செவ்வாய், 29 ஜூலை, 2014

கேள்வி கேட்கவேண்டிய முறை (தென்கச்சியார்)முன்னொரு காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டார்கள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி அவர்களுக்கிடையில் விவாதம் எழுந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் கூறினார்கள். இருந்தாலும் அவர்களுக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஆதலால் அவர்கள் தங்கள் சந்தேகத்தை உத்தாலக மகரிசியிடம் சென்று கேட்டனர்.
ஆனால் உத்தாலகரோ, “இதற்கு ஒருவரால்தான் விளக்கம் கொடுக்கமுடியும். அவர்தான் மன்னர் அசுவபதி. மகாஞானி அவர். எனவே நாம் அனைவரும்அவரிடம் சென்று இதைப்பற்றிக் கேட்கலாம்.”என்றார்.
அதன்படியே அனைவரும் அசுவபதி மன்னரிடம் சென்றனர்.
அசுவபதி எல்லோரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவா்களுக்கு உயர்ந்த ஆசனம் கொடுத்து விதிமுறைப்படி வணங்கினார். பிறகு நல்ல உணவு பரிமாறி அவர்கள் அனைவரையும் சாப்பிடும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் ரிசிகள் யாரும் சாப்பிடாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

இதை அசுவபதி மன்னர் பார்த்தார்.அவர்  அவர்களை நோக்கி ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்? நான் கொடுத்த உணவு குற்றமுடையது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமில்லை. என் ராச்சியதில் திருடர்கள் கிடையாது! குடிகாரர்கள் கிடையாது! ஆசாரமற்ற ஆண்கள் கிடையாது! அதனால் ஆசாரமற்ற பெண்களும் கிடையாது! என்றார்.

அதற்கு அந்த ரிசிகள்,  “ நாங்கள் இங்கே உங்களுடைய உணவை உட்கொள்வதற்காக வரவில்லை. ஜீ(சீ)வாத்மா, பரமாத்மா பற்றிய எங்களுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகவே உங்களிடம் வந்திருக்கிறோம். என்று தெரிவித்தார்.
உடனே அசுவபதி மகாராசா, ” இன்று உணவு அருந்துங்கள். நாளைக்கு அதைப்பற்றி யோசிக்கலாம்” என்று தெரிவித்தார். முனிவர்களும் அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு உணவு அருந்தினார்கள்.
அதன்பிறகு அவர்கள் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று தங்களுக்குள் உரையாட ஆரம்பித்தனர்.
அப்போது முனிவர்களுள் ஒருவர், “அசுவபதி மன்னர் நாளைக்கு இதைப் பற்றி யோசிக்கலாம் என்றுதான் கூறினாரே தவிர, பதில் சொல்கிறேன் என்று சொல்லவில்லையே!” என்றார் அவர் அவ்விதம் கூறியதும், மகாராசா இப்படிச் சொன்னதற்குக் காரணம் என்னவாக இருக்கும்!” என்று முனிவர் அனைவரும் தங்களுக்குள் யோசிக்க ஆரம்பித்தனர். அப்போது மகரிசி உத்தாலகருக்குப் பளிச்சென்று காரணம் புரிந்தது.
உடனே அவர் மற்ற முனிவர்களைப் பார்த்து, ”நாம் எல்லோரும் ரிசிகள். நன்றாக விவரம் தெரிந்தவர்கள். அப்படியிருந்தும் ஒரு விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றார். எந்த விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று மற்ற முனிவர்கள் வினவினார்கள்.

