பிடாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
இதை அசுவபதி மன்னர் பார்த்தார்.அவர் அவர்களை நோக்கி ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்? நான் கொடுத்த உணவு குற்றமுடையது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமில்லை. என் ராச்சியதில் திருடர்கள் கிடையாது! குடிகாரர்கள் கிடையாது! ஆசாரமற்ற ஆண்கள் கிடையாது! அதனால் ஆசாரமற்ற பெண்களும் கிடையாது! என்றார்.
அதற்கு அந்த ரிசிகள், “ நாங்கள் இங்கே உங்களுடைய உணவை உட்கொள்வதற்காக வரவில்லை. ஜீ(சீ)வாத்மா, பரமாத்மா பற்றிய எங்களுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகவே உங்களிடம் வந்திருக்கிறோம். என்று தெரிவித்தார்.
உடனே அசுவபதி மகாராசா,
” இன்று உணவு அருந்துங்கள். நாளைக்கு அதைப்பற்றி யோசிக்கலாம்” என்று தெரிவித்தார்.
முனிவர்களும் அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு உணவு அருந்தினார்கள்.
அதன்பிறகு அவர்கள்
தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று தங்களுக்குள் உரையாட ஆரம்பித்தனர்.
அப்போது முனிவர்களுள்
ஒருவர், “அசுவபதி மன்னர் நாளைக்கு இதைப் பற்றி யோசிக்கலாம் என்றுதான் கூறினாரே தவிர,
பதில் சொல்கிறேன் என்று சொல்லவில்லையே!” என்றார் அவர் அவ்விதம் கூறியதும், மகாராசா
இப்படிச் சொன்னதற்குக் காரணம் என்னவாக இருக்கும்!” என்று முனிவர் அனைவரும் தங்களுக்குள்
யோசிக்க ஆரம்பித்தனர். அப்போது மகரிசி உத்தாலகருக்குப் பளிச்சென்று காரணம் புரிந்தது.
உடனே அவர் மற்ற
முனிவர்களைப் பார்த்து, ”நாம் எல்லோரும் ரிசிகள். நன்றாக விவரம் தெரிந்தவர்கள். அப்படியிருந்தும்
ஒரு விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றார். எந்த விசயத்தில் நாம் சரியாக
நடந்துகொள்ளவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று மற்ற முனிவர்கள் வினவினார்கள்.
உத்தாலகர் விளக்கம் கூறினார் – நம்முடைய சந்தேகத்தை மன்னர் அசுவபதியிடம் கேட்கவேண்டிய முறையில் நாம் கேட்கவில்லை.நாம் உயர்ந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு அவரிடம் விளக்கம் கேட்டது சரியில்லை” என்றார் உத்தாலகர்.
அவர் கூறியதைக்
கேட்டபிறகுதான் முனிவர்களுக்குத் தாங்கள் செய்த தவறு புரிந்தது. மறுநாள் முனிவர்கள்
அனைவரும் அசுவபதியிடம் சென்றார்கள். ஒரு சீடன்
எப்படி குருவை நாடிப் போகவேண்டுமோ, அந்த முறையில் பணிவோடு, முறைப்படி அசுவபதியை வணங்கி
தங்கள் சந்தேகத்தைக் கேட்டார்கள்.
அவரும் அவர்கள்
கேட்ட கேள்விகளுக்குச் சரியான விளக்கம் கொடுத்தார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள
வேண்டியது என்னவென்றால், எதையும் கேட்கவேண்டிய முறைப்படி கேட்கவேண்டும் என்பதுதான்!
ஒரு விசயத்தை எடுத்துச்சொல்பவர்
உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும். கேட்டுத்தெரிந்துகொள்பவர் தாழ்ந்த இடத்தில் இருக்கவேண்டும்.
அப்போதுதான் கேட்பர் அக்கறையாகக் கவனித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும். இது
கௌரவப் பிரச்சினை இல்லை.
( இன்று பாடம்
கேட்பவர் அமர்ந்துகொண்டும், பாடம் சொல்லித்தருபவர் நின்றுகொண்டும் இருப்பதை அன்றைய
கல்வி முறையோடு ஒப்பிட்டுக் காணும்போது, பெரியவர்கள் ஏன் அடிக்கடி நான் அந்தக்காலத்துல
படித்தவன் என்று சொல்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது.)
அந்தக் காலத்து எட்டாவது
தொடர்புடைய இடுகை
அந்தக் காலத்து எட்டாவது
Labels:
கல்வி,
தென்கச்சியார்,
படித்ததில் பிடித்தது
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
ஞாயிறு, 27 ஜூலை, 2014
அன்று இதே நாளில்..
அன்று இதே நாளில் பிறந்தவர்களுள்,
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களும் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களது தமிழ்ப்பணியை எண்ணிப் பார்ப்பது நம் கடமையாகும்.
![]() |
| நாவலர் |
Labels:
அன்று இதே நாளில்,
தமிழ் அறிஞர்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 26 ஜூலை, 2014
தமிழ் ஒலி நூல்கள்
Labels:
ஒலிக்கோப்புகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 25 ஜூலை, 2014
பொய்சாட்சி சொன்னால்..
ஒரு கதை...
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம்
பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.நாட்டின் பல
பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால்
அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள் கந்தல் உடை அணிந்த
ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள
விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம்
தெரிவித்தார்.அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம்
இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர
வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான்
வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய்
..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று
கத்தினான்.உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக்
கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே
போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள்
கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை
உணர்ந்தான்.உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய்
சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது
அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர
வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை
சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.
பொய் குறித்து இப்படிப் பல கதைகள் உண்டு. மருத்துவரிடமும்,
வழக்கறிஞரிடமும் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இவர்கள்
எவ்வளவு வேண்டுமானாலும் பொய்சொல்லலாம் என்பது இன்றைய
நிலையாகிவிட்டது.
பொய் பற்றிய சங்ககால நம்பிக்கையைக் காண்போம்
வழக்கறிஞரிடமும் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இவர்கள்
எவ்வளவு வேண்டுமானாலும் பொய்சொல்லலாம் என்பது இன்றைய
நிலையாகிவிட்டது.
பொய் பற்றிய சங்ககால நம்பிக்கையைக் காண்போம்
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி
கலித்தொகை 34-10
பொய் சாட்சி கூறியவன் வந்து கீழே தங்கியதால் பட்டுப்போன மரம் போல
நானும் அழகினை இழந்துவிட்டேன் என்கிறாள் தலைவி.
பொய் சாட்சி உரைத்தவன் கீழே நின்றால் அந்த மரம் வாடிவிடும் என்ற
இச்செய்தி அக்கால மக்களின் நம்பிக்கைக்குத் தக்க சான்றாக அமைகிறது.
தொடர்புடைய இடுகைகள்
Labels:
கதை,
கலித்தொகை,
சங்க கால நம்பிக்கைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