உத்தாலகர் விளக்கம் கூறினார் – நம்முடைய சந்தேகத்தை மன்னர் அசுவபதியிடம் கேட்கவேண்டிய முறையில் நாம் கேட்கவில்லை.நாம் உயர்ந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு அவரிடம் விளக்கம் கேட்டது சரியில்லை” என்றார் உத்தாலகர்.
அவர் கூறியதைக் கேட்டபிறகுதான் முனிவர்களுக்குத் தாங்கள் செய்த தவறு புரிந்தது. மறுநாள் முனிவர்கள் அனைவரும் அசுவபதியிடம் சென்றார்கள்.  ஒரு சீடன் எப்படி குருவை நாடிப் போகவேண்டுமோ, அந்த முறையில் பணிவோடு, முறைப்படி அசுவபதியை வணங்கி தங்கள் சந்தேகத்தைக் கேட்டார்கள்.  
அவரும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சரியான விளக்கம் கொடுத்தார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எதையும் கேட்கவேண்டிய முறைப்படி கேட்கவேண்டும் என்பதுதான்!
ஒரு விசயத்தை எடுத்துச்சொல்பவர் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும். கேட்டுத்தெரிந்துகொள்பவர் தாழ்ந்த இடத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் கேட்பர் அக்கறையாகக் கவனித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும். இது கௌரவப் பிரச்சினை இல்லை.

( இன்று பாடம் கேட்பவர் அமர்ந்துகொண்டும், பாடம் சொல்லித்தருபவர் நின்றுகொண்டும் இருப்பதை அன்றைய கல்வி முறையோடு ஒப்பிட்டுக் காணும்போது, பெரியவர்கள் ஏன் அடிக்கடி நான் அந்தக்காலத்துல படித்தவன் என்று சொல்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது.)

தொடர்புடைய இடுகை

அந்தக் காலத்து எட்டாவது

16 கருத்துகள்:

 1. #ஒரு விசயத்தை எடுத்துச்சொல்பவர் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும். கேட்டுத்தெரிந்துகொள்பவர் தாழ்ந்த இடத்தில் இருக்கவேண்டும்.#
  இதைப் போலவே ரிசிகள் மன்னரிடம் சென்று விளக்கம் பெறுவது என்பதும் சரியா என்று தோன்றவில்லை !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி இதில் என்னவென்றால் அறிவு என்பதற்கு இடம், ஏவல், இல்லை...அவரது பதவி பொருள் இல்லை......அது தெருவில் போகும் யாசிப்பவராக இருந்தாலும், அவரிடமிருந்தும் நாம் கற்க முடியும்தானே......அப்போது அவர் குரு, நாம் மாணவர்தான்.....நமது வாழ்வில் நாம் யாரிடமிருந்து கற்றாலும், அந்த விடயத்திற்கு, அந்த நேரத்தில் அவர் குரு, நாம் மாணவர் தான் என்பது எமது தாழ்மையான கருத்து.

   நீக்கு
  2. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பர்களே.

   நீக்கு
 2. நல்ல கருத்து ஐயா! நிச்சயமாக ஆசிரியரிடம் மாணவர்கள் கற்கும் போது அந்த அறிவைப் பெற பள்ளத்தாகு போல் இருக்க வேண்டும்...அப்போதுதான் அறிவு வெள்ளம் பள்ளத்தாக்கை நோக்கிப் பாயும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

   நீக்கு
 3. மிக அருமையான கருத்துள்ள பதிவு! குருவை வணங்கி கேட்க வேண்டும் என்று சிறப்பாக சொன்னது பதிவு!

  பதிலளிநீக்கு
 4. குருவை மதிக்கவேண்டும் என்பது சரி! ஆனா உயர்ந்த இடம் உள்ளத்தில் தான் இருக்கனுகிறது என் தனிப்பட்ட கருத்து! மாணவரை மையபடுத்தும் உளவியல் இன்னும் சிறந்த கல்வியை தருமே!

  பதிலளிநீக்கு
 5. சிறந்த அறிவூட்டல் பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 6. தனக்கெனத் தனி தன்மை உடையவர் தென்கச்சியார்! நன்றி!முனைவரே!

  பதிலளிநீக்கு
 7. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி புலவரே

  பதிலளிநீக்கு
 8. இது முனிவர்கள் கதையாக இருந்தாலும் நடைமுறை வாழ்வில் மனிதன் படித்துக்கொள்ள வேண்டிய விசயம்தான் முனைவரே,,, தங்களைப்பாராட்ட எனக்கு பக்குவம் போதாது ஆகவே நன்றி.
  முனைவரே நேரமிருப்பின் எனது பதிவு ''சுட்டபழம்'' காண்க,,,

  பதிலளிநீக்கு